ஓர் இளம் தாய், தன்னுடைய மூன்று குழந்தைகளோடு விமானத்தில் பயணம் செய்தபோது, அவளுடைய மூன்று வயது பெண் குழந்தை போராடி, அழ ஆரம்பித்தது. அவளை அமைதிப்படுத்த முடியாமல் தவித்துக் கொண்டிருக்கையில், அவளுடைய நான்கு மாத பையனும் பசியால் அழ ஆரம்பித்தான். 

உடனே, அவளருகிலிருந்த பயணி, அக் குழந்தையை வைத்துக்கொள்ள முன்வந்தார். எனவே அந்த தாயார், ஜெசிக்கா, தன்னுடைய மகளை இருக்கையில் அமர்த்தி, பெல்ட் போட உதவியாக இருந்தது. பின்னர் அந்த பயணி, தான் இளம்பெற்றோராக இருந்த போது செய்தவற்றை நினைவு படுத்திக் கொண்டு, அப்பெண் குழந்தையோடு சேர்ந்து படங்களில் கலர் அடிக்க ஆரம்பித்தார், அச்சமயத்தில், அந்த தாய் தன்னுடைய குழந்தைக்கு உணவு ஊட்டினாள். அதே பயணத்தில், அடுத்த விமானத்தில் பயணிக்கும் போதும், தேவைப்பட்டால் தான் உதவுவதாக முன் வந்தார்.

“நான் தேவனுடைய கரத்தினால் இந்த இடத்திற்கு அனுப்பப்பட்டேன். நான் யாரோ ஒருவரின் அருகில் இருக்குமாறு நேர்ந்திருக்கலாம். ஆனால் தேவன், நான் இதுவரை கண்டிராத அளவு மிகச் சிறந்த நபரின் அருகிலேயே  என்னை அமரச் செய்தார்” என்று ஜெசிக்கா கூறினாள்.

அறிமுகமில்லாதவரிடமும் ஆவலோடு காட்டப்படும் இரக்கத்தை 2 சாமுவேல் 9 ஆம் அதிகாரத்தில் காண்கிறோம். சவுல் ராஜாவும், அவனுடைய மகன் யோனத்தானும் மரித்த பின்பு, அரசாட்சியைப் பிடிக்கக் கூடியவராக யாரேனும் இருந்தால், அவர்களை கொன்று போட்டு விடுவானென, சிலர் தாவீதைக் குறித்து எதிர்பார்த்திருக்கலாம். ஆனால், அவன், ”தேவன் நிமித்தம் நான் சவுலின் குடும்பத்தாருக்குத் தயை செய்யும் படி அவன் வீட்டாரில் யாதொருவன் இன்னும் மீதியாய் இருக்கிறானா? (வச. 3) என்று கேட்கிறான். அப்பொழுது, யோனத்தானின் குமாரனான மேவிபோசேத்தை தாவீதிடம் கொண்டு வருகிறார்கள். தாவீது அவனுடைய தகப்பனாகிய சவுலின் நிலத்தையெல்லாம் அவனுக்குத் திரும்பக் கொடுக்கிறான், அவனைத் தன்னுடைய சொந்த குமாரனைப் போல பாவித்து, நித்தம் தன்னுடைய பந்தியில் அப்பம் புசிக்கும் படி செய்கின்றான்.(வ.11)

தேவனுடைய அளவற்ற இரக்கத்தைப் பெற்ற நாம், சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் மற்றவர்களிடம் ஆவலோடு இரக்கத்தைக் காட்டுவோம். (கலா. 6:10)