பல ஆண்டுகளாக வறட்சியையும், காட்டுத் தீயையும் சந்தித்த, தெற்கு கலிபோர்னியாவில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற சில ஜனங்கள், இதனை தேவனுடைய செயல் என்று நம்புகின்றார்கள். இந்த வருந்தத்தக்க எண்ணத்தோடு, ஒரு நபரைக் குறித்துச் செய்தியாளர்கள் பரிசுத்த அக்கினி என குறிப்பிடுவதும் சேர்ந்துகொண்டது. அந்த இடம் பரிசுத்த ஜிம் பள்ளத்தாக்குப் பகுதியாகும் என்பதை அநேகர் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அப்படியானால் யார் இந்த பரிசுத்த ஜிம்? பத்தொன்பதாம் நூற்றாண்டில் அப்பகுதியில் வாழ்ந்த ஜிம், ஒரு தேனீ வளர்ப்பாளர், மதநம்பிக்கையற்றவர், யாவரிடமும் சண்டையிடும் குணமுடையவர். அப்பகுதியினர், அவருக்கு பரிசுத்த ஜிம் என கிண்டலாக, பட்டப்பெயர் சூட்டினர்.
யோவான் ஸ்நானகன் “பரிசுத்த ஆவியினாலும், அக்கினியினாலும்” என்று ஒரு ஞானஸ்நானத்தைக் குறித்து, தன்னுடைய சொந்த அநுபவத்திலிருந்து விளக்குகின்றார் (லூக். 3:16). நாம் சற்று பின்னோக்கிப் போவோமேயானால், மேசியா புடமிடுகிறவனுடைய அக்கினியைப் போல இருப்பார் (மல். 3:1-3; 4:1) என்று மல்கியா தீர்க்கதரிசி குறிப்பிடுகின்ற மேசியாவையும் அக்கினியையும் அவர் கருதியிருக்கலாம். தேவனுடைய ஆவியானவர், பலத்த காற்றையும் அக்கினியையும் போல அவருடைய சீடர்களின் மேல் இறங்கிய போதுதான், மல்கியா மற்றும் யோவான் கூறிய இரண்டும் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளதைக் காணலாம் (அப். 2:1-4).
யோவான் கூறிய அக்கினி, அவர்கள் எதிர்பார்த்ததொன்றல்ல. தேவன் உண்மையாக செயல்படும் போது, வேறு வகையான மேசியாவையும் பரிசுத்த அக்கினியையும் அறிவிக்கும் தைரியத்தைப் பெற்றார்கள். இயேசுவின் ஆவியானவர் வெளிப்படும்போது, நம்முடைய வீணான மனித முயற்சிகளெல்லாம் சுட்டெரிக்கப்பட்டு, ஆவியின் கனிகளாகிய அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம் ஆகியவற்றால் நிரப்பப் படுவோம் (கலா.5:22-23). இவற்றின் மூலமாகவே தேவன் நம்மில் செயல்பட விரும்புகின்றார்.
பரிசுத்த ஆவியானவர் உன்னில் செயல்படும் போது, உன் வாழ்வு எவ்வாறு மாறுகிறது? தேவனுக்கு முன்பாக, பரிசுத்தமாக வாழ்வது என்பது உனக்கு எப்படித் தோன்றுகின்றது?
பரலோகத்தந்தையே, பரிசுத்த ஆவியானவரைக் குறித்த பயத்தை எங்களை விட்டகற்றி, எங்களிடமுள்ள உதவாத கடின குணத்தை மாற்றி, விலையேறப்பெற்ற அன்பு, சந்தோஷம், சமாதானத்தால் எங்களை நிரப்பும்.