டக் மெர்க்கி என்ற  சிற்ப கலைஞரின் சிறந்த வடிவமைப்பான ஒரு சிற்பம் நம்பிக்கையற்ற நிலையிலும் விசுவாசத்தோடிருப்பதை காட்டும்படியாக உருவாக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு மனிதன், வால்நட் மரத்தால் செய்யப்பட்ட ஒரு சிலுவையை, நம்பிக்கையை இழந்த நிலையில் கட்டிப் பிடித்து, பற்றிக் கொண்டிருப்பது  போன்று அமைந்துள்ளது. அதனைக் குறித்து அவர் எழுதும் போது,” இது, நம் வாழ்வில், நாம் சந்திக்கின்ற ஒரு நிலையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. எந்த தடங்கலும் இன்றி, கிறிஸ்துவையும், சுவிசேஷத்தையும் ஆத்மீகமாக சார்ந்திருத்தலை அது காண்பிக்கின்றது.” என்றார்.

இத்தகைய ஒரு நம்பிக்கையை, தன் வார்த்தையாலும், செயலாலும் காண்பித்த, பெயர் குறிப்பிடப்படாத, ஒரு பெண்ணை மாற்கு 5:25-34 ல் காண்கின்றோம். பன்னிரண்டு ஆண்டுகளாக, அவளுடைய வாழ்வு குழப்பம் நிறைந்ததாகவுள்ளது.(வ.25) அவள்,” அநேக வைத்தியர்களால் மிகவும் வருத்தப்பட்டு, தனக்கு உண்டானவைகளையெல்லாம் செலவழித்தும், சற்றாகிலும் குணமடையாமல் அதிக வருத்தப் படுகிறபொழுது,” இயேசுவைக் குறித்து கேள்விப் படுகின்றாள், இயேசுவை நோக்கிச் செல்கின்றாள், அவருடைய வஸ்திரத்தைத் தொட்டாள், “அவளுடைய வேதனை நீங்கி, ஆரோக்கியமடைந்தாள்.” (வச. 27-29)

நீயும் உன்னுடைய நம்பிக்கையின் கடைசி எல்லைக்கு வந்து விட்டாயா ? உன்னுடைய ஆதாரங்கள் எல்லாம் செலவழிந்து விட்டனவா?  எதிர்பார்ப்பு, நம்பிக்கையின்மை, இழப்பு, மற்றும் துயரத்தில் இருக்கும் மக்கள் பதட்டம் அடைய வேண்டாம்.  வேதனையிலிருந்த இந்த பெண்ணுக்கு இரங்கியதைப் போன்றும், மெர்க்கியின் சிற்பம் வெளிப்படுத்துவதையும் போன்றும், பதட்டமிகுந்த விசுவாசத்தையும் தேவன் கனப்படுத்துகின்றார். சார்ல்ஸ் வெஸ்லியின் பாடல் கூறுவதைப் போன்று, ”அப்பா, நான் என் கரங்களை உமக்கு நேராக நீட்டுகின்றேன், வேறே எந்த உதவியும் எனக்குத் தெரியவில்லை,” என்பதான விசுவாசம் நம்மிடம் உள்ளதா? இத்தகைய விசுவாசத்தைத் தரும் படி தேவனிடம் கேள். வெஸ்லி தன் பாடலை ,”விசுவாசத்தின் காரணரே, என்னுடைய சோர்ந்து போன, ஏக்கம் நிறைந்த கண்களை உமக்கு நேராக உயர்த்துகிறேன்; ஓ, நான் இப்பொழுதே இந்த ஈவைப்  பெற்றுக்கொள்வேனாக. இல்லையென்றால், என் ஆத்துமா மரித்துப் போகுமே.” என்ற ஜெபத்தோடு முடிகின்றார்.