2017ஆம் அண்டு கோடைகாலத்தில் ஏற்பட்ட ஒரு சூறாவளிப் புயல் மிகப்பெரிய உயிரிழப்புகளையும் பெரிய பொருட்சேதத்தையும் அமெரிக்க ஐக்கிய நாட்டின் வளைகுடா கடற்கரையில் கொண்டுவந்தது. அநேக மக்கள் உணவு, நீர், உடை, தங்குமிடமென உதவிகளைத் தேவையுள்ளோருக்குக் கொடுத்தனர்.

மேரிலாண்டிலுள்ள ஒரு பியானோ கடையின் உரிமையாளர் இதனையும் விட மேலான ஒன்றினைச் செய்யும்படி தூண்டப்பட்டார். தங்களுடைய உடைமைகளையெல்லாம் இழந்து தவிக்கும் மக்களின் இதயத்திற்கு ஒரு சுகத்தையும், இயல்பு நிலையையும் இசையால் கொண்டு வர முடியும் என அவர் கருதினார். எனவே. அவரும் அவருடைய கடை ஊழியர்களும் பயன்படுத்தப்பட்ட பியானோக்களை சரி செய்து அவற்றின் தேவை எங்குள்ளது என்பதனைக் குறித்து விசாரித்தனர். டீன்கிரேமரும், அவருடைய மனைவி லாயிஸ_ம் பியானோக்கள் நிரம்பிய தங்கள் வாகனத்தை ஹ_ஸ்டன், டெக்ஸாஸ் ஆகிய இடங்களுக்கு எடுத்துச் சென்று பாதிக்கப்பட்ட இடங்களில் தேவையுள்ள குடும்பங்கள், பள்ளிகள், ஆலயங்களுக்குக் கொடுத்தனர்.

நம் அயலகத்தார் என்பதை நம் வீட்டின் அருகில் வசிப்பவர் என்றோ அல்லது நமக்கு அறிமுகமானவர் என்றோ நாம் நினைத்துக் கொள்வதுண்டு. லூக்கா 10ல் நல்ல சமாரியன் உவமையின் மூலம் நாம் பிறரை அன்பு செய்வதற்கு எந்தத் தடையும் இருக்கக் கூடாது என இயேசு கற்றுத் தருகின்றார். சமாரியாவிலிருந்து வந்த ஒரு மனிதன் காயப்பட்டு கிடந்த ஓர் அந்நியனுக்கு தாராளமாக உதவுகின்றான். காயப்பட்டு கிடந்த மனிதன் ஒரு யூதனாக இருந்த போதிலும் யூதர்கள் சமாரியரோடு எந்த உறவும் வைத்துக் கொள்வதில்லை என்பதை அறிந்திருந்த போதிலும் அவன் உதவுகின்றான். (வச. 25-37).

டீன் கிரேமரிடம் ஏன் அவர் அத்தனை பியானோக்களைக் கொடுத்தார் எனக் கேட்டபோது, “நாம் பிறனிடத்தில் அன்புகூர வேண்டும்” என்று இயேசு கூறியுள்ளார். “தேவனையும் பிறரையும் அன்பு செய்ய இதைவிட வேறெந்த கட்டளையும் இல்லை என்று கூறினார்” (மாற். 12:31).