எழுத்தாளர் ஹென்றி நோவென், ரஷ்யா தேசத்தில், செயின்ட் பீட்டஸ்பெர்க் என்ற இடத்தில், அதிக மணி நேரங்களைச் செலவிட்ட ஒரு காரியத்தை நினைவு கூருகின்றார். அது, ரெம்பிராண்ட் வரைந்த, மனம் திரும்பிய மகனின் படம். அந்த நாளின், பொழுது சாயும் வேளையில், இயற்கையின் ஒளி மங்கும் வேளையில், அருகிலுள்ள ஜன்னல் வழியே வரும் ஒளியின் மாற்றத்திற்கேற்றாற் போல், வெவ்வேறு காட்சிகள், அவருடைய கற்பனையில் தோன்றின. ஒவ்வொரு காட்சியும், கெட்டுப்போன மகனின் மீது தந்தை கொண்டுள்ள அன்பின் வெவ்வேறு நிலைகளை அவருக்கு வெளிப்படுத்தியது.
மாலை நான்கு மணிக்கு, அந்த படத்திலுள்ள மூன்று உருவங்களும் முன்னோக்கி நகர்வது போன்று, அவருக்கு காட்சியளித்தை விளக்குகின்றார். முதலாவது, மனந்திரும்பி, வீட்டிற்குத் திரும்பிய இளைய குமாரனை வரவேற்க, சிவப்பு கம்பளம் விரித்த தந்தையிடம், தன் கோபத்தைக் காட்டிய மூத்த மகன். நம்முடைய குடும்ப ஆஸ்தியின் பெரும் பங்கை செலவழித்துப் போட்டு, நமக்கு அவமானத்தையும், வேதனையையும் வருவித்தவனல்லவா இவன், என்கின்றான் (லூக். 15:28-30).
நோவெனின் மனதில் தோன்றிய அடுத்த இரு நபர்கள், இயேசு இந்த உவமையை கூறிய போது, அருகிலிருந்த இரு மத தலைவர்கள். இயேசு பாவிகளை நேசித்து, அவர்களோடு உறவாடிய போது, அவருக்கு பின்னாக முறுமுறுத்த நபர்கள் இவர்களே (வச. 1-2).
நோவென், இவர்கள் எல்லாரிலும் தன்னைக் கண்டார், தன்னுடைய வாழ் நாட்களை வீணாக்கிய இளைய குமாரனின் வாழ்விலும், குற்றம் கண்டுபிடிக்கும் மூத்த மகனிலும், மதத் தலைவர்களிலும், யாவரையும் ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கும் தந்தையின் உள்ளத்திலும் தன்னைக் கண்டார்.
நாம் எப்படி இருக்கிறோம்? ரெம்பிராண்ட்டின் படத்தில் நம்மை எங்காகிலும் காண முடிகிறதா? இயேசு கூறிய ஒவ்வொரு கதையும், ஏதோ ஒரு வகையில், நம்மைப் பற்றியே கூறுகிறது,
இயேசு கூறிய கதையை மீண்டும் தியானிக்கும் போது, ரெம்ப்ராண்ட்டின் படத்தை மீண்டும் பார்க்கும் போது , உன்னுடைய சிந்தனையில் என்ன வருகிறது ? படத்தின் மேல் படும் ஒளியின் திசை மாறும் போது, நம்மை அப்படத்தில் எங்கு காண்கிறோம்?
பரலோகத் தந்தையே, எங்கள் எல்லாரையும் நீங்கள் எவ்வளவு நேசிக்கிறீர்கள் என்பதை நாங்கள் காண எங்களுக்கு உதவியருளும்.