தீர்வுகளுக்கும் மேலான
என்னுடைய பேரப்பிள்ளைகளில் ஒருத்தி தன்னுடைய முயல் பொம்மையை எங்களுடைய நெருப்புமூட்டும் இடத்திற்கு அருகிலுள்ள கண்ணாடிக்குப் பக்கத்திலே கொண்டு போனாள். அதனால் அந்த பொம்மையின் மேலுள்ள லினென் துணியானது மிகவும் சுருங்கிப் போய் அந்த முயல் பொம்மை களையிழந்தது. கண்ணாடியும் பாதிக்கப்பட்டது. இறுதியாக, நெருப்புப் பகுதியை சீர்செய்ய வல்லுநர் ஒருவரின் ஆலோசனையின்படி, அந்தக் கண்ணாடியை புதிதானது போல் துடைத்துவிட்டோம். அதற்குப் பிறகு பஞ்சு நிரப்பப்பட்ட பொம்மைகளை அதற்கு அருகில் கொண்டு செல்வதைத் தவிர்த்துவிட்டோம்.
வேதாகமும் பல சமயங்களில் தீர்வுகளைக் கொண்டுள்ளதாக இருக்கிறது. வாழ்க்கையை எவ்வாறு எளிதாக வாழலாம் என்று கற்றுக்கொடுக்கிறது. இது உண்மையாக இருந்த போதிலும் கிறிஸ்துவை கனம் பண்ணும் வாழ்க்கையை எவ்விதம் வாழலாம் என்பதைக்குறித்து அதிகமாக போதிக்கிறது. அது மாத்திரம் இப்புத்தகத்தின் நோக்கமல்ல. மனிதனின் மிகப்பெரிய தேவையான பாவத்திலிருந்தும், தேவனிடமிருந்து நம்மைப் பரிக்கும் நித்திய ஆக்கினையிலிருந்தும் காப்பாற்றப்படுகிற மிகப்பெரிய ஒரு தீர்வினை போதிக்கிறது.
இரட்சிப்பின் வாக்குத்தத்தம் கொடுக்கப்பட்ட ஆதியாகமம் 3:15 முதல் புதிய நம்பிக்கையான புதிய வானம், புதிய பூமி (வெளி. 21:1-2) வரையிலும், தேவன், நம்மை பாவத்திலிருந்து விடுவிக்கவும், அவரோடு கூட உள்ள ஐக்கியத்தை சந்தோஷத்தோடே அனுபவிக்கவும் ஒரு நித்தியமான தேவதிட்டத்தை வைத்திருக்கிறார் என வேதாகமம் போதிக்கிறது. ஒவ்வொரு சம்பவத்திலும், ஒவ்வொரு ஆலோசனையிலும் நாம் எவ்விதம் வாழவேண்டும் என்பதை வேதாகமம் இயேசுவிற்கு நேராக நம்மை வழிநடத்துகிறது. அவரே நம்முடைய மிகப்பெரிய பிரச்சனையைத் தீர்க்கமுடியும்.
தேவனுடைய புத்தகத்தைத் திறக்கும்போதே, நாம் இயேசுவைக் குறித்தும், அவர் கொடுக்கின்ற பாதுகாப்பைக் குறித்தும், நாம் அவருடைய பிள்ளைகளாக எவ்வாறு வாழலாம் என்பதைக்குறித்தும் அறிந்து கொள்ளுகிறோம். எல்லாவற்றிற்கும் அவர் மிகப்பெரிய தீர்வினைக் கொடுக்கிறார்.
வாழ்க்கை மாறுகிறது
ஸ்டீபன் கிழக்கு லண்டனின் மோசமான பகுதியில் வளர்ந்து தன்னுடைய 10ஆவது வயதிலே குற்றவாளியானான். அவன், 'எல்லாரும் போதைப்பொருள் விற்று, ஏமாற்றுகிறவர்களாயிருந்து, கொள்ளையடித்து வாழ்பவர்களோடு சேர்ந்து வாழ்வது தான் வாழ்க்கை" எனக் கூறினான். ஆனால், அவன் இருபது வயதாகும் போது, அவன் கண்ட ஒரு கனவு அவன் வாழ்வையே மாற்றியது. 'ஸ்டீபன், நீ கொலை செய்தமைக்காக சிறைக்கு செல்லவிருக்கிறாய்", என்று தேவன் என்னிடம் கூறக்கேட்டேன். இந்த விளக்கமான கனவானது அவனுக்கு ஒரு எச்சரிப்பாக மாறி, அவனை தேவனுக்கு நேராகத் திருப்பி ஆண்டவரை ஏற்றுக்கொள்ள வைத்தது. பரிசுத்த ஆவியானவர் அவன் வாழ்வை மாற்றினார்.
ஸ்டீபன் ஒரு நிறுவனத்தை நிறுவி அதன்மூலம் விளையாட்டுப்போட்டிகளின் வாயிலாக, உள் பட்டணத்து பிள்ளைகளுக்கு ஒழுக்கம், மரியாதை மற்றும் சுத்தமான வாழ்க்கை போன்றவற்றைக் கற்றுக்கொடுத்தான். அந்தப் பிள்ளைகளோடு ஜெபித்து அவர்களைப் பயிற்றுவிப்பதின் மூலம் தேவனுடைய நாமத்திற்கு மகிமையைக் கொண்டுவந்தான். 'வழிதப்பிப்போன கனவுகளைத் திரும்பிக்கட்டுதல்" என அதற்குப் பெயரிட்டான்.
தேவனை நாடி நம்முடைய பழையவைகளை மறந்து வாழ்வோமானால்-நாமும் ஸ்டீபனைப்போல் ஆவோம். புதிய வழியான வாழ்க்கையைத் தழுவிக்கொள்ள பவுல் எபேசியருக்குக் கொடுத்த அறிவுரையின்படி நாமும் வாழலாம். நம்முடைய பழைய சுயமானது, 'ஏமாற்றுகின்ற இச்சைகளினால் பாதிக்கப்படும் பொழுது," நாம் தினந்தோறும் 'புதிய மனுஷனை தரித்துக் கொள்ளலாம்". அது தேவனுக்கு ஏற்ற அவரைப் போலாகும் சுபாவமாக மாறும் (எபே. 4:22,24). அவருடைய பரிசுத்த ஆவியானவருடைய ஒத்தாசையோடு, அவரைப் போல நம்மையும் மாற்றுவதற்கு, இந்த தொடர்ச்சியான சுத்திகரிப்பினைத் தழுவிக்கொள்ளலாம்.
ஸ்டீபன், 'என் வாழ்க்கையை மாற்றின விசுவாசமானது, ஒரு முக்கியமான அஸ்திபாரமாக எனக்கு அமைந்தது", என்று கூறுகிறார். இது உங்களுடைய வாழ்க்கையில் எவ்வாறு உண்மையாகும்?
கிருபையினால் தொடப்பட்டோம்
"சமாதானம் என்கின்ற ஆறு" என்ற புத்தகத்தின் ஆசிரியர் லீஃப் எங்கர், மூன்று பிள்ளைகளுக்குத் தகப்பனாகிய ஜெரமையா லேண்ட் என்கின்ற, பள்ளியின் வாயில் காப்போனாக பணியாற்றின ஒருவரைக் குறித்து எழுதுகிறார். அவர் ஆழமான, சில சமயங்களில் அற்புதமான விசுவாசத்தை உடையவராகக் காணப்பட்டார். அந்த புத்தகம் முழுவதும் அவருடைய விசுவாசம் பல வகைகளில் பரீட்சை பார்க்கப்பட்டது.
ஜெரமையாவின் பள்ளியானது செஸ்டர் ஹோல்டன் என்ற, தோல் வியாதி கொண்ட ஒரு சின்ன புத்தி படைத்த கண்காணிப்பாளரால் நடத்தப்பட்டது. ஜெரமையாவின் வேலையானது மிகவும் பாராட்டுக்குரியதாகவே அமைந்தது சாக்கடையிலிருந்து தெளிக்கும் கழிவுகளை குறை சொல்லாமல் சுத்திகரிப்பது, கண்காணிப்பாளர் உடைத்துப் போட்ட கண்ணாடித் துண்டுகளை பொறுமையோடு எடுத்துப் போடுவது போன்ற தன்னை வேலையை விட்டுத் துரத்துவதற்கு கண்காணிப்பாளர் மேற்கொண்ட எல்லா முயற்சிகளையும் பொறுமையோடு எதிர்கொண்டார். ஒரு நாள் எல்லா மாணவர்களுக்கும் முன்பாக ஜெரமையா குடித்திருப்பதாக பொய்யாகக் கூறி அவரை அவமானப்படுத்தி, வேலையிலிருந்து நீக்கி விட்டார். ஒரு அவமானப்படுத்தும் காட்சியாக இருந்தது.
இதற்கு ஜெரமையா எவ்வாறு பதிலளித்தார்? அவர் சட்டரீதியாக, தன்னை வேலையிலிருந்து நீக்கிய கண்காணிப்பாளரை நடவடிக்கை எடுத்திருக்கலாம். அல்லது, அவர் மேல் சுமத்தப்பட்ட பழியை ஏற்றுக்கொண்டு வெளியேறியிருக்கலாம். இவ்விதமான சூழ்நிலையில் நீங்கள் என்ன செய்திருப்பீர்களென சற்று யோசித்துப்பாருங்கள்.
'உங்கள் சத்துருக்களை சிநேகியுங்கள்" என ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கூறினார். 'உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள், உங்களை சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள், உங்களை நிந்திக்கிறவர்களுக்காக ஜெபம் பண்ணுங்கள்" (லூக். 6:27-28). இந்த சவால் கொடுக்கும் வார்த்தைகளெல்லாம் தீமையை மன்னிப்பதற்கோ, அநீதி தழைப்பதற்காகவோ கொடுக்கப்படவில்லை. மாறாக, அவைகள் நாம் தேவனைப்போல செயலாற்ற வேண்டும் (வச. 36) எனத்தீர்மானித்து, தேவன் என் விரோதியை எவ்வாறு நல்லவனாக உருவாக்க விரும்புகிறார் என்பதை அறிந்து அதற்கு நான் எவ்வாறு உதவக்கூடும்? என்ற கேள்வியை உடையவராக வாழவேண்டும். ஜெரமையா அந்தக் கண்காணிப்பாளரை பார்த்து அவர் முகத்தை தொடுகிறார். ஹோல்டன் பின்னே நகருகிறார். பிறகு, தன் கன்னங்களையும், முகநாடியையும் அதிசயத்தோடு தொட்டுப் பார்க்கிறார். தழும்புகளுளான அவர் முகம் குணமடைந்து தொட்டுப் இருக்கிறது. ஒரு சத்துரு கிருபையினால் தொடப்பட்டுள்ளார்.
எங்கள் புதிய இல்லம்
1892ஆம் ஆண்டு, அமெரிக்க ஐக்கியநாடுகளில் முதல் குடியுரிமை பெற்று எல்லிஸ் தீவுகளைக் கடந்து சென்று, தான் தங்கப்போகும் புதிய வீட்டினைக் குறித்தும், புதிய ஆரம்பத்தைக் குறித்தும் ஆனிமோர் அதிக உற்சாகத்துடன் இருந்திருப்பார். பல்லாயிரக்கணக்கானோர் அதன் வழியாகக் கடந்து சென்றிருந்தாலும், ஒரு இளம் வாலிபப் பெண்ணாக, அயர்லாந்தில் தன்னுடைய மிகக் கடினமான வாழ்க்கையை விட்டு, புதிய வாழ்க்கைக்காக வெளியேறினாள். ஒரேயொரு கைப்பையைமட்டும் எடுத்துக்கொண்டு தான்வாழப் போகும் இடத்திற்கு, பலவிதக் கனவுகளோடும், நம்பிக்கையோடும், எதிர்பார்ப்புகளோடும் வந்து சேர்ந்தாள்.
'ஒரு புதிய வானத்தையும், புதிய பூமியையும்" (வெளி. 21:1) தேவனுடைய பிள்ளைகள் காணும்பொழுது எவ்வளவு உற்சாகமும், பரவசமும் அடைவார்கள். 'பரிசுத்த நகரம், புதிய எருசலேம்" (வச. 2) என வெளிப்படுத்தின விசேஷம் சொல்லும் இடத்திற்கு நாம் செல்லுவோம். அப்போஸ்தலனாகிய யோவான் மிகவும் வல்லமையான கற்பனைகளினால் இந்த ஆச்சரியமான இடத்தைக் குறித்து விளக்குகிறார். அங்கே, 'தெளிவான ஜீவத்தண்ணீருள்ள சுத்தமான நதி, தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனத்திலிருந்து புறப்பட்டுவருகிறதை கண்டிருப்போம்.' (வெளி. 22:1). தண்ணீரானது வாழ்க்கையையும், அதன் பூரணத்தையும் குறிக்கும். அதன் காரணர் நித்திய தேவனாவார். யோவான் தொடர்ந்து, 'இனி ஒரு சாபமுமிராது (வச. 3) எனக்கூறுகிறார். அந்த அழகான, பரிசுத்தமான தேவனோடு உள்ள உறவானது, அவருக்கும் மனிதர்களுக்கும் நடுவில் முழுவதுமாக மீட்டுக் கொள்ளப்பட்டது.
தேவன் தான் நேசித்த தன் பிள்ளைகளைத் தன் குமாரனின் ஜீவனின் மூலம் கிரயத்திற்குக்கொண்டு அவர்களுக்காக ஒரு புதிய அதிசயமான வீட்டினை ஆயத்தப்படுத்தி இருக்கிறார் என்பது எவ்வளவு பெரிய, ஆச்சரியமான, நம்பமுடியாத காரியமாக இருக்கிறதல்லவா? - அவர் அங்கே நம்முடைய தேவனாக நம்மோடு கூட வசிப்பார் (21:3).