1970 ஆம் ஆண்டு, பீட்டர் வெல்ச் என்பவர் இளைஞனாக இருந்த போது, உலோகத்தைக் கண்டுபிடிக்கும் கருவி ஒன்றை பொழுது போக்காக பயன் படுத்தினார். 1990 ஆம் ஆண்டு முதல், உலோகங்களைக் கண்டிபிடிக்கும் நோக்கோடு, உலகெங்கிலும்    இருந்து வரும் மக்களை அழைத்துச் செல்வார். அவர்கள்- வாள்கள், பழங்கால ஆபரணங்கள், நாணயங்கள் என ஆயிரக்கணக்கான கண்டுபிடிப்புகளைச் செய்தனர். “கூக்குள் எயர்த்” என்ற கணினி முறையின் மூலம் துணைக் கோள் படங்களை பயன் படுத்தி, ஐக்கிய அரசாட்சியில் இருந்த நிலப்பரப்பின் பண்ணை நிலங்களின் வரைபடங்களை கண்டிபிடித்தனர். அதன் மூலம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்த சாலைகள், கட்டடங்கள், பிற கட்டுமானங்களை கண்டறிந்தனர். “பரத்திலிருந்து தேவன், நம் கண்களைத் திறக்கும் போது, ஒரு புதிய உலகையும் திறந்து காண்பிக்கின்றார்” என்கின்றார் பேதுரு.

ஏசாயா காலத்தில் இருந்த ஜனங்களுக்கும் “பரத்திலிருந்து பார்க்கக் கூடிய ஒரு கண்ணோட்டம்” தேவை. அவர்கள் தேவனுடைய     ஜனங்கள் என்பதால், அவர்கள் தங்களைக் குறித்த பெருமையைக் கொண்டிருந்தனர், ஆனாலும் கீழ்ப்படியாதவர்களாய், தங்களின் விக்கிரங்களைத் தங்களை விட்டு அகற்றவில்லை. தேவன் வேறொரு கண்ணோட்டத்துடன் அவர்களைப் பார்த்தார், அவர்கள் தனக்கு எதிராகச் செயல்பட்டாலும், தேவன் அவர்களை பாபிலோனியரின் சிறையிருப்பிலிருந்து மீட்டார். ஏன்? “என்னிமித்தம், என்னிமித்தமே……………….என் மகிமையை நான் வேறொருவருக்கும் கொடேன்” ஏசா.48:11) என்கின்றார். தேவன் நம்மைப் பார்க்கும் கண்ணோட்டம் என்னவெனின், நம்முடைய வாழ்வின் நோக்கம் நம்முடையதல்ல, நம்முடைய வாழ்வு அவருடைய மகிமைக்காகவே கொடுக்கப்பட்டுள்ளது. நம்முடைய கவனம் அவரையும், அவருடைய திட்டத்தையும் நோக்கி இருக்க வேண்டும், நம்முடைய வாழ்வு பிறரை தேவனைத் துதிக்கும் படித் திருப்ப வேண்டும்.

தேவனை மகிமைப் படுத்துவதே நம் வாழ்வின் முக்கிய கண்ணோட்டமாக இருப்பின், அது ஒரு புதிய உலகை நமக்குத் திறக்கின்றது, அவரைப் பற்றி நாம் கண்டுபிடிப்பதையும், அவர் நமக்கு வைத்திருக்கும் திட்டத்தையும் அவர் ஒருவரே அறிவார்,  நமக்கு எது நல்லது என்பதை அவர் கற்றுத் தருவார், நாம் போகவேண்டிய பாதையில் அவர் நம்மை நடத்துவார் (வ.17).