2017 ம் ஆண்டு, அமெரிக்க ஐக்கிய நாடுகளின் மிகப்பெரிய சூறாவளியின் பின் விளைவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வாய்ப்பு கிடைத்ததால் ஒரு குழுவாக ஹியூஸ்டன் நகருக்குப் பயணித்தோம். எங்களுடைய இலக்கு, புயலினால் பாதிக்கப்பட்ட மக்களை உற்சாகப்படுத்துவது தான். அவர்களின் உடைந்துபோன ஆலயம் மற்றும் சிதைந்து போன வீடுகளின் மத்தியில் அவர்களைக் காணும்போது எங்களது விசுவாசமே ஆட்டம் கண்டது.

இந்த விதமான கடினமான சூழ்நிலையில் ஹார்வே நகர மக்கள் வெளிப்படுத்தின பிரகாசமான விசுவாசமானது, கி.மு. ஏழாம் நூற்றாண்டின் இறுதியில் ஆபகூக் வெளிப்படுத்தின விசுவாசத்தினை நமக்குக் காட்டுகிறது. தீர்க்கதரிசியானவர் கடினமான காலங்கள் வரப் போகிறது என்பதை முன்னறிவித்தார் (1:5-2:1). காரியங்கள் நலமாவதற்கு முன்னே, அவைகள் மிகவும் மோசமடையப் போகின்றன. அந்தத் தீர்க்கதரிசனத்தின் இறுதியில், அவர் பூலோக இழப்புகளைச் சுற்றி தன் சிந்தனைகளை செலுத்திய, பிறகு ‘இருப்பினும்” என்ற வார்த்தையை உபயோகிக்கிறார். மூன்று வகையான தோற்றத்தை உருவாக்குகிறது. ‘அத்திமரம் துளிர் விடாமற்போனாலும்… ஒலிவமரம் பலனற்றுப் போனாலும்… தொழுவத்திலே மாடுகள் இல்லாமற்போனாலும்… மந்தையில் முதலற்றுப் போனாலும்” (3:17).

இயற்கைப் பேரழிவு அல்லது பிரியமானவர்களின் மரணம், சுகத்தை அல்லது வேலை இழத்தல் போன்ற கற்பனைக்கெட்டாத இழப்புகளை நாம் சந்திக்கும் பொழுது நாம் எந்த நிலையில் நின்று அவைகளை மேற்கொள்ளுகிறோம்? ஆபகூக்கின் ‘கடினமான காலங்களின் கீதங்கள்” நம்மை தேவன்மேல் உறுதியான விசுவாசத்தையும், நம்பிக்கையையும் வைக்க அழைக்கிறது. அவரே நம்மை மீட்கக்கூடிய காரணர் (வச. 18) பெலன், உறுதிப்படுத்துகிறவர் (வச. 19). நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர். இறுதியாக, அவரை நம்புகிறவர்கள் ஏமாற்றம் அடையமாட்டார்கள்.