வலியோடு ஏற்படுகின்ற தீமையானது மூடி மறைக்கப்பட்ட நிலையிலிருந்து, வெளியரங்கமாயிருக்கிறது. அது ஆதிக்கத்திலிருக்கிற ஆண்மக்களின் பாலியல் வன்கொடுமை அநேக பெண்களை பாதித்த விஷயம் தான். ஒவ்வொரு முறை தலைப்புச் செய்தியாக இவைகளை வாசிக்கும்போது, இரண்டு ஆண்களின் பாலியல் கொடுமைகள் நிரூபிக்கப்பட்டதைக் கேட்டபொழுது என் இருதயம் துக்கத்தில் மூழ்கியது. திருச்சபைகளும் இவ்வித பிரச்சனைகளால் பாதிக்கப் பட்டுத்தான் இருக்கின்றன. தாவீது இராஜா, இவ்விதமான அவருடைய சொந்த பிரச்சனைகளை சந்தித்தார். ஒரு நாள் மாலை, ஒரு பெண் குளிப்பதை தாவீது கண்டார் (2 சாமு. 11:2). தாவீதுக்கு அவள் தேவைப்பட்டாள். பத்சேபாள், தாவீதின் உண்மையுள்ள வேலைக்காரனின் (உரியா) மனைவியாக இருந்த

போதிலும் தாவீது அவளை எடுத்துக்கொண்டான். பத்சேபாள் தான் கர்ப் பவதியானத்தைக் குறித்து தாவீதுக்கு சொல்லியனுப்பினபோது, தாவீது குழப்பமடைந்தார். இந்த இழிவான துரோகத்தினை, யோவாபை வைத்து உரியாவை போர்முனையில் கொலை செய்ய ஒழுங்கு செய்தான்.

பத்சேபாளுக்கும் உரியாவுக்கும் எதிரான தாவீதின் அதிகார துஷ்பிரயோகமானது மறைக்கப்படவில்லை. இது வெளிப்படையாகத் தெரிந்தது. நாம் பார்க்கும்படியாக சாமுவேல் இதைத் திட்டவட்டமாக வெளிப்படுத்தினார். நம்முடைய தீமைகளை நாம் சரியான முறையில் தீர்க்க வேண்டும்.

மேலும், இவ்வகையான கதைகளை நாம் கேட்கும்பொழுது, அவைகள் நம்மை நம்முடைய நாட்களில் ஏற்படும் துஷ்பிரயோகத்தைக் குறித்து நம்மை எச்சரிக்கை செய்யும். ‘தேவனுடைய இருதயத்திற்கு ஏற்றவன்” (அப். 13:22) என்ற பெயர் பெற்ற தாவீது தன் செயல்களுக்கான கணக்கினை ஒப்புவிக்கக் கூடியவராகவும் இருந்தார். நாமும் ஜெபத்தோடு நம் தலைவர்கள் அதிகார துஷ்பிரயோகத்திற்கான கணக்கினை ஒப்படைக்கும்படி செய்யவேண்டும். தேவனுடைய கிருபையால், மீட்பானது கிடைக்கும். நாம் தொடர்ந்து வாசிக்கும்பொழுது, தாவீதின் உண்மையான மனந்திரும்புதலை சந்திக்கிறோம் (2 சாமு. 12:13). நல்லவேளை, கடின இருதயங்களெல்லாம் மரணத்திலிருந்து, ஜீவனுக்குத் திரும்பக்கூடிய வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.