எங்களுடைய குடும்பத்தின் நபர் ஒருவர், வேறு மதத்திற்கு மாறியதால், என்னுடைய கிறிஸ்தவ நண்பர்கள், அவளை மீண்டும் இயேசுவிடம் திரும்புமாறு செய்ய, என்னை வற்புறுத்தினர். கிறிஸ்து நம்மை நேசிப்பதைப் போன்று, அவளை நேசிக்க கற்றுக் கொண்டேன், பொது இடங்களில், சிலர் அவள் அணிந்துள்ள அந்நிய உடையின் நிமித்தம், அவள் மீது எரிச்சலைக் காட்டினர், சிலர் அவளைக் கடின வார்த்தைகளால் சாடினர், தன்னுடைய வாகனத்தில் இருந்தபடியே, ஒரு மனிதன், அவளை “உன்னுடைய வீட்டிற்குப் போ! “என்று விரட்டினான், அவள் தன்னுடைய வீட்டில் தான் இருக்கின்றாள் என்பதை அறியாத சிலர் இவ்வாறு செய்தனர்.

வேற்று உடையும், நம்பிக்கையும் கொண்டுள்ள புறஜாதியினரிடம் எப்படி கனிவாக நடந்து கொள்ள வேண்டுமென மோசே தன் ஜனங்களுக்கு கற்றுக்கொடுத்தார். நீதியும், கருணையும் நிறைந்த சட்டங்களை இஸ்ரவேல் ஜனங்களுக்குக் கொடுத்தார். “அந்நியனை ஒடுக்காயாக; எகிப்து தேசத்தில் அந்நியர்களாய் இரு ந்த நீங்கள் அந்நியனுடைய இருதயத்தை அறிந்திருக்கிறீர்களே” (யாத். 23:9). தேவன் புறஜாதியினரின் மேல் கொண்டுள்ள கரிசனையை, இந்த வார்த்தைகள் காட்டுகின்றன. தூண்டப்பட்டவர்களாய், பிறரை காயப்படுத்துபவர்களுக்காகவே இந்த வார்த்தைகள் யாத்திராகமம் 22:21, லேவியராகமம் 19:33 ஆகிய இரு இடங்களில் வருகின்றது.

எனவே, நான் அந்த நபரோடு, சிறிது நேரம் செலவிட்டேன், சிற்றுண்டிச் சாலையில், பூங்காவில், நடைப்பயிற்சியின் போது, எங்கள் வீட்டு முற்றத்தில் உட்கார்ந்தும், வெவ்வேறு இடங்களிலும் அவளோடு பேசி, நான் எந்த அன்பையும், மரியாதையையும் பெற விரும்புகிறேனோ, அதை அவளிடம் காட்டினேன். இயேசு நம் மீது வைத்திருக்கும் இனிமையான அன்பை, அவளுக்கு நினைவு படுத்துவதற்கு இதுவே சிறந்த வழி. இயேசுவை அவள் தள்ளி விட்டதால், அவளை அவமானப்படுத்துவதற்குப் பதிலாக, தேவன் வியத்தகு கிருபையோடு நம் அனைவரையும் நேசிப்பது போல, அவள் மீது அன்பு செலுத்துவதே சாலச் சிறந்தது.