ஒரு தம்பதியினர் தங்களுடைய கனரக வாகனத்தில், வட கலிஃபோர்னியாவின் வறண்ட பகுதி வழியே சென்று கொண்டிருந்த போது, அவர்களுடைய வாகனத்தின் டயர் வெடித்து. சக்கரத்தின் உலோகப்பகுதி சாலையின் தளத்தை உரசியதால் ஏற்பட்ட சத்தத்தைக் கேட்டனர். அதில் ஏற்பட்ட நெருப்பு பொரி, 2018 கார்ஃப்யர் என்று அழைக்கப்படும் மிகப் பெரிய காட்டுத் தீயை ஏற்படுத்தியது. அதில் 230,000 ஏக்கர் பரப்பளவு எரிந்து நாசமானது, 1000த்திற்கும் மேலான வீடுகள் தீக்கிரையாயின, அநேகர் இந்த தீயில் மரித்துப் போயினர்.

அந்த தீ விபத்திலிருந்து தப்பியவர்கள், அத்தீக்குக் காரணமாயிருந்த தம்பதியினர், துக்கத்தால் சோர்ந்திருக்கின்றனர் என்பதைக் கேள்விப் பட்டு, முகநூலில், “விரக்தியும், வெட்கமும் அடைந்த  தம்பதியருக்கு, உங்கள் அன்பையும், இரக்கத்தையும் தெரிவியுங்கள்” என்று ஓர் அழைப்பு விடுத்தனர்.. அதில் ஒரு பெண், “இந்த விபத்தில் வீட்டை இழந்த ஒருவராக, நான் இதனை எழுதுகிறேன்,  எங்கள் குடும்பத்தினரைப் பற்றியும், எங்களைப் போன்று வீட்டையிழந்த  மற்றவர்களைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும்,… விபத்துக்கள் நடக்கும். எங்களுடைய கனிவான செய்திகள் உங்களுடைய மனபாரத்தை இலகுவாக்குமென நம்புகின்றேன், நாம் அனைவரும் இணைந்து, இந்த துயரத்தைக் கடந்து செல்வோம்” என எழுதியிருந்தாள்.

நாம் குற்றவாளியாக்கப்படும் போது, நாம் மீளமுடியாத ஒன்றைச் செய்துவிட்டோம் என்ற பயம், நம்முடைய ஆன்மாவைக் கொன்று விடும். ஆனால், வேதாகமம் “நம்முடைய இருதயமே நம்மைக் குற்றவாளிகளாகத் தீர்க்குமானால், தேவன் நம்முடைய இருதயத்திலும் பெரியவராயிருந்து சகலத்தையும் அறிந்திருக்கிறார்” (1 யோவா. 3:20) எனக் கூறுகிறது. நமக்குள் மறைந்திருக்கும் வெட்கத்தைக்காட்டிலும் தேவன் பெரியவராயிருக்கிறார். நம்முடைய மன வருத்தத்திலிருந்து ஆறுதலடையும் படி, அல்லது நம்மை அரித்துக் கொண்டிருக்கிற வெட்கத்தை எடுத்துப் போடும் படி, தேவன் நம்மை அழைக்கின்றார். அவர் தரும் விடுதலையை பெற்றுக்கொள்ளலாம், “நம்முடைய இருதயத்தை அவர் சமுகத்தில் ஆறுதல் பெறச் செய்யலாம்” (வச. 19).

நாம் இவற்றைச் செய்யாமல் இருந்திருக்கலாமே என மனம் வருந்தும் காரியம் எதுவாக இருந்தாலும், நாம் அவற்றை தேவனிடம் கொண்டு வரும்படி அழைக்கின்றார். இயேசு, நம்மைப் பார்த்து புன்முறுவலோடு, சொல்கின்றார், ”உன்னுடைய இருதயம் விடுதலையைப் பெற்றுக் கொண்டது.”