அன்பிலே பிரிவினையா
சிங்கப்பூரின், ஒரு சர்ச்சைக்குரிய சட்டத்தைக்குறித்து, பொதுமக்களிடையே கருத்து பரிமாற்றங்கள் ஏற்பட்ட போது, அது, வெவ்வேறு கருத்துடைய விசுவாசிகளையும் பிரித்தது. சிலர் மற்றவர்களைக்குறித்து “குறுகிய மனமுடையவர்கள்” என்றனர், தங்கள் விசுவாசத்தை விட்டுக் கொடுக்கின்றனர் என்றனர்.
சர்ச்சைகள், தேவனுடைய குடும்பங்களில் பிரிவினைகளையும், மனக்காயங்களையும், மக்களிடையே மனச்சோர்வையும் கொண்டுவரும். நான், என்னுடைய சொந்த தீர்ப்புகளைக் கொடுப்பதற்கு முன்பு, வேதாகமப் போதனைகளை என்னுடைய வாழ்வில் பயன்படுத்தும்படி உணர்ந்தேன். நான் ஏற்றுக்கொள்ளாதவர்களைக் குறித்து அதிகமாக விமர்சனம் செய்த தவற்றை உணர்ந்தேன்.
நாம் ஏற்றுக்கொள்ளாத கருத்துக்கள் எவை அல்லது அவற்றை நாம் எவ்வாறு வெளிப்படுத்துகிறோம் என்பது பிரச்சனையல்ல, நாம் அவற்றை வெளிப்படுத்தும் போது நம்முடைய இருதயம் எவ்வாறு இருக்கிறது என்பதுதான் பிரச்சனை. நாம் கருத்துக்களை மட்டும்தான் ஏற்றுக் கொள்ளவில்லையா அல்லது அக்கருத்துக்குப் பின்னால் இருக்கும் மக்களையும் கிழித்தெறிய நினைக்கிறோமா?
சில வேளைகளில் தவறான போதனைகளுக்கு எதிர்த்து பேசவேண்டிய நேரம் வரும். நம்முடைய உறுதியான கருத்துகளைக் குறித்து விளக்க வேண்டிய சந்தர்ப்பம் ஏற்படலாம். எபேசியர் 4:2-6 வரையுள்ள வசனங்கள் நம்மை மிகுந்த மனத்தாழ்மையோடும், சாந்தத்தோடும், நீடிய பொறுமையோடும், அன்போடும் ஒருவரையோருவர் தாங்கி, “ஆவியின் ஒருமையைக் காத்துக்கொள்ளுவதற்கு” ஜாக்கிரதையாய் இருக்கும்படியும் வலியுறுத்துகிறது (வச. 3).
சில சர்ச்சைக்குரிய கருத்துகள் தீர்க்கப்படாமல் இருக்கலாம். ஆனால் நம்முடைய இலக்கு மக்களின் விசுவாசத்தைக் கட்டுவதேயொழிய, அவற்றைக் கிழித்தெறிவதல்ல (வ.29). நம்முடைய விவாதத்தில் மற்றவர்களை கீழேத்தள்ளி, நாம் வெற்றிபெற நினைக்கிறோமா? அல்லது நாம் தேவனுடைய உண்மையை, அவருடைய நேரத்தில், அவருடைய வழியில், புரிந்துகொள்ள தேவன் உதவும் மட்டும் காத்திருக்கப் போகிறோமா? ஒரே கர்த்தரையும், ஒரே விசுவாசத்தையும் தான் பகிர்ந்து கொள்கிறோம் (வச. 4-6) என்பதை மறவாதிருப்போம்.
உறுமும் சுண்டெலி
அநேக ஆண்டுகளுக்கு முன்பு, நானும் என்னுடைய மகன்களும் வடக்கு இடாகோவிலுள்ள, செல்வே பிட்டர்ரூட் என்ற காட்டுப்பகுதிக்குச் சென்று சில நாட்கள் அங்கு தங்கியிருந்தோம். அது கிரிஸ்லி கரடிகள் வாழும் இடம், எனவே நாங்கள், எங்களோடு கரடியை ஓட்டும் தெளிப்பான்களைக் கொண்டு வந்திருந்தோம். நாங்கள் தங்கியிருந்த இடத்தைச் சுற்றி சுத்தமாக வைத்துக்கொண்டோம். எனவே எந்த கிரிஸ்லி கரடியையும் சந்திக்க நேரிடாது என எண்ணினோம்.
ஒரு நாள், நடு இரவில் என்னுடைய மகன் ராண்டி உருண்டு கொண்டு, தன்னுடைய படுக்கும் உறையை விட்டு வெளியேற முயற்சித்துக்கொண்டிருந்தான். நான் உடனடியாக என்னுடைய டார்ச்லைட்டை அடித்து, அவன் ஏதோ ஒரு கோபமுள்ள கரடியின் பிடியில் சிக்கிக்கொண்டானோ என எதிர்பார்த்தேன்.
அங்கு, தன்பின்னங்கால்களில், நிமிர்ந்து அமர்ந்துகொண்டு, முன்கால்களின் பாதங்களை அசைத்தவாறு ஒரு வயல் எலி அமர்ந்திருந்தது, அதன் பற்களால் ராண்டியின் தொப்பியை இறுகப்பற்றிக் கொண்டிருந்தது, அது அத்தொப்பியை இழுத்து, இழுத்து ராண்டியின் தலையிலிருந்து கழற்றியது. இதனைப்பார்த்த நான் சிரித்து விட்டேன், உடனே அந்த எலி அதனைப் போட்டு விட்டு ஓடிவிட்டது. நாங்களும் எங்களுடைய தூங்கும் உறைக்குள் புகுந்தோம். நான் பதட்டத்தோடு, வஞ்சிக்கிற பிசாசுகளைக் குறித்து எண்ண ஆரம்பித்ததால், என்னால் மீண்டும் தூங்க முடியவில்லை.
பிசாசு, இயேசு கிறிஸ்துவை சோதித்ததைக் குறித்து சற்று சிந்தித்துப் பார்ப்போம் (மத். 4:1-11). அவர் தம்முடைய சோதனைகளை வேத வசனங்களைக் கொண்டு மேற்கொண்டார். ஒவ்வொரு முறை அவர் பதிலளித்தபோதும், தேவன் இவற்றைக்குறித்து என்ன கூறியிருக்கிறார் என்பதை நினைத்துப் பார்க்கிறார், அதனால் அவரால் கீழ்ப்படிய முடிந்தது. சாத்தானும் ஓடிப்போய் விடுகிறான்.
சாத்தான் நம்மை விழுங்கும்படி வகை தேடினாலும், அவனும் அந்தச் சிறிய எலியைப் போன்றே படைக்கப்பட்டவன். எனவே தான் யோவான், “உலகத்திலிருக்கிறவனிலும் உங்களில் (நம்மில்) இருக்கிறவர் பெரியவர் (1 யோவா. 4:4) என்கிறார்.
வாழ்வு கடினமாகும் போது
உடல், மனம், உணர்வு அத்தனையிலும் சோர்வடைந்தவனாய் என்னுடைய சாய்வு நாற்காலியில் சுருண்டு கிடந்தேன். தேவனுடைய வழிநடத்துதலைத் தொடர்ந்து, எங்களுடைய குடும்பத்தோடு கலிபோர்னியாவிலிருந்து விஸ்கான்சின்னுக்கு குடிபெயர்ந்தோம். நாங்கள் அங்கு வந்து சேர்ந்த போது, எங்களுடைய கார் பழுதடைந்ததால், இரண்டு மாதங்கள் கார் இல்லாமல் கஷ்டப்பட்டோம். இதனிடையே, என்னுடைய கணவனுக்கு முதுகில் நடந்த அறுவைசிகிச்சைக்குப் பின்னர், அவரால் சிறிதளவே நடமாட முடிந்தது. எனக்குள்ள வலியும் அதிகமானதால், எங்களுடைய சாமான்களை அடுக்குவதிலும் சிரமம் ஏற்பட்டது. எங்களுடைய பழைய வீட்டை விட்டு, இங்கு வந்த பின்பு அதிகமான பிரச்சனைகளை எதிர் நோக்கினோம். எங்களுடைய மூத்த நாயும் சுகவீனமானது. எங்களுடைய புதிய நாய் குட்டி, எங்களுக்கு அதிக மகிழ்ச்சியைக் கொடுத்த போதிலும், அதிக ரோமமுள்ள நாய்க் குட்டியை வளர்ப்பதிலும், எதிர்பார்த்ததைவிட அதிக வேலையினால் கஷ்டப்பட்டோம். எனக்குள் கசப்பு ஏற்பட்டது. என்னுடைய வாழ்வு கரடுமுரடான பாதை வழியே செல்லும்போது, எப்படி என்னுடைய நம்பிக்கை அசைக்கப்படாமல் இருக்க முடியும்?
நான் ஜெபிக்க அமர்ந்த போது, சங்கீதக்காரன், தன்னுடைய சூழ்நிலை எப்படியிருந்த போதிலும், தேவனைத் துதிப்பதை எனக்குக் காட்டினார். தாவீது பாதிக்கப்பட்ட போதெல்லாம், தன்னுடைய உணர்வுகளை தேவனிடம் ஊற்றுகிறார், அவருடைய சமுகத்தில் அடைக்கலம் தேடுகிறார் (சங். 16:1). தேவனே அவருடைய தேவைகளெல்லாவற்றையும் தருபவர், பாதுகாப்பவர் (வச. 5-6) என்கின்றார். அவருக்கு ஆலோசனைத் தந்த கர்த்தரைத் துதிக்கிறார் (வச. 7). “நான் அசைக்கப்படுவதில்லை” என்று உறுதியாகக் கூறுகின்றார், ஏனெனில் அவருடைய கண்கள் எப்பொழுதும் கர்த்தரையே நோக்கியிருக்கிறது (வச. 8). ஆகையால் அவருடைய இருதயம் பூரித்தது, தேவனுடைய சமுகத்தின் பரிபூரண ஆனந்தத்தைப் பெற்றுக்கொள்கிறார், அவருடைய மாம்சம் தேவனுடைய சமுகத்தில் நம்பிக்கையோடு தங்கியிருக்கும் (வச. 9-11).நாம் பெற்றுள்ள சமாதானம், தற்சமயம் எப்படி இருக்கிறோம் என்பதைப் பொறுத்ததல்ல என்பதால் மகிழ்ச்சியடைவோம், நேற்றும் இன்றும் என்றும் மாறாத தேவனுக்கு நாம் நன்றிகூறுவோம், அவருடைய பிரசன்னம் நம்முடைய உறுதியான நம்பிக்கைக்கு வழிவகுக்கின்றது.
கூண்டிலிருந்து விடுவிக்கப்பட்டோம்
எழுத்தாளரான மார்டின் லேய்ர்ட் வெளியில் நடை பயிற்சி செய்யும் போது, ஒரு மனிதன் நான்கு கெரி நீல டெரியர் வகை நாய்களைக் கொண்டு வருவதை அடிக்கடி பார்ப்பார். அவற்றில் மூன்று நாய்கள் திறந்த வெளியில் ஓடிவிடும். ஆனால் ஒன்று மட்டும் அதன் எஜமானனைச் சுற்றி சுற்றியே வருவதையும் கண்டார். ஒரு நாள் லேய்ர்ட் அதன் எஜமானனிடம், அந்த நாயின் வினோத நடத்தையின் காரணத்தைக் கேட்டார். அவர், அது பாதுகாப்பிற்காக பயிற்றுவிக்கப்பட்ட நாய், அது தன்னுடைய வாழ் நாளில் அநேக நாட்களை கூண்டிற்குள்ளேயே கழித்தது. இப்பொழுது டெரியர் கூண்டிற்குள் இருப்பதைப் போன்று எண்ணிக்கொண்டு தொடர்ந்து சுற்றி சுற்றியே வருகிறது என்றார்.
தேவன் நம்மை மீட்டுக்கொள்ளும் மட்டும் நாம் நம்பிக்கையற்றவர்களாய், பாவத்தில் சிக்கிக் கிடந்தோம் என வேதாகமம் குறிப்பிடுகிறது. சங்கீதக்காரன் எதிரிகளால் சூழப்பட்டப்போது, “மரணக் கண்ணிகள்” என்மேல் விழுந்தது, “மரணக் கட்டுகள் என்னைச் சுற்றிக்கொண்டது” என்கிறார் (சங். 18:4-5). எதிரிகளால் சூழப்பட்டவராக, நெருக்கப்பட்டவராக, உதவிக்கேட்டு கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகின்றார் (வச. 6). பூமியை அதிரச் செய்யும் வல்லமையோடு, “உயரத்திலிருந்து அவர் கைநீட்டி, என்னைப் பிடித்து, ஜலப்பிரவாகத்திலிருக்கிற என்னைத் தூக்கி விட்டார் (வச. 16).
இக்காரியங்களை தேவன் நமக்கும் செய்கிறார். அவர் சங்கிலிகளை உடைத்து நம்மை அடைத்து வைத்திருக்கும் கூண்டிலிருந்து விடுவிக்கிறார். அவர் விடுவித்து, சுமந்து, “விசாலமான இடத்திலே என்னைக்கொண்டு வந்து” (வச. 19) நிறுத்துகிறார். அப்படியானால், நாம் இன்னமும் சிறைக்குள் அடைபட்டுள்ளோம் என்ற எண்ணத்தோடு, சிறிய வட்டத்திற்குள்ளாகவே ஓடிக்கொண்டிருப்பது எத்தனை வருந்தக்கூடியது. அவருடைய வல்லமை நம்முடைய பயம், அவமானம், அடிமைத்தனத்தின் கட்டுகளை முறிக்கிறது. அந்த மரணக் கட்டுகளிலிருந்து தேவன் நம்மை விடுவித்தார், நாம் விடுதலையோடு ஓடுவோம்.
வெண்பனியின் அற்புதம்
பதினேழாம் நூற்றாண்டில் சர். ஐசக் நியூட்டன் ஒரு முக்கோணப்பட்டகத்தை பயன் படுத்தி, வெள்ளை ஒளியில் அடங்கியுள்ள வெவ்வேறு வண்ணங்களைப் பார்க்கும்படி உதவினார். வெள்ளை ஒளி ஒரு பொருளின் வழியாகச் செல்லும் போது, அப்பொருள் ஒரு குறிப்பிட்ட வண்ணத்தில் காட்சியளிக்கிறது என்பதையும் கண்டுபிடித்தார். ஒரு சிறிய பனிக்கட்டி, பார்ப்பதற்கு ஒளி புகக் கூடியதாக இருக்கிறது. ஆனால் அந்த பனிக்கட்டி அநேக சிறிய படிகங்களால் இணக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. அவையனைத்து படிகங்கள் வழியாக வெள்ளை ஒளி செல்லும் போது பனிக்கட்டி வெண்மையாகவே தெரிகிறது.
வேதாகமம் மற்றொரு நிறமுடைய ஒன்றினைக் குறிப்பிடுகிறது. அது பாவம். யூதா ஜனங்களின் பாவங்களைக் குறித்து ஏசாயா தீர்க்கதரிசியின் மூலமாக தேவன் வெளிப்படுத்துகின்றார். “உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும்,” “இரத்தாம்பரச்சிவப்பாயிருந்தாலும்,” என்று குறிப்பிடுகிறார். தேவன் அவற்றை “உறைந்த மழையைப்போல் வெண்மையாகும்” என்கின்றார் (ஏசா.1:18) அது எப்படியாகும்? யூதா ஜனங்கள் தங்களுடைய பாவங்களை விட்டு மனம் திரும்பி, தேவனுடைய மன்னிப்பைத் தேட வேண்டும். தேவனுடைய மன்னிப்பைப் பெற ஒரு நிரந்தர வழியை ஏற்படுத்திக்கொடுத்த இயேசுவே உமக்கு நன்றி. இயேசு கிறிஸ்து “நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவ ஒளியை அடைந்திருப்பான்” என்றார் (யோவா. 8:12). நாம் நம்முடைய பாவங்களை அறிக்கையிட்டால், தேவன் நம் பாவங்களை மன்னிக்கிறார். சிலுவையில் கிறிஸ்து நிறைவேற்றின தியாகத்தின் ஒளி நமக்குள்ளாக ஊடுருவிச் செல்கின்றது. அந்த ஒளியில் தேவன் நம்மைக் காண்கின்றார், இயேசுவைப் போல குற்றமற்றவராக நம்மையும் காண்கின்றார்.
நாம் செய்த தவறுகளின் குற்ற உணர்வினாலும், அவமானத்தாலும் நாம் உழல அவசியமில்லை, மாறாக தேவன் அருளும் மன்னிப்பைப் பற்றிக் கொள்வோம், அது நம்மை “உறைந்த மழையைப் போல வெண்மையாக்கும்.”