எல்லா நாட்களையும் போல ஆரம்பித்த அந்த நாள், ஒரு கெட்ட கனவு போல முடிந்தது. எஸ்தரும் (அவருடைய உண்மை பெயரல்ல) அநேக நூற்றுக்கணக்கான பெண்களும் அவர்கள் தங்கியிருந்த பள்ளி விடுதியிலிருந்து, மத தீவிரவாதிகளால் கடத்தப்பட்டனர். ஒரு மாதம் கழித்து எஸ்தரைத் தவிர மற்ற அனைவரும் விடுதலை செய்யப்படடனர். எஸ்தர் கிறிஸ்துவை மறுதலிக்க மறுத்துவிடடாள். என்னுடைய சிநேகிதியும் நானும், மற்றவர்களும் அவர்களுடைய விசுவாசத்தின் பொருட்டு துன்புறுத்தப்பட்டனர் என வாசித்தபோது எங்களுடைய உள்ளம் நெகிழ்ந்து. நாங்கள் ஏதாகிலும் செய்ய முடியுமா என சிந்தித்தோம். ஆனால், என்ன செய்வது?

கொரிந்து சபை மக்களுக்கு அப்போஸ்தலனாகிய பவுல் எழுதியபோது, அவர் ஆசியா பகுதியில் அநுபவித்த உபத்திரவங்களை அவர்களோடு பகிர்ந்துகொள்கின்றார். அவர்களுடைய உபத்;திரவம் மிகவும் கொடியதாயிருந்தது. அவரும், அவரோடிருந்தவர்களும், “பிழைப்போம் என்கிற நம்பிக்கை அற்றுக் போகத்தக்கதாக” கொடுமைப்படுத்தப்பட்டனர் (2 கொரி. 1:8). ஆனாலும் விசுவாசிகளின் விணணப்பங்களினால் அவருக்கு உதவி கிட்டியது (வச. 11). அப்போஸ்தலனாகிய பவுல் இருக்குமிடத்திலிருந்து பல மைல்களுக்கப்பால் கொரிந்து சபையிருந்த போதிலும், அவர்களுடைய ஜெபம் பலனைத் தந்தது. இங்குதான ;வியத்தகு அற்புதம் அமைந்திருக்கின்றது. நம்முடைய சர்வவல்ல தேவன் அவருடைய நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு நம்முடைய ஜெபத்தை பயன்படுத்துகின்றார். என்ன ஒரு வியத்தகு வாய்ப்பைப் பெற்றுள்ளோம்!

இன்றைக்கும், கிறிஸ்துவுக்குள் நம்முடைய சகோதர சகோதரிகள் தங்களுடைய விசுவாசத்தின் பொருட்டு துன்பப்படுத்தப்படுகின்றனர். நாம் அவர்களுக்காக செய்ய வேண்டியது ஒன்றுள்ளது. கிறிஸ்துவின் பேரிலுள்ள விசுவாசத்தின் பொருட்டு நாடு கடத்தப்படுபவர்கள், ஒடுக்கப்படுபவர்கள், அடிக்கப்படுபவர்கள், துன்பப்படுத்தப்படுபவர்கள், கொலை செய்யப்படுபவர்கள் என அநேகருக்காக நாம் ஜெபிக்கக் கடமைப்பட்டிருக்கின்றோம். அவர்கள் தேவனிடமிருந்து ஆறுதலையும், ஊக்கத்தையும், இயேசுவுக்காக உறுதியாக நிற்கத்தக்க பெலனையும் பெற்றுக்கொள்ளும்படி ஜெபிப்போம்.