1994 ஆம் ஆண்டு, ருவாண்டா தேசத்தில், இரண்டு மாதங்களாக நடைபெற்ற இனப்படுகொலையின் போது, கிட்டத்தட்ட ஒரு மில்லியன் துட்சி இன மக்கள் கொல்லப்பட்டனர். அதே நாட்டிலுள்ள பழங்குடி மக்களான ஹூடுக்கள், இந்த படுகொலையைச் செய்தனர். இந்த படுகொலை நடந்து முடிந்த போது, பேராயர் ஜியோஃப்ரே ருவுபுஸிஸி தன்னுடைய மனைவியை அணுகி, தங்களுக்கு அருமையானவர்களை இழந்து தவிக்கும் பெண்களைச் சந்திக்குமாறு கேட்டுக்கொண்டார். அதற்கு மேரியின் பதில், “நான் விரும்புவதெல்லாம் அழுவதொன்றைத்தான்”  என்றாள். அவளும் தன்னுடைய குடும்பத்தினரை இழந்திருக்கிறாள். அந்த ஞானமுள்ள வழிகாட்டியும், கரிசனையுள்ள கணவனுமான அந்தப் பேராயர் தன் மனைவியிடம், “மேரி, அந்தப் பெண்களையெல்லாம் ஒன்றாகத் திரட்டி, அவர்களோடு அழு” என்றார். அவர் தன்னுடைய மனைவியின் வேதனையை அறிவார், அவளை மற்றவர்களின் வேதனையையும் பகிர்ந்துகொள்ளுமாறு வித்தியாசமான முறையில், அவளைத் தயாரித்தார்.

சபையாகிய தேவனுடைய குடும்பத்தில் வாழ்கின்ற அனைவரும் நல்லவற்றையும், நல்லதல்லாததையும் பகிர்ந்து கொள்ள வேண்டும். புதிய ஏற்பாட்டில் வரும் “ஒருவரையொருவர்” என்ற வார்த்தை, நாம் ஒருவரையொருவர்  சார்ந்து வாழ்வதைக் காட்டுவதற்கு பயன்படுத்தப்படுகிறது. “சகோதர சிநேகத்திலே ஒருவர்மேலொருவர் பட்சமாயிருங்கள்; கனம் பண்ணுகிறதிலே ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளுங்கள். ஒருவரோடொருவர் ஏக சிந்தையுள்ளவர்களாயிருங்கள்” (ரோம. 12:10,16). நாம் ஒருவரோடொருவர் இணைக்கப்பட்டுள்ளோம் என்பதை வசனம் 15 வெளிப்படுத்துகின்றது. “சந்தோஷப்படுகிறவர்களுடனே சந்தோஷப்படுங்கள்; அழுகிறவர்களுடனே அழுங்கள்”.

இனபடுகொலையில் பாதிக்கப்பட்டவர்களின் துயரத்தைக் காணும் போது, எங்களுடைய துன்பங்களின் ஆழமும், தாக்கமும் மிகவும் லேசானது, மேரியின் வேதனையும் கூட, ஏனெனில் தேவன் நமக்குச் செய்துள்ளவற்றை நினைவுகூர்ந்து, அவற்றை அணைத்துக்கொண்டு, மற்றவர்களைத் தேற்றவும் அவர்களின் நன்மைக்காகவும் பயன் படுத்துவோம்.