தன்னுடன் பணிபுரியும் தருணுடன் ஒரு செயல் திட்டத்தை செய்யும்படி கட்டாயப்படுத்தப்பட்ட அசோக், ஒரு பெரிய சவாலைச் சந்தித்தான். அசோக்கும் தருணும் எப்போதுமே எதிர் எதிரான எண்ணங்களைக் கொண்டவர்களாகையால், இதனை எப்படி செய்ய முடியும் என்று மலைத்தனர். இருவரும் மற்றவரின் கருத்துக்களை மதிப்பவர்களாக இருப்பினும், அவர்கள் இருவரின் அணுகு முறைகளும் வேறுபட்டிருப்பதால், பிரச்சனை மிக அருகில் இருக்கின்றது என்பதை உணர்ந்து கொண்டனர். முரண்பாடுகள் தோன்றுவதற்கு முன்பு, அந்த இருவரும் தங்களுடைய வேறுபட்ட கருத்துகளைக் குறித்து, தங்களுடைய மேலாளரிடம் கூறினர், அவர், இருவரையும் வெவ்வேறு குழுக்களில் போட்டார். அது ஒரு புத்திசாலித்தனமான முடிவு. அன்று, அசோக் ஒரு பாடத்தைக் கற்றுக் கொண்டான்: ஒன்றாக இணைந்திருப்பது என்பது எப்பொழுதும் இணைந்து வேலை செய்ய வேண்டும் என்பதைக் குறிப்பதில்லை.
இந்த உண்மையை ஆபிரகாமும் உணர்ந்திருக்க வேண்டும். பெத்தேலில் இருந்த அவனும் லோத்துவும் வெவ்வேறு வழிகளைத் தெரிந்து கொள்ள வேண்டும் என ஆலோசனை கூறினான் (ஆதி.13:5-9). அவர்கள் இருவரின் மந்தைகளுக்கும் போதிய இடம் இல்லை என்பதை அறிந்த ஆபிரகாம், புத்திசாலித்தனமாக அவர்களின் கூட்டு வாழ்க்கையைப் பிரிக்க ஆலோசனை கூறுகின்றான். முதலில், அவன் “நாம் சகோதரர்” என்பதை வலியுறுத்துகின்றான் (வ.8), லோத்துவிற்கு தன்னுடைய உறவினை நினைவு படுத்துகின்றான். பின்னர், மிகப் பெரிய தாழ்மையைக் காட்டுகின்றான், தன்னுடைய உறவினனான லோத்து முதலாவது தேர்ந்தெடுக்கட்டும் (வ.9) என்று விட்டு கொடுக்கின்றான். ஆபிரகாம் மூத்தவனாக இருந்த போதும், ஒரு போதகர் குறிப்பிட்டதைப் போன்று, “மனம் ஒன்றிய பிரிவினை” க்கு வழிவகுக்கின்றார்.
நம் ஒவ்வொருவரையும் தேவன் தனித்தனி திறமைகளோடு படைத்துள்ளதால், நாம் தனித்து செயல் பட்டால், அந்த இலக்கினை சிறப்பாக அடைய முடியும் என நினைக்கக் கூடும். வேறுபாடுகளிலும் ஒரு ஒற்றுமை உண்டு. நாம் தேவனுடைய குடும்பத்தில் சகோதரரும் சகோதரிகளுமாக இருக்கின்றோம். நாம் காரியங்களை வெவ்வேறு வகையில் தான் செய்ய முடியும், ஆனாலும் நாம் ஒருமித்து ஒரே நோக்கத்திற்காக செயல்படுவோம்.
'மனம் ஒருமித்து பிரிதல்" என்பதில் தாழ்மை எவ்வாறு உதவிசெய்கின்றது? உன்னால் ஒத்துக் கொள்ளக் கூடாத காரியமாக இருப்பினும், ஒரு நோக்கத்திற்காக, அவர்களோடு எப்படி ஒருமித்து செயல்படமுடியும்? (ரோமர் 14:1-10)
தேவனே, நாங்கள் பிறரோடு இணைந்து ஒற்றுமையாக வேலை செய்ய எங்களுக்கு உதவியருளும். தனித்தனியாக பணி செய்யவது சிறந்ததாக தோன்றும் வேளைகளில், அதைத் தெரிந்துகொள்ள உதவியருளும்.