‘வாடகைக்கு குடும்பங்கள்” என்ற தொழிலானது அதிகமாக வளர்ந்து கொண்டு வருகிறது. ஏனெனில், தனிமையில் வாடும் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக சிலர் இவ்வித சேவைகளை தங்களது தோற்றத்திற்காக பயன்படுத்தி, தாங்கள் ஒரு மகிழ்ச்சியான குடும்பத்தை உடையவர்களாகத் தங்களைக் காட்டிக் கொள்ளுகிறார்கள். சிலர் நடிகர்களை வாடகைக்கு அமர்த்தி மாயையான உறவுகளின் தோற்றத்தினை உருவாக்கிக் கொள்ளுகிறார்கள். இதன்மூலமாக அவர்கள் தாங்கள் விரும்புகிற உறவுகளைப்;பெற்றுவிட்டதாக நினைக்கிறார்கள்.

இந்த காரியமானது ஒரு அடிப்படை உண்மையை வெளிப்படுத்துகிறது : மனிதர்கள் உறவுகளுக்காக உருவாக்கப்பட்டிருக்கிறார்கள். சிருஷ்டிப்பின் கதையை ஆதியாகமத்தில் நாம் வாசிக்கும்பொழுது, தேவன் தாம் உருவாக்கின ஒவ்வொரு காரியத்தையும் கண்டு அவைகள் நல்லவை என்று கண்டார் (1:31). ஆனால், தேவன் ஆதாமைக் குறித்து சொல்லும்போது, ‘மனிதன் தனிமையாயிருப்பது நல்லதல்ல” (2:18) என்று கூறுகிறார். ஒரு மனிதனுக்கு இன்னொரு மனிதன் தேவை.

வேதாகமம், சாதாரணமாக நம்முடைய தேவை உறவுகள் என்றுமட்டும் கூறவில்லை. அது இவ்வித உறவுகளை நாம் எங்கே கண்டுபிடிக்கவேண்டும், அதுவும் இயேசுவைப் பின்பற்றுபவர்களின் உறவுகளை எவ்விதம் பெறமுடியும் என்றும் கூறுகிறது. இயேசுவானவர் தன் மரணத்தின் போது அவருடைய நண்பரான யோவானிடம் தன் தாயை அவருடைய தாயாக்கிக் கொள்ளும்படி கூறுகிறார். அவர்கள் குடும்பமாக தங்களை இணைத்துக்கொண்டு, இயேசுவானவர் போன பிறகும் வாழவேண்டும் என விரும்பினார் (யோவா. 19:26-27). பவுலும், மற்றவர்களை பெற்றவர்களாகவும், கூடப்பிறந்தவர்களாகவும் நினைக்க வேண்டும் எனக் கூறுகிறார் (1 தீமோ. 5:1-2). தேவனுடைய மீட்பின் பணியானது, ‘தனிமையானவைர்களைக் குடும்பமாக்குவது” தான் என்பதை சங்கீதக்காரன் நமக்கு சொல்லுகிறார் (சங். 68:6). தேவன் இந்த காரியத்தினைச் செய்ய சிறந்த இடமாகத் திருச்சபையை உருவாக்கினார். உறவுகளை நமக்குக் கொடுத்து, தம் பிள்ளைகளை நமக்கு குடும்பமாக கொடுத்த தேவனுக்கு நன்றி.