அவளால் எப்பொழுதெல்லாம் தொலைபேசியை எடுக்கமுடியவில்லையோ, அப்பொழுதெல்லாம் என்னுடைய சிநேகிதியின் ஒலிப்பதிவு செய்தி என்னை ஒரு செய்தியை பதிவு செய்யும்படி அழைக்கும். அந்த அழைப்பின் முடிவில் ‘இது ஒரு சிறப்பான நாளாக அமையட்டும்’ என முடிக்கும். நான் அந்த வார்த்தைகளைச் சிந்தித்துப் பார்க்கும்போது, நம்முடைய நாட்களைச் சிறப்பானதாக்கிக் கொள்ளும் வல்லமை நம்மிடமில்லை என்பதை உணர்ந்து கொண்டேன். உண்மையிலேயே சில சந்தர்ப்பங்கள் நம்மை அழிவுக்குள்ளாக்குவதாக இருக்கின்றன. ஆனால், சற்று ஆழமாகப் பார்க்கும்போது, நம்முடைய காரியங்கள் நன்றாகவோ மோசமானதாகவோ போனாலும், ஏதோவொரு விடுவிக்கும் வல்லமை நம்முடைய நாட்களை அழகானதாக்கி விடுகிறது என உணர்கின்றேன்.

ஆபகூக் இலகுவான சூழல்களை மட்டும் சந்திக்கவில்லை. அவர் ஒரு தீர்க்கதரிசியாகையால் தேவன் வரும்நாட்களில், ஜனங்கள் சார்ந்து வாழ்கின்ற விளைச்சலிலும், கால்நடைகளிலும் பலனில்லாமல் போகும் காலங்களைக் காட்டுகின்றார் (3:17). இக்காலங்களின் கொடுமையைத் தாங்குவதற்கு நம்பிக்கை மட்டுமே உதவமுடியும். ஒரு ஜனக்கூட்டமான இஸ்ரவேலர் கொடுமையான வறுமையை சந்திப்பர் என்பதைக் கேட்ட ஆபகூக்கின் இருதயம் வேதனையடைந்தது. உதடுகள் துடித்தன, கால்கள் பயத்தால் நடுங்கின (வச. 16).

இவையனைத்தும் இருந்தபோதும் ஆபகூக், ‘நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன்; என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன்” (வச. 18) என்கின்றார். அவர் தேவன் மீதுள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றார். கர்த்தர் தன்னை பெலப்படுத்தி, உயரமான ஸ்தலங்களில் தன்னை நடக்கப்பண்ணுவார் என நம்பிக்கையோடிருக்கின்றார் (வச. 9).

சில வேளைகளில் நாமும் ஆழ்ந்த வேதனைகளையும், கடின வேளைகளையும் கடக்க நேரிடும். ஆனால், எதை இழந்திருந்தாலும், எதை அடையாமற்போனாலும், ஆபகூக்கைப் போன்று நம்முடைய அன்பு தேவனில் களிகூருவோம். நமக்கு ஒன்றுமேயில்லாமல் போனாலும் அவர் நம்மைக் கைவிடுவதும் நம்மை விட்டு விலகுவதுமில்லை (எபி. 13:5). அவரே துயரப்படுகிறவர்களுக்கு நன்மையைத் தருபவர், அவரே நம்முடைய மகிழ்ச்சியின் காரணர்
(எபி. 61:3).