அநேக வசிப்பிடங்களைப்போன்று, நாங்கள் தங்கியிருக்கும் இடத்திலுள்ளவர்களும் ஒரு வலைதளத்தை உருவாக்கி, அண்டைவீட்டார் அனைவரையும் இணைத்து பயன் படுத்திவருகின்றனர். எங்கள் சமுதாயத்தினர், எங்கள் பகுதியில் தென்படும் காட்டுச் சிங்கங்களைக் குறித்தும், காட்டுத் தீ காரணமாக இடத்தைக் காலி செய்யும்படியான கட்டளை போன்றவற்றை ஒருவருக்கொருவர் தெரிவித்தனர். குழந்தை பராமரிப்பு தேவைபட்டபோது, ஒருவருக்கொருவர் கொடுத்துக் கொள்ளவும் பயன் படுத்தினர். காணாமல் போன செல்லப் பிராணிகளை கண்டுபிடிப்பதற்கும், இது முக்கியமான மூலமாகச் செயல்படுகிறது. வலைதளத்தின் ஆற்றலால் எங்கள் பகுதியிலுள்ள அனைவரும் ஒருவரோடொருவர் இணைக்கப்பட்டுள்ளனர். ஆனால் தற்சமயம், உலகக் காரியங்களில் வேகமாக ஈடுபட்டு வரும் காரணத்தினால், இந்த பயன்பாடும் வெகுவாகக் குறைந்து வருகிறது.
அநேக ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சாலமோன் அரசன் காலத்திலும் அருகிலுள்ள ஜனங்களோடு நல்ல உறவு வைத்துக்கொள்வதை முக்கியமாகக் கருதினர். குடும்பங்களோடு நல் உறவு வைத்துக்கொள்வது என்பது ஒருவரையொருவர் தாங்கிப் கொள்ளும் முக்கிய மூலமாகக் கருதப்பட்டது. “ஆபத்துக்காலத்தில்” ஒரு நண்பனின் முக்கியமான பங்கினைக் குறித்து சாலமோன் ராஜா விளக்குகிறார் (நீதி. 27:10). உறவினர்கள் தங்கள் குடும்ப நபர்களின் மீது மிகுந்த கரிசனை கொண்டு, அப்படிப்பட்ட சூழல்களில் உண்மையாய் உதவும்படி எண்ணுவர். ஆனால் அவர்கள் தூரத்தில் இருந்தால், ஆபத்து நேரிடும் காலத்தில் அவர்களால் உதவ முடியாது. சமீபத்திலிருக்கும் அயலானே, அந்நேரத்தின் தேவை என்ன என்பதை வேகமாக உணர்ந்து, உடனடியாக உதவ முடியும்.
உலகெங்கும் பரம்பியிருக்கும் நம்முடைய நேச உறவினர்களோடு தொடர்பு கொள்வதை, நவீன தொழில் நுட்பம் இலகுவாக்கிவிட்ட காரணத்தால் அருகிலிருப்பவர்களோடுள்ள தொடர்பை நாம் தவிர்க்கும்படி தோன்றலாம். இயேசுவே, எங்களுக்கு அருகிலிருக்கும் படி நீர் தந்துள்ள மக்களோடு நாங்கள் நல்ல உறவை ஏற்படுத்திக்கொள்ள எங்களுக்கு உதவியருளும்.
உனக்குத் தேவை ஏற்பட்ட போது, யார் உனக்கு உதவும் படி வந்தார்கள்? உனக்கு மிக அருகில் இருப்பவர்களோடு எப்படி உறவை ஏற்படுத்திக் கொள்வாய்?
தேவனே, நாங்கள் ஒருவர் மீது ஒருவர் கரிசனையோடு இருக்கும்படியான அயலகத்தாரைத் தந்தமைக்காக உமக்கு நன்றி கூறுகிறேன்.