முதலில் எங்கள் வீட்டிற்குப் பின் அமைந்துள்ள ஆற்றினைக் காணும்பொழுது, கோடையின் வெப்பத்தில் சிறிதளவு தண்ணீர் மட்டுமே அதன் பாறைகளில் வழிந்தோடியது. அதை நாங்கள் எளிதாகக் கடந்து செல்ல உறுதியான மரப்பாலம் அமைக்கப்பட்டிருந்தது. பல மாதங்கள் கழித்து, மிகவும் அதிகமான மழை எங்கள் பிராந்தியத்தில் தொடர்ச்சியாகப் பெய்து கொண்டிருந்தபடியால், எங்களது சிறிய ஆறானது அதிகமான வெள்ளப்பெருக்கு எடுத்து ஓடியது. அது 4 அடி ஆழமாகவும் 10 அடி அகலமாகவும் ஓடியது. அந்தத் தண்ணீரின் வேகமானது, மரப்பாலத்தை உடைத்து வேகமாக வீசி எறிந்தது.
வேகமாக ஓடும் தண்ணீர், தன் வழியிலுள்ள எல்லாவற்றையும் தாண்டி அவைகளின் மேல் செல்லக் கூடியதாகவுள்ளது. ஆனால், கடினமான வெள்ளத்தினாலோ, அல்லது அழிவினை உண்டாக்குகிற எந்த சக்தியாலும், அழிக்கமுடியாத ஒன்று உள்ளது. அதுதான் அன்பு. ‘திரளான தண்ணீர்கள் நேசத்தை அவிக்கமாட்டாது, வெள்ளங்களும் அதைத் தணிக்கமாட்டது” (உன்னத. 8:7). அன்பின் விடாப்பிடியான பெலமும், உறுதியும், உலகப்பிரகாரமான அன்பினால் வெளிப்படுத்தப்படும். ஆனால், இந்த அன்பின் முழுப் பரிமாணமும், மனிதர்கள் மேல், தேவன் தன் குமாரனின் மூலம் வெளிப்படுத்தும் அன்பாக அமைகிறது.
நாம் எவைகளையெல்லாம் நமக்கு சார்ந்திருக்கப் பயன்படுத்துகிறோமோ அவைகளெல்லாம் ஒரு நாளில் அழிக்கப்பட்டுப் போய்விடும். நம்முடைய ஏமாற்றம் தேவனுடைய அன்பை நாம் புரிந்து கொள்ள உதவும் கதவினை திறக்கக் கூடியதாக அமையும். அவருடைய பிரியமானது உயரமான, ஆழமான, பெலமான மற்றும் நிலைத்திருக்கக் கூடியதாகும்.
நாம் எவைகளையெல்லாம் சந்திக்கிறோமோ, அவைகளெல்லாம் அவரோடு கூட நமக்கு அருகிலும், நம்மைத் தாங்குகிறதாகவும், நமக்கு உதவி செய்கிறதாகவும், நாம் நேசிக்கப்படுகிறோம் என்பதை நமக்கு நினைவூட்டக் கூடியதாகவும் அமைகிறது.
தேவன் உங்களை எப்பொழுதும் நேசிக்கிறார் என்பதை நீங்கள் எவ்வாறு உறுதியாக அறிந்துகொள்ள முடியும்? உன் வாழ்வில் தேவனுடைய அன்பின் வெளிப்பாடு என்ன?
பரலோகத் தந்தையே, நான் நிராகரிக்கப்படும்பொழுதோ அல்லது இழப்பின் மத்தியில் இருக்கும் போதோ நீர் என்னை நேசித்தபடியால் உமக்கு ஸ்தோத்திரம். என் ஆத்துமாவின் ஒவ்வொரு தேவைக்கும் நான் உம்மைச் சார்ந்திருக்க முடியும் என்பதை நான் விசுவாசிக்க எனக்கு உதவி செய்யும்.