நான் பல ஆண்டுகளாக அநேக பழைய பானைகளைச் சேகரித்துள்ளேன். அதில், ஆபிராகாம் வாழ்ந்த காலத்தில் உள்ள ஒரு பகுதியிலிருந்து தோண்டி எடுக்கப்பட்ட ஒரு பானை, எனக்கு மிகவும் பிடித்தமானது. எங்கள் வீட்டிலுள்ள பானைகளில் குறைந்தது ஒன்றாகிலும் என்னுடைய வயதைக் காட்டிலும் அதிகமானதாக இருக்கும்! அதில் பார்க்கக் கூடியதாக ஒன்றுமிராது, அவை கறை பிடித்ததும், கீரல் விழுந்ததும், உடைந்ததுமாக இருக்கும். அவைகளை நன்கு தேய்த்து எடுக்க வேண்டும். நானும் மண்ணினாலேயே உருவாக்கப்பட்டேன் என்பதை நினைத்துக் கொள்ளவே அவற்றை வைத்துள்ளேன். நான் உடையக் கூடியதும், பெலவீனமான பானையாக இருந்த போதும், எனக்குள் விலையேறப் பெற்ற செல்வமாகிய இயேசுவைச் சுமக்கிறேன். “இ ந்த பொக்கிஷத்தை (இயேசுவை) மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம்” 2 கொரி.4:7)

மேலும் பவுல், “நாங்கள் எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப் போகிறதில்லை; கலக்கமடைந்தும் மன முறிவடைகிறதில்லை; துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுகிறதில்லை; கீழே தள்ளப்பட்டும் மடிந்து போகிறதில்லை” (வ.8-9). என்கின்றார். நெருக்கப்படல், கலக்கமடைதல், துன்புறுத்தப்படல், கீழே தள்ளப்படல் ஆகிய இந்த அழுத்தங்களை அந்தப் பானை தாங்க வேண்டும். ஒடுங்குவதில்லை, மனமுறிவதில்லை, கைவிடப்படுவதில்லை, மடிந்து போவதில்லை என்பன, நமக்குள்ளேயிருக்கும் இயேசு  இவற்றிற்கெதிராக நம்மை பெலப்படுத்தும் விளைவுகளாகும்.

 “இயேசுவின் மரணத்தை எப்பொழுதும் எங்கள் சரீரத்தில் சுமந்து திரிகிறோம்” (வ.10) இது, இயேசு நமக்காக அனுதினமும் மரித்தார் என்ற பண்பைக் காட்டுகின்றது. நம்முடைய சுய முயற்சியை மனப்பூர்வமாக சாகடிக்க வேண்டும், நமக்குள்ளே வாசம் பண்ணுகின்றவரை முற்றிலும் போதுமானவராக நம்ப வேண்டும் என்கின்ற பண்பை நமதாக்கிக் கொள்ளவேண்டும்.

அப்படியானால், “கர்த்தராகிய இயேசுவினுடைய ஜீவனும் எங்கள் சரீரத்திலே விளங்கும்” (வ.!0). அதன் விளைவு என்னவெனின், ஒரு பழைய மண்பானையில், இயேசுவின் அழகு காணப்படும்.