பெஞ்சமின் வெஸ்ட் ஒரு சிறுவனாக இருந்தபோது தன் சகோதரியின் படத்தை வரைய முற்பட்டான். ஆனால் அவனால் அதை சிறப்பாக வரையமுடியவில்லை. ஆனால் அவனுடைய அம்மா அவன் வரைந்த ஓவியத்தைப் பாராட்டி அவன் நெற்றியில் முத்தமிட்டார்கள். பிற்காலத்தில், அந்த முத்தமே அவரை ஒரு சிறந்த ஓவியனாக உருவாக்கினது என சாட்சி கூறினார். அவர் அமெரிக்காவின் சிறந்த ஒரு ஓவியனாக மாறினார். உற்சாகப்படுத்துதல் என்பது ஒரு வலிமையுள்ள ஆயுதம்.

ஒரு பிள்ளை வரையக் கற்றுக்கொள்ளுவது போல பவுலுக்கும் அவருடைய ஊழியத்தில் அந்தக் காலத்தில் போதுமான அனுபவம் கிடையாது. ஆனால், பர்னபாஸ் பவுலின் அழைப்பைக் குறித்து உறுதியாக இருந்தார். பர்னபாவின் உற்சாகப்படுத்துதலின் மூலமே, சபையானது சவுலை ஒரு சக விசுவாசியாக ஏற்றுக்கொண்டது (அப். 9:27). பர்னபாவும் அந்தியோகியாவிலுள்ள வளர்ந்துவரும் திருச்சபையை உற்சாகப்படுத்தி, அப்போஸ்தலர் நடபடிகளிலேயே ஒரு சிறப்பான திருச்சபையாக உருவாக்கினார் (அப். 11:22-23). அதுமட்டுமல்லாமல், பர்னபாவின் உற்சாகப்படுத்துதலினாலும், பவுலின் ஊக்கப்படுத்துதலினாலும் எருசலேம் திருச்சபை, புறஜாதியாரை சக விசுவாசக் கிறிஸ்தவர்களாகத் தழுவிக்கொண்டது (15:19). எனவே, ஆதித்திருச்சபையானது, பல வழிகளில் உற்சாகப்படுத்துதலின் கதையாக அமைந்திருக்கிறது.

இதே காரியம் நம்முடைய வாழ்க்கையிலும் பொருத்தப்பட வேண்டும். உற்சாகப்படுத்துதல் என்றால் நாம் மற்றவர்களிடம் ஒரு சில நல்ல வார்த்தைகளைப் பேசுவது என்றே நாம் அறிந்துகொள்ளுகிறோம். ஆனால், அப்படி நாம் நினைத்து விடுவோமானால், அதன் வல்லமையை நம்மால் அறிந்துகொள்ள முடியாது. இது நம்மையும், நம் திருச்சபையின் வாழ்வையும் உருவாக்க தேவனால் பயன்படுத்தப்படும் ஒரு கருவியாகும். நாம் நம்முடைய வாழ்வில் பெற்றுக்கொண்ட ஊக்கப்படுத்துதல்களுக்காகவும், அதில் நாம் மற்றவர்களுக்குக் கொடுத்த தருணங்களுக்காகவும் அவரை ஸ்தோத்தரிப்போம்.