ஜெர்மனியின் அநேக தேவாலயங்களின் தலைவர்கள் ஹிட்லருக்குச் சாதகமாக செயல்பட்ட போதும், வேத வல்லுநரும், போதகருமான மார்டின் நிமோலெர் என்பவர் நாசிக் கட்சியின் கொடுமைகளை எதிர்த்து நின்ற தைரியசாலிகளோடிருந்தார். நான் வாசித்ததில் 1970ல் மூத்த ஜெர்மானியர் ஒரு கூட்டமாக, ஒரு பெரிய விடுதியின் முன் நின்றுகொண்டிருக்க, ஓர் இளைஞன் அந்தக் குழுவின் சார்பாக பேசிக் கொண்டிருந்தார். ஒருவர், ‘யார் அந்தக் குழுவினர்?” எனக் கேட்டபோது, ‘ஜெர்மானிய போதகர்கள்” என பதில் வந்தது. ‘அந்த இளைஞன் யார்?” என்று கேட்டபோது அது மார்டின் நிமோலெர், அவருக்கு வயது எண்பது என்றனர். ஆனால், அவர் இளமைத் துடிப்போடிருந்தார். ஏனெனில், அவரிடம் பயமில்லை.

நிமோலெருக்கு பயத்தை எதிர்த்து பெரிய, பயமற்ற மனிதனுக்கப்பாற்பட்ட வல்லமையிருந்தது. அது தேவனுடைய கிருபையே. உண்மையில் அவர் ஆரம்பத்தில் யூதருக்கு விரோதமான எண்ணங்களையே கொண்டிருந்தார். ஆனால், அவர் மனந்திரும்பியபோது தேவன் அவரை மீட்டுக் கொண்டார். அவர் உண்மைக்காக தைரியமாகப் பேசும்படிக்கு அவருக்கு தேவன் உதவினார்.

இஸ்ரவேலரும் பயத்தை மேற்கொண்டு தேவனை உண்மையாய் தொடரும்படி, அவர்களுக்கு மோசே ஊக்கமளிக்கின்றார். மோசேயும் அவர்களை விட்டு எடுபட்டு விடுவார் என அவர்கள் கேள்விப்பட்ட போது, அவர்கள் பயத்தால் பின் வாங்காதபடி அவர்களுக்கு மோசே, ‘நீங்கள் பலங்கொண்டு திடமனதாயிருங்கள். அவர்களுக்கு பயப்படவும் திகைக்கவும் வேண்டாம். உன் தேவனாகிய கர்த்தர் தாமே உன்னோடே கூட வருகிறார்” (உபா. 31:6) என தைரியப்படுத்துகின்றார். இஸ்ரவேலர் தங்கள்

எதிர்காலத்தைக் குறித்து பயப்படத் தேவையில்லை. ஏனெனில், தேவன் அவர்களோடிருக்கின்றார்.

எத்தகைய இருள் உன்னைச் சூழ்ந்துகொண்டாலும், எத்தனை பயங்கரம் உன்னைத் தாக்கினாலும் தேவன் உன்னோடிருக்கின்றார். தேவனுடைய கிருபையால் நீ பயத்தை மேற்கொள்வாய். ஏனெனில் ‘தேவன் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை” (வச. 6,8).