டென்னிஸ் லெவர்டோவ், ஒரு புகழ் பெற்ற கவிஞராவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பு, அவளுடைய பன்னிரண்டாம் வயதில், புகழ் பெற்ற கவிஞரான டி.எஸ். எலியெட் என்பவருக்குத் தன்னுடைய பாடல்களை புத்திசாலித்தனமாக தபாலில் அனுப்பி வைத்தாள். பின்பு, தனக்கு ஒரு பதில் வருமெனக் காத்திருந்தாள். என்ன ஆச்சரியம்! எலியட் தன் கைப்பட எழுதிய இரண்டு பக்க ஊக்கமிகு வார்த்தைகளை அனுப்பினார். அவளுடைய  நீரோடையும் நீலக்கற்களும் (The Stream and the Sapphire) என்ற பாடல்களின் தொகுப்பிற்கு எழுதிய முகவுரையில் “கடவுள் நம்பிக்கையற்றிருந்த என் வாழ்வு எப்படி கிறிஸ்தவ நம்பிக்கைக்குள் கடந்து வந்தது” என்ற வழியை இப்பாடல்கள் காட்டுகிறது என்று எழுதியிருந்தாள். பிற்காலத்தில் அவள் எழுதிய பாடலான, (“Annunciation”) மரியாளுக்கு தேவதூதனின் வெளிப்பாடு பற்றிய பாடல், மரியாள் தன்னை தேவனுக்கு அர்ப்பணித்ததை விளக்குகின்றது. பரிசுத்த ஆவியானவர், தன்னுடைய நோக்கத்தை நிறைவேற்றும் படி, மரியாளைக் கட்டாயப் படுத்தி, தன்னுடைய ஆளுகைக்குள் கொண்டுவர விரும்பவில்லை. அவருடைய நோக்கமெல்லாம், மரியாள் விருப்பத்தோடு, கிறிஸ்துவை தன்னுடைய குழந்தையாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதே. “தேவன் காத்திருந்தார்” என்ற இரு வார்த்தைகளும் அந்தப் பாடலின் மையமாக மிளிர்ந்தன.

மரியாளின் கதையின் மூலம், லெவர்டோவ் தன்னுடைய வாழ்க்கையை உணர்ந்தார், தேவன் அவளுக்காக காத்திருக்கின்றார், அவளை நேசிக்கும்படி ஆவலாயிருக்கிறார் என்பதை உணர்ந்தாள். தேவன் எதையுமே அவளிடம் கட்டாயப்படுத்தவில்லை. அவர் காத்திருந்தார். இந்த உண்மையை ஏசாயாவும் விளக்குகின்றார். இஸ்ரவேலர் மீது தன்னுடைய அன்பை பொழியும் படி, தேவன் ஆர்வத்தோடும், எதிர்பார்ப்போடும் ஆயத்தமாக நிற்கின்றார், என்கிறார். “உங்களுக்கு இரங்கும்படி கர்த்தர் காத்திருப்பார், உங்கள் மேல் மனதுருகும்படி எழுந்திருப்பார்” (30:18). தன்னுடைய ஜனங்களின் மீது இரக்கத்தைக் கொட்டும்படி ஆயத்தமாயிருக்கின்றார், ஆனாலும் அவர்கள் முழுமனதோடு, தான் கொடுக்க விரும்புவதை ஏற்றுக்கொள்ள வேண்டுமென காத்திருக்கின்றார் (வ.19).

நம்மைப் படைத்தவர், இவ்வுலகத்தின் இரட்சகர், நாம் அவரை வரவேற்க வேண்டுமென காத்திருக்கிறார். எளிதாக நம்மை மேற்கொள்ள வல்ல தேவன், பொறுமையோடு காத்திருத்தலையே செயல் படுத்துகின்றார். பரிசுத்த தேவன், நமக்காக காத்திருக்கிறார்.