Archives: மே 2020

பிரயாணத்திற்குத் தேவையான பெலன்

ஒரு கோடை காலத்தில், என்னால் செய்து முடிக்க முடியாது என்று நான் எண்ணிய ஒருகாரியத்தை செய்து கொண்டிருந்தேன், அது ஓர் எழுதும் வேலை,  ஒரு கால வரையரையோடு கூடிய அந்த திட்டத்தை நிறைவேற்ற, அநேக நாட்களைச் செலவிட்டும் அதனை என்னால் முடிக்க முடியவில்லை, நான் மிகவும் சோர்வடைந்ததோடு, உற்சாகத்தையும் இழந்தேன். இத்திட்டத்தைக் கைவிட எண்ணினேன். அப்பொழுது ஒரு ஞானமுள்ள சினேகிதி, “எப்பொழுது கடைசியாக உன்னைப் புதிப்பித்துக் கொண்டாய்? உனக்கு ஓய்வு அவசியம், அத்தோடு ஒரு நல்ல உணவையும் நீ சாப்பிட வேண்டும்” என்றாள்.

அவள் கூறியது சரிதான் என்பதைப் புரிந்து கொண்டேன். அவளுடைய ஆலோசனை, எலியாவைக் குறித்துச் சிந்திக்க வைத்தது. அவன் யேசபேலிடமிருந்து ஒரு பயங்கரமான செய்தியைக் கேள்விப் படுகின்றான்
(1 இரா.19:2). என்னுடைய எழுதும் திட்டம், எலியா தீர்க்கதரிசியின் அநுபவத்திற்கு அருகில் வைத்து ஒப்பிடத்தகுந்தல்ல, கர்மேல் பர்வதத்தில் பொய் தீர்க்கதரிசிகள் அனைவரையும் கொன்று போட்ட போது, யேசபேல் எலியாவிடம் ஆட்களை அனுப்பி, அவனைக் கொன்றுபோடுவதாகச் செய்தி அனுப்புகின்றாள். விரக்தியடைந்த எலியா சாவை விரும்புகின்றான், ஆனால் ஒரு நல்ல தூக்கதிற்கு உள்ளாகின்றான், இரு முறை தேவ தூதன் அவனைத் தட்டி எழுப்பி அவனுக்கு ஆகாரம் கொடுக்கின்றான். தேவன் அவனுடைய சரீரத்தைப் பெலப்படுத்திய பின்பு, அவனுடைய பிரயாணத்தை அவனால் தொடரமுடிந்தது.

“நீ பண்ணவேண்டிய பிரயாணம் வெகுதூரம்” (வச. 7) ஆக இருக்கலாம், நமக்கு ஓய்வு அவசியமாக இருக்கலாம், நம்மை திருப்தி படுத்தும் சத்தான உணவு தேவைப்படலாம். நாம் களைப்படைந்தவர்களாய், பசியோடு இருக்கும் போது, ஏமாற்றத்திற்கும் பயத்திற்கும் உள்ளாக நேரலாம். ஆனால் இந்த விழுந்து போன உலகத்தில், தேவன், அவருடைய படைப்புகளின் மூலம், நம்முடைய சரீரத் தேவைகளைச் சந்திக்கும் போது, நாமும் அவருக்குப் பணிசெய்யும்படி அடுத்த அடியை எடுத்து வைக்க முடியும்.

கிரகணம்

கண்களைப் பாதுகாக்கும் உபகரணத்தோடும், வீட்டில் செய்த சில தின்பண்டங்களோடும் அந்தக் காட்சியைப் பார்க்கக் கூடிய இடத்திற்குச் சென்றேன். பல மில்லியன் மக்களோடு நானும் என்னுடைய குடும்பத்தினரும் மிக அரிதாக நடைபெறக் கூடிய முழு சூரிய கிரகணத்தைப் பார்த்தோம், சூரியனின் முழுபகுதியையும் நிலவு மறைத்தது.

கோடை காலத்தின், ஒரு பிரகாசமான மதிய வேளையில், இந்த கிரகணத்தின் காரணமாக இருள் சூழ்ந்தது. நமக்கு இந்த கிரகணம் ஒரு வேடிக்கை நிகழ்ச்சியாகவும் படைப்புகளின் மீது தேவன் கொண்டுள்ள வல்லமையை வெளிப்படுத்துவதாகவும் அமைகின்றது (சங். 135:6-7). ஆனால் சரித்திரம் முழுமையையும் பார்ப்போமாகில், பகல் வேளையில் இருள் சூழ்வதை பயத்தோடு, ஒரு விசித்திரமான நிகழ்வாகக் கருதுகின்றனர் (யாத். 10:21; மத். 27:45), இதனை, கெட்ட காரியங்கள் நடைபெறுவதற்கு ஓர் அடையாளமாகக் கருதுகின்றனர்.

இஸ்ரவேல் தேசம் இரண்டாகப் பிரிந்த போது, ஆமோஸ் தீர்க்கதரிசியும் இருளை குறித்து இவ்வாறு தான் எண்ணியிருப்பார். தேவனை அவர்கள் மறந்தால் அழிவு அவர்கள் மேல் வரும் என வடதேசத்தைக் குறித்து ஆமோஸ் தீர்க்கதரிசி எச்சரித்தார், தேவன் இதற்கு அடையாளமாக, “அந்நாளிலே நான் மத்தியானத்திலே சூரியனை அஸ்தமிக்கப்பண்ணி, பட்டப் பகலிலே தேசத்தை அந்தகாரப் படுத்துவேன்” (ஆமோ. 8:9) என்றார்.

ஆனால் தேவனுடைய மேலான நோக்கமும், விருப்பமும் என்னவெனில், எல்லாவற்றையும் சரிப்படுத்துவதே, ஜனங்கள் அடிமைகளாக இரு ந்தாலும், ஒரு நாள், தேவன் அவர்களை மீட்டு, எருசலேமுக்குக் கொண்டு வருவார், “ அதின் திறப்புகளை அடைத்து, அதில் பழுதாய்ப் போனதைச் சீர்படுத்துவேன்” (9:12) என்கின்றார்.

இஸ்ரவேலரைப் போன்று, நம்முடைய வாழ்வு, மிகஇருண்ட வேளையில் இருந்தாலும், எல்லா ஜனத்திற்கும் வெளிச்சத்தையும், நம்பிக்கையையும் கொண்டு வரும் படி தேவன் செயல் பட்டுக் கொண்டிருக்கிறார் என்பது நமக்கு ஆறுதளிப்பதாக உள்ளது (அப். 15:14-18).

நம்மைக் காண்பவர்

என்னுடைய மனைவி சமையல் அறைக்குள் நுழைந்தவுடன், “ஓ, இல்லை!” என சத்தமிட்டாள், அதே நேரத்தில், 90 பவுண்டு எடை கொண்ட “மேக்ஸ்” என்று நாங்கள் அழைக்கும் லேப்ரடார் வகை நாய் சமையல் அறையை விட்டு வெளியேறியது.

சமையல் அறை மேசையின் விழிம்பில் வைக்கப்பட்டிருந்த கறித்துண்டுகள் காணாமல் போய் விட்டன. மேக்ஸ் அதைச் சாப்பிட்டு விட்டது, வெறும் பாத்திரம் மட்டுமேயுள்ளது. மேக்ஸ் கட்டிலின் அடியில் ஒளிந்து கொள்ள முயற்சிக்கின்றது, ஆனால் அதனுடைய தலையும், தோள் பகுதிமட்டும் தான் மறைக்கப்பட்டுள்ளது, நான் அதனைத் தேடிச் சென்ற போது, அதனுடைய உடலும், வாலும் வெளியே தெரிந்து அதனைக் காட்டிக் கொடுத்து விட்டது.

“ஓ, மேக்ஸ், உன்னுடைய பாவம் உன்னைத் தொடர்ந்து பிடிக்கும்” என்றேன். இஸ்ரவேலரின் இரண்டு கோத்திரத்தாரை, தேவனுக்குக் கீழ்ப்படிந்து, அவருடைய வாக்கிற்குச் செவிகொடுக்குமாறு எச்சரித்த போது, மோசே பயன்படுத்திய வார்த்தைகள் இவை. அவன், “நீங்கள் இப்படிச் செய்யாமல் போனால், கர்த்தருக்கு விரோதமாகப் பாவம் செய்தவர்களாயிருப்பீர்கள்; உங்கள் பாவம் உங்களைத் தொடர்ந்து பிடிக்கும் என்று நிச்சயமாய் அறியுங்கள்” (எண். 32:23) என்றான்.

ஒரு கணத்திற்குப் பாவம் இனிமையானதாகத் தோன்றலாம், ஆனால் அது நம்மை தேவனிடமிருந்து பிரிக்கின்றது. மோசே இஸ்ரவேலரிடம் தேவனுக்கு மறைவானது ஒன்றுமில்லை என எச்சரிக்கின்றார். வேதாகம எழுத்தாளர் ஒருவர், “அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை; சகலமும் அவருடைய கண்களுக்குமுன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயும் இருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்க வேண்டும்” (எபி. 4:13) என்கின்றார்.

எல்லாவற்றையும் காண்கின்ற பரிசுத்த தேவன், நாம் பாவங்களை அறிக்கை செய்யும்படி அன்போடு நம்மை அழைக்கின்றார், பாவத்திற்காக மனம் வருந்தி, அதை விட்டுவிடு, தேவனோடு கூட நட ( 1 யோவா.1:9). இந்நாளிலிருந்து அன்போடு நாம் அவரைப் பின்பற்றுவோம்.

சமுதாய நினைவுகள்

அமைதியற்ற விசுவாசம் (Restless Faith) என்ற புத்தகத்தில், வேத அறிஞர் ரிச்சர்ட் மாவ் என்பவர் கடந்த காலத்தில் கற்றுக் கொண்டவற்றை நினைவில் வைத்திருப்பதின் முக்கியத்துவத்தைப் பற்றி கூறுகின்றார். சமூகவியலாளர் ராபர்ட் பெல்லா கூறிய, “சுகாதாரமான தேசங்கள் என்று கூறப்படுபவை, சமுதாய நினைவுகளைக் கொண்டுள்ளவை” என்ற கூற்றைக் குறிப்பிட்டார்.  இந்தக் கொள்கை மற்ற சமுதாய உறவுகளான குடும்பங்களுக்கும் பொருந்தும் என்கின்றார், பெல்லா. நினைவுகூருதல் என்பது சமுதாய உறவுகளில் மிக முக்கியமான பங்கு வகிக்கின்றது.

வேதாகமம் சமுதாய நினைவுகளைப் பற்றி கற்றுத் தருகின்றது. எகிப்தில் அடிமைகளாக இருந்த இஸ்ரவேலரை மீட்பதற்கு தேவன் செய்த செயல்களை இஸ்ரவேலர் நினைவு கூருவதற்காக பஸ்கா விருந்து ஆசரிக்கும் படி அவர்களுக்கு கற்பிக்கப்பட்டது (யாத். 12:1-30). இன்றுவரை, உலகெங்கிலும் உள்ள இஸ்ரவேலர், ஒவ்வொரு வசந்த காலத்திலும் இந்த முக்கியமான சமுதாய நினைவைக் கொண்டாடி வருகின்றனர்.

கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களுக்கு பஸ்கா மிகப் பெரிய அர்த்தத்தைக் கொடுக்கின்றது, ஏனெனில் பஸ்கா, மேசியா சிலுவையில் நிறைவேற்றின வேலையைக் சுட்டிக் காட்டுகின்றது. பஸ்கா ஆசரிப்பின் நாட்களில், இயேசு சிலுவையில் மரிப்பதற்கு முந்தின நாள் இரவில், அவர் தன்னுடைய நினைவாகக் கைக்கொள்ள வேண்டிய இராப்போஜனத்தை நிர்ணயித்தார். “அவர் அப்பத்தை எடுத்து, ஸ்தோத்திரம் பண்ணி, அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து; இது உங்களுக்காகக் கொடுக்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது; என்னை நினைவு கூரும்படி இதைச் செய்யுங்கள்” என்றார் என லூக்கா 22:19ல் காண்கின்றோம்.

ஒவ்வொரு முறையும் நாம் தேவனுடைய ராப்போஜனப் பந்தியைக் கொண்டாடும்படி சேரும் போது, தேவன் நம்மை பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து இரட்சித்தார், நமக்கு நித்திய வாழ்வையும் கொடுத்தார் என்பதை நினைவு கூருகின்றோம். நாம் அனைவரும் சேர்ந்து நினைவுகூரத் தகுந்தது அவருடைய சிலுவை என்பதை இயேசுவின் மீட்கும் அன்பு நமக்கு நினைவுபடுத்துவாராக.