2016 ஆம் ஆண்டு, உலகெங்குமுள்ள மக்கள் ஏறத்தாள 9800 கோடி ரூபாய்களை சாக்லேட்டுகளுக்காகச் செலவிட்டுள்ளனர் என்று கணக்கிடப்பட்டது. இத்தனை பெரும் தொகை அதிர்ச்சியைத் தருவதாக இருந்தாலும், ஆச்சரியப்படவேண்டாம். சாக்லேட் ஒரு சுவை மிகுந்த பொருள், அதனை நாம் மகிழ்ச்சியோடு சாப்பிடுகிறோம். அதன் இனிமையை உலகம் முழுமையும் அநுபவித்துள்ளது. இந்த இனிப்பிற்கு, குறிப்பிடத்தக்க சுகாதார நன்மைகளும் உள்ளன. சாக்லேட்டுகளில் ஃபிளாவனாய்டு என்ற பொருள் உள்ளது. இது, உடல் வயதாகுவதைத் தடுக்கிறது, இருதய நோய்களில் இருந்தும் பாதுகாக்கிறது. ஆனால் இதனை மருந்தாக பயன் படுத்தியதாக எங்குமே கேட்டதில்லை. (சிறிதளவு கூட!)
நாம் முதலீடு செய்வதற்கு தகுதி பெற்ற மற்றொரு இனிப்பைக் குறித்து சாலமோன் கூறுகின்றார். அது, ஞானம். அவர் தன்னுடைய மகனிடம், “தேனைச் சாப்பிடு, அது நல்லது.” (நீதி 24:13) என்கின்றார். அதனுடைய இனிமையை ஞானத்திற்கு ஒப்பிடுகின்றார். வேத வாக்கியங்களாகிய ஞானத்தை ஒருவன் உட்கொள்ளும் போது, அது அவனுடைய ஆன்மாவிற்கு இனிமையைத் தருவதோடு, உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும் பயன் படுவதோடு, “எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும்” ஆக்க உதவுகிறது. அதை நம் வாழ்வில் எப்படியாகிலும் அடைந்து விட வேண்டும். (2 தீமோ 3:16-17)
ஞானம், நம்மை சரியான தீர்மானங்கள் எடுக்க வழிநடத்துவதோடு, நம்மைச் சுற்றியுள்ள உலகைப் புரிந்து கொள்ளவும் உதவுகிறது. இதனை நாம் கண்டடையும்படி, நம் முழு முயற்சியையும் செலவளிக்கத் தகுதியானது. சாலமோன் தன்னுடைய மகனுக்கு கூறுவதைப் போன்று, நாம் நேசிப்பவர்களோடு பகிர்ந்து கொள்ளவும் உகந்தது. ஞானம் நிறைந்த வேத வார்த்தைகளை நாம் உட்கொள்ளும் போது, நமக்கு மகிழ்ச்சியைத் தருகின்றது, நம் இருதயத்திற்குத் தெவிட்டாத இனிய விருந்தாக இருக்கிறது, உண்மையில், அது நமக்கு உற்சாகமளிக்கிறது! தேவனே, உம்முடைய வேதம் தரும் இனிமைக்காக உமக்கு நன்றி கூறுகின்றேன்.
இன்றைக்கு, எந்த ஞானத்தை நீ உட்கொள்ளப் போகின்றாய்? தேவனுடைய ஞானம் எப்படி உனக்கு இனிமையைத் தருகின்றது?
தேவனே, தயவு கூர்ந்து உம்முடைய ஞானத்தால் என்னை போஷித்தருளும்.