ஆகாதா கிறிஸ்டி எழுதிய ஆங்கில துப்பறியும் கதையான ‘கடியாரங்கள்’ என்ற நூலில் என்ற கொலையாளி ஒருவரைக் கொலை செய்யும்படி குறிவைத்தார், அவனுடைய ஆரம்பத்திட்டம் ஒரு நபரையே கொலை செய்யும்படி குறிவைத்திருந்தான். ஆனால், அவன் தன்னுடைய குற்றத்தை மறைப்பதற்காக அநேகருடைய உயிரை எடுக்கின்றான். பாய்ராட் என்ற துப்பறியும் நிபுனரை கொலையாளி நேருக்கு நேர் சந்தி;த்த போது “நான் ஒரு கொலையைத் தான் செய்ய நினைத்தேன் என்கிறான்.

இந்த கதையில் வரும் திட்டங்களைப் போன்று, ஆன்மீகத் தலைவர்களும் தங்களுடைய சொந்த திட்டங்களை ஏற்படுத்துகின்றனர். இயேசு லாசருவை உயிரோடு எழுப்பிய பின்னர் (யோவா. 11:38-44). அங்கு ஆசாரியர்களும், வேதபாரகரும் ஓர் அவசரக் கூட்டத்தைக் கூட்;டி இயேசுவைக் கொலை செய்யத் திட்டமிடுகின்றனர் (வச. 45-53). அத்தோடு நின்று விடவில்லை. இயேசு உயிர்த்தெழுந்த பின்னரும் இந்த தலைவர்கள் கல்லறையில் நடந்ததாக பொய்யைப் பரப்புகின்றனர் (மத். 28:12-15). பின்னர் அவர்கள் கூட்டம் கூடி இயேசுவின் சீடர்களையும் அவரைப் பின்பற்றுபவர்களையும் பேசாமலிருக்கும்படி அடக்குகின்றனர் (அப். 7:57-8:3). ஒரு சமயம்சார்ந்த ஒரு மனிதனுக்கு எதிராகத் துவக்கப்பட்ட திட்டம் “மிகப் பெரிய நன்மை” என்று சொல்லிக் கொண்டு, நாடு முழுமையிலும் பொய்களைக் கூறவும், ஏமாற்று வேலைகளைச் செய்யவும், அநேகரைக் கொல்லவும் முற்பட்டது.

பாவம் நம்மை கண்ணுக்கெட்டிய தூரம்வரை முடிவேயில்லாத ஒரு பாதை வழியே தள்ளி செல்கிறது. ஆனால், அவற்றிலிருந்தும் தப்பிக்க தேவன் ஒரு வழியைக் காட்டுகின்றார். பிரதான ஆசாரியனான காய்பா “ஜனங்களெல்லாரும் கெட்டுப்போகாதபடிக்கு ஒரே மனுஷன் ஜனங்களுக்காக மரிப்பது நமக்கு நலமாயிருக்குமென்று நீங்கள் சிந்தியாமலிருக்கிறீர்கள்” என்றான் (யோவா. 11:50). அவனுடைய வார்த்தைகளிலிருந்த ஆழ்ந்த உண்மையை அவன் புரிந்து கொள்ளவில்லை. மதத்தலைவர்கள் செயல்படுத்திய இரகசியத் திட்டங்கள் யாவும் மனித குலத்திற்கே ஒரு மீட்பைக் கொண்டு வர உதவியாயிருந்தது.

இயேசு நம்மை பாவத்தின் கொடூரப்பிடியிலிருந்து காப்பாற்றுகின்றார். அவர் தருகின்ற விடுதலையை நீ பெற்றுக் கொண்டாயா?