ஜனவரி மாதத்தில் ஒரு நாள் காலை எழுந்தபோது, அந்த நடு பனிக்காலத்தில், அநேக வாரங்களாக பார்த்துக்கொண்டிருக்கிற, அதே சோகக் காட்சியான, பனிபடர்ந்த நிலப்பரப்பையும், அதனூடே பழுப்படைந்த புற்கள் நீட்டிக் கொண்டிருப்பதையும், சாம்பல் நிற வானத்தையும், குச்சிகளாகக் காட்சிதரும் மரங்களையும் தான் காணமுடியும் என்று நினைத்தவனாக வெளியேப் பார்த்தேன். ஒரே இரவில், வித்தியாசமான ஒன்று நடந்துள்ளது. ஒரு பனிப் புயலால் வெளி முழுவதும், பனிக்கட்டிகளால் மூடப்பட்டிருந்தது. அந்த மந்தமான காட்சிகள், அழகிய காட்சியாக மாறியிருந்தது, அந்தப் பனிக்கட்டிகள், சூரிய வெளிச்சத்தில் மின்னியதோடு, என்னையும் பிரகாசிக்கச் செய்தது.

சில வேளைகளில், நமக்குள்ளே நம்பிக்கை வேண்டும் என்பதையே மறந்து விட்டுப் பிரச்சனைகளைப் பார்க்கிறோம். ஒவ்வொரு நாள் காலையும், வேதனையும், பயமும், ஏமாற்றமும் தான் நம்மைச் சந்திக்க காத்திருக்கின்றன என நாம் எதிர் பார்க்கிறோம். ஆனால் இதுவரை நடந்திராத ஒன்று நடக்கக் கூடுமென நாம் நினைப்பதேயில்லை. மீண்டும் இழந்தவற்றைப் பெற்றுக்கொள்ளல், வளர்ச்சியடைதல் அல்லது தேவனுடைய வல்லமையினால் வெற்றி பெறல் ஆகியவற்றை நாம் எதிர் பார்ப்பதேயில்லை. நம்முடைய கஷ்ட வேளைகளை கடந்து செல்வதற்கு தேவன் நமக்கு உதவுகின்றார் என வேதாகமம் கூறுகின்றது. உடைந்த உள்ளங்களை அவர் சரிசெய்கின்றார், அடிமைத்தனத்திலிருப்போரை விடுவிக்கிறார், துயரத்திலிருப்போரைத் தேற்றுகிறார், “சாம்பலுக்குப் பதிலாகச் சிங்காரத்தையும், துயரத்துக்குப் பதிலாக ஆனந்த தைலத்தையும், ஒடுங்கின ஆவிக்குப் பதிலாக துதியின் உடையையும் கொடுக்கிறார்” (ஏசா. 61:3).

நாம் பிரச்சனையில் இருக்கும் போது, நம்முடைய தேவன், நம்மை மகிழ்ச்சியாக்க விரும்ப மாட்டாரா? நம்முடைய சோதனைகளின் மத்தியில் அவரே நமது நம்பிக்கையாய் இருக்கிறாரல்லவா? நாம் முழுமையான விடுதலையைப் பெற நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டியதாயிருந்தாலும், தேவன் நம்மோடு இருக்கின்றார், நம்மை ஊக்கப்படுத்துகின்றார், அடிக்கடி தம்மை, நமக்கு வெளிப்படுத்துகின்றார். என்னுடைய வாழ்க்கைப் பயணத்தில், “என்னுடைய ஆழ்ந்த காயங்களின் வழியாக உம்முடைய மகிமையைக் கண்டேன், அது என்னையும் பிரகாசிப்பித்தது” என்ற தூய அகஸ்டினின் வார்த்தைகளைப் புரிந்துகொள்வோம்.