சூ டாங்க்போ என்பவர் சீனாவிலுள்ள மிகப் பெரிய கவிஞரும், கட்டுரை எழுதுபவரும் ஆவார். அவர் நாடு கடத்தப்பட்டிருந்த போது, முழு நிலவைப் பார்த்த போது, தன்னுடைய சகோதரனை நினைத்து, ஒரு பாடல் எழுதினார். “நாம் மகிழ்ச்சியடைகின்றோம் வருத்தப்படுகின்றோம், சேகரிக்கின்றோம் விட்டுவிடுகின்றோம், அப்படியே நிலாவும் வளர்கின்றது, தேய்கின்றது. காலம் செல்லும் போது, எதுவுமே நேர்த்தியாக இருப்பதில்லை” என்று எழுதினார். “நாம் நேசிப்பவர்கள் நீண்ட நாட்கள் வாழ்வார்களாக, இந்த அழகிய காட்சியை நாம் இருவரும், ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருந்தாலும், ரசிக்கின்றோம்” என்று எழுதினார்.
அவர் எழுதிய இப்பாடலின் கருத்தை நாம் பிரசங்கி புத்தகத்தில் காண்கின்றோம். போதகர் என்று அழைக்கப்படும் அதன் ஆசிரியர் (1:1), “அழ ஒரு காலமுண்டு, நகைக்க ஒரு காலமுண்டு,………………..தழுவ ஒரு காலமுண்டு, தழுவாமலிருக்க ஒரு காலமுண்டு (வ.3:4-5) என்பதைக் காண்கின்றார். இரண்டு எதிர் எதிரான காரியங்களை இணைத்துக் கூறும் ஆசிரியர், சீன கவிஞரைப் போன்று, எல்லா நல்ல காரியங்களும் கண்டிப்பாக ஒரு முடிவிற்கு வரும் என்று கூறுகின்றார்.
இவ்வுலகில் எதுவுமே நிலையானது அல்ல, என்பதற்கு அடையாளம், தேய்பிறை மற்றும் வளர் பிறை என்கின்றார். தேவன் உருவாக்கிய இந்த உலகத்தில் அனைத்துப் படைப்புகளையும் தன் வார்த்தையால் உருவாக்கினார். தேவன் தான் படைத்த யாவற்றையும் பார்க்கின்றார், “அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்” (வ.11).
வாழ்வில் எது நடக்கும் என்பதை நம்மால் கூறமுடியாது. சில வேளைகளில் வேதனை தரும் பிரிவுகளாலும் நிறையலாம். ஆனால் அனைத்துமே தேவனுடைய கண்காணிப்பில் தான் நடைபெறுகின்றது என்பதை மனதில் கொள்வோம். நம்முடைய வாழ்வை மகிழ்ச்சியோடு தொடர்வோம், அதில் ஏற்பட்ட மகிழ்ச்சி மற்றும் கெட்ட காரியங்களை பொக்கிஷமாக வைத்துக் கொள்வோம், ஏனெனில், நம்முடைய அன்பு தேவன் நம்மோடு இருக்கின்றார்.
நம் வாழ்வின் எதிர்பாராத காரியங்களை நம்மால் முன் கணிக்க முடியாத காரணத்தால், எவற்றைக் குறித்து நீ பயப்படுகின்றாய்? நீ புதிய நட்புகளை உருவாக்கிக் கொள்ளும் போதும், உறவுகளை இன்னும் ஆழப்படுத்திக் கொள்ளும் போதும், தைரியத்தைப் பெற்றுக் கொள்ள இயேசுவை எப்படிச் சார்ந்து கொள்ளப் போகின்றாய்?
அன்புள்ள பிதாவே, என் வாழ்வில் எல்லா காரியங்களையும் நீர் கவனித்துக் கொண்டிருப்பதற்காக உமக்கு நன்றி கூறுகின்றேன். உம் மீதுள்ள நம்பிக்கையோடு, நீர் தந்த என் வாழ்வில் மகிழ்ந்திருக்க எனக்கு உதவியருளும்.