பதினேழாம் நூற்றாண்டில் சர். ஐசக் நியூட்டன் ஒரு முக்கோணப்பட்டகத்தை பயன் படுத்தி, வெள்ளை ஒளியில் அடங்கியுள்ள வெவ்வேறு வண்ணங்களைப் பார்க்கும்படி உதவினார். வெள்ளை ஒளி ஒரு பொருளின் வழியாகச் செல்லும் போது, அப்பொருள் ஒரு குறிப்பிட்ட வண்ணத்தில் காட்சியளிக்கிறது என்பதையும் கண்டுபிடித்தார். ஒரு சிறிய பனிக்கட்டி, பார்ப்பதற்கு ஒளி புகக் கூடியதாக இருக்கிறது. ஆனால் அந்த பனிக்கட்டி அநேக சிறிய படிகங்களால் இணக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. அவையனைத்து படிகங்கள் வழியாக வெள்ளை ஒளி செல்லும் போது பனிக்கட்டி வெண்மையாகவே தெரிகிறது.

வேதாகமம் மற்றொரு நிறமுடைய ஒன்றினைக் குறிப்பிடுகிறது. அது பாவம். யூதா ஜனங்களின் பாவங்களைக் குறித்து ஏசாயா தீர்க்கதரிசியின் மூலமாக தேவன் வெளிப்படுத்துகின்றார். “உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும்,”  “இரத்தாம்பரச்சிவப்பாயிருந்தாலும்,” என்று குறிப்பிடுகிறார். தேவன் அவற்றை “உறைந்த மழையைப்போல் வெண்மையாகும்” என்கின்றார் (ஏசா.1:18) அது எப்படியாகும்? யூதா ஜனங்கள் தங்களுடைய பாவங்களை விட்டு மனம் திரும்பி, தேவனுடைய மன்னிப்பைத் தேட வேண்டும்.                                                           தேவனுடைய மன்னிப்பைப் பெற ஒரு நிரந்தர வழியை ஏற்படுத்திக்கொடுத்த இயேசுவே உமக்கு நன்றி. இயேசு கிறிஸ்து “நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவ ஒளியை அடைந்திருப்பான்” என்றார் (யோவா. 8:12). நாம் நம்முடைய பாவங்களை அறிக்கையிட்டால், தேவன் நம் பாவங்களை மன்னிக்கிறார். சிலுவையில் கிறிஸ்து நிறைவேற்றின தியாகத்தின் ஒளி நமக்குள்ளாக ஊடுருவிச் செல்கின்றது. அந்த ஒளியில் தேவன் நம்மைக் காண்கின்றார், இயேசுவைப் போல குற்றமற்றவராக நம்மையும் காண்கின்றார்.

நாம் செய்த தவறுகளின் குற்ற உணர்வினாலும், அவமானத்தாலும் நாம் உழல அவசியமில்லை, மாறாக தேவன் அருளும் மன்னிப்பைப் பற்றிக் கொள்வோம், அது நம்மை  “உறைந்த மழையைப் போல வெண்மையாக்கும்.”