இவர் எப்படிப்பட்ட இரட்சகர்?
கடந்த ஆண்டில் என் நண்பர்களும் நானும் புற்றுநோயோடு போராடிக் கொண்டிருந்த மூன்று பெண்மணிகளின் சுகத்திற்காக ஜெபித்தோம். தேவன் இதைச் செய்ய வல்லமையுடையவர் என்பது எங்களுக்குத் தெரியும். எனவே தேவன் செயல்படுமாறு அனுதினமும் ஜெபித்துவந்தோம். கடந்த நாட்களில் தேவன் செயல்பட்டதைக் கண்டிருக்கின்றோம். எனவே அவ்வாறு மீண்டும் செய்வாரென விசுவாசிக்கிறோம். ஒவ்வொருவரும் அநேக நாட்கள் போராட்டத்திற்குப்பின், உண்மையிலேயே சுகம் பெற்றதாகத் தோன்றியது. நாங்கள் மகிழ்சியடைந்தோம். ஆனால், அவர்கள் மூவரும் சில நாட்களுக்குப் பின் மரித்துப் போயினர். எங்கள் மகிழ்ச்சியும் விழுந்துபோனது. சிலர் இதனை, “நித்திய சுகம்" எனக் கூறினர். ஒரு வகையில் அப்படித்தான். ஆனாலும் அந்த இழப்பு எங்களை வெகுவாகப் பாதித்தது. தேவன் அவர்களை குணப்படுத்த வேண்டுமென விரும்பினோம். ஆனால், எந்த அற்புதமும் நடைபெறாதது, ஏனென்று எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை.
சில ஜனங்கள் இயேசுவை அவர் செய்த அற்புதங்களுக்காகப் பின்பற்றினர். தங்களுடைய தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள பின்பற்றினர் (யோவா. 6:2,26). சிலர் அவரை ஒரு தச்சனின் மகனாகப் பார்த்தனர் (மத். 13:55-58) வேறு சிலர் அவரை தங்களின் அரசியல் தலைவராக எதிர்பார்த்தனர் (லூக். 19:37-38) சிலர் அவரை சிறந்த போதகராகப் பார்த்தனர் (மத். 7:28-29) அவருடைய உபதேசம் ஏற்றுக்கொள்ள கடினமாக இருந்தபடியால் மற்றவர்கள் அவரைவிட்டுப் பின் வாங்கினர் (யோவா. 6:66).
நாம் எதிர்பார்க்கின்றவற்றை இயேசு இன்னமும் நிறைவேற்றவில்லை. ஆனாலும் அவர் நாம் நினைப்பதையும் விட மேலாகச் செய்கின்றவர். அவரே நித்திய வாழ்வைத் தருபவர் (யோவா. 6:47-48). அவர் நல்லவரும் ஞானமுள்ளவருமாயிருக்கிறார். அவர் நம்மை நேசிக்கின்றார், மன்னிக்கின்றார், நம்மருகில் இருக்கின்றார், நமக்கு ஆறுதலைத் தருகின்றார். நாம் அவரின் மீது சாய்ந்து இளைப்பாறி, தொடர்ந்து அவரைப் பின்பற்றுவோம்.
கவலைக்கோர் மாற்று
சட்ட திட்டங்களைக் கடைபிடித்து நேர்மையாக வாழ்ந்து கொண்டிருந்த ஒரு மனிதனுக்கு ஒரு நாள் அலைபேசி அழைப்பில் “நான் காவல்துறை அதிகாரி, காவல்துறை அலுவலகத்திலிருந்து பேசுகிறேன். தயவுகூர்ந்து என்னை இந்த எண்ணில் அழைக்கவும்" என்ற ஒரு செய்தி வந்தது. உடனடியாக அந்த மனிதனைக் கவலை தொற்றிக் கொண்டது. தான் ஏதோ தவறு செய்திருக்க வேண்டும் என பயந்தான். அவன் அந்த அழைப்பைக் கொடுக்க நடுங்கினான். அவன் சில இரவுகளைத் தூங்காமல் கழித்தான். இவ்வாறு என்ன நடக்குமோவென வௌ;வேறு காட்சிகளைத் தன் கண்முன்னே கொண்டு வந்து, கவலைப்பட்டு, தான் ஏதோவொரு பிரச்சனையில் மாட்டியிருப்பதாக எண்ணிக் கொண்டிருந்தான். அந்த அதிகாரியும் அவனை மீண்டும் அழைக்கவேயில்லை. ஆனால், அந்த கவலையிலிருந்து விடுபட பல வாரங்களாயின.
கவலையைக் குறித்து இயேசுவும் ஓர் ஆர்வமான கேள்வியைக் கேட்கின்றார். “கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்?" (மத். 6:27). இது நாம் ஏன் கவலைப்படுகிறோமென மீண்டும் சிந்திக்கச் செய்கிறது. ஏனெனில், நாம் எந்தக் காரியத்தைக் குறித்து கரிசனை கொண்டுள்ளோமோ அதில் கவலை எந்த உதவியையும் செய்ய முடியாது.
பிரச்சனைகள் நம்மை நெருங்குகையில் நாம் இந்த இருபடி அணுகுமுறையை கடைபிடிக்கலாம். முயற்சி செய், தேவனை நம்பியிரு. நாம் அந்த பிரச்சனையைத் தவிர்க்க முடியுமாயின் அதன் வழியே முயற்சிப்போம். நாம் எடுக்க வேண்டிய செயலில் ஒரு வழியைக் காட்டும்படி தேவனிடம் ஜெபிக்கலாம். நம்மால் செய்யக் கூடியது எதுவுமில்லையாயின், தேவன் அப்படிப்பட்ட மீளமுடியாத இக்கட்டில் இல்லையென்பதை தெரிந்துகொள்ளலாம். தேவன் எப்பொழுதும் நமக்குச் சாதகமாகவே செயல்படுவார். நாம் நம் சூழ்நிலைகளை விசுவாசத்தோடும் நம்பிக்கையோடும் அவரிடம் திருப்பிவிடலாம்.
நாம் கவலைப்பட வேண்டிய வேளைகளில் துன்பங்களையும், கவலைகளையும் எதிர் நோக்கிய தாவீது அரசனின் நம்பிக்கைத் தரும் வார்த்தைகளிடம் திரும்புவோம். "கர்த்தர் மேல் உன் பாரத்தை வைத்துவிடு. அவர் உன்னை ஆதரிப்பார்" (சங். 55:22). இது கவலைக்கு எத்தனை பெரிய மாற்று வழி!
ஒரு சாதாரண மனிதன்
இங்கிலாந்து தேசத்தில் நார்த்தாம்டன் என்ற இடத்தில், ஒரு எளிமையான குடும்பத்தில் பிறந்தவர் வில்லியம் கேரி. அவர் சிறுவனாக இருந்த போது ஒரு சுகவீனமானப் பையனாக இருந்தார். அவருடைய எதிர்காலத்தை அவர் பிரகாசமாக நினைத்ததேயில்லை. ஆனால். தேவன் அவருக்கு வேறு ஒரு திட்டம் வைத்திருந்தார். எல்லாக் குறைகளின் மத்தியிலும் அவர் இந்தியாவுக்கு வந்தார். இங்கு அவர் மிகப் பெரிய சமுதாயச் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார். வேதாகமத்தை அநேக இந்திய மொழிகளில் பெயர்த்தார். அவர் தேவனையும் மக்களையும் நேசித்தார். தேவனுக்காக அநேகக் காரியங்களை நிறைவேற்றினார்.
ஈசாயின் மகனான தாவீது ஒரு சாதாரண இளம்வாலிபன். தன் வீட்டின் இளைய மகன். அவன் பெத்லகேமின் மலைகளில் யாராலும் கண்டுகொள்ளப்படாத ஒரு மேய்ப்பனாயிருந்தான் (1 சாமு. 16:11-12). ஆனால், தேவன் தாவீதின் இருதயத்தைக் கண்டார். அவனுக்கு ஒரு திட்டத்தை வைத்திருந்தார். சவுல் தேவனுக்குக் கீழ்படியாததால் தேவன் அவனை புறக்கணித்தார். சாமுவேல் தீர்க்கதரிசி சவுலுக்காக துக்கத்தோடிருந்தபோது, தேவன் சாமுவேலை அழைத்து வேறொரு ராஜாவை அபிஷேகம் பண்ணும்படி, ஈசாயின் மகனைக் காண்பிக்கின்றார்.
சாமுவேல் எலியாப்பின் வசீகரத்தையும், அவனுடைய சரீர வளர்ச்சியையும் கண்டபோது, “கர்த்தரால் அபிஷேகம் பண்ணப்படுகிறவன் இவன்தான்" என எண்ணினான் (வச. 6) ஆனால், தேவன் ஒரு இராஜாவைத் தேர்ந்தெடுக்கும் திட்டமும் செயலும், சாமுவேலின் பார்வையிலிருந்து வேறுபட்டது. ஈசாயின் ஒவ்வொரு மகனையும் தேவன் நிராகரித்தார். இளையவனையே தேர்ந்தெடுத்தார். தாவீதை அரசனாகத் தேர்ந்தெடுத்தது, அவனுடைய திறனின் அடிப்படையிலல்ல. வெறுமனே வெளித் தோற்றத்தைப் பார்த்தும் எடுத்த முடிவில்லை. ஓர் இளம் மேய்ப்பனிடம் தன் ஜனங்களுக்கும், தன் தேசத்திற்கும் கொடுக்கும்படியாக என்ன இருக்கக் கூடும்?
தேவன் நம் உள்ளங்களையறிவார். அவர் நமக்கு ஒரு திட்டத்தை வைத்திருக்கின்றார் என்பதை நினைக்கும் போது எத்தனை ஆறுதலாகவுள்ளது.
இதனிலும் பெரிய மகிமை
ரோமப் பேரரசர்களில் முதலானவரும் மிகவும் பெரியவருமாக அகஸ்டஸ் சீசர் நினைவுகூரப்படுகின்றார். தன்னுடைய அரசியல் செல்வாக்கையும் இராணுவப்படையின் வல்லமையையும் பயன்படுத்தி தன்னுடைய எதிரிகளை அகற்றினார். தன்னுடைய இராஜ்ஜியத்தை விரிவுபடுத்தினார். ரோமாபுரியின் ஒழுங்கற்ற, பழைய, பயனற்ற நிலையை அகற்றி, பளிங்கு கற்களாலான சிற்பங்களும், கோவில்களும் நிறைந்த பட்டணமாக மாற்றினார் போற்றினார். அவரைப் போற்றிய ரோம மக்கள் அவரைத் தேவனுக்குச் சமமான தந்தையாகவும் மனுக்குலத்தை மீட்பவராகவும் போற்றினர். அவருடைய நாற்பது ஆண்டு அரசாட்சி முடிவடையும் தருவாயில் அவருடைய அரசுக்கு அவர் கொடுத்த கடைசி வார்த்தைகள், “நான் ரோமாபுரியை ஒரு களிமண் பட்டணமாகக் கண்டெடுத்தேன். அதனை ஒரு பளிங்கு பட்டணமாக விட்டுச் செல்கின்றேன்" என்பது அவருடைய மனைவியின் கூற்றுப்படி அவரின் கடைசி வார்த்தைகள், “நான் என்னுடைய பணியை நன்றாகச் செய்தேனா? அப்படியாயின் நான் போகும் போது என்னைப் பாராட்டுங்கள்" என்பது.
அகஸ்டஸ் அறியாதது என்னவெனில் ஒரு பெரிய நிகழ்வில் அவருக்கு ஒரு சிறிய பங்கே கொடுக்கப்பட்டது. அவருடைய அரசாட்சியின் மறைவில் ஒரு தச்சனின் மகனாகப் பிறந்த ஒருவர், ரோம இராணுவத்தையும் வெற்றிகளையும், கோவில்களையும், அரங்கங்களையும், அரண்மனைகளையும் காட்டிலும் மிகப் பெரிய ஓர் உண்மையை வெளிப்படுத்தினார் (லூக். 2:1)
அன்று ராத்திரியிலே அவருடைய சொந்த ஜனங்கள் அவரை ரோமப் போர் சேவகர்களால் சிலுவையில் அறையப்பட வேண்டுமெனக் கேட்டுக் கொண்டபோது, இயேசு பிதாவிடம் வேண்டிக் கொண்ட மகிமையை எத்தனை பேர் புரிந்து கொண்டிருப்பர்? (யோவா. 17:4-5) பரலோகத்திலும் பூலோகத்திலும் என்றைக்கும் போற்றப்படும் அந்த மறைவான பலியின் அதிசயத்தை யார் தான் முன்னறிந்திருப்பார்கள்?
அது ஒரு முழுமையான நிகழ்வு. நாம் முட்டாள்தனமான கற்பனைகளைத் தொடர்பவர்களாகவும், நமக்குள்ளே சண்டையிட்டுக் கொள்பவர்களாகவும் தேவன் நம்மைக் காண்கி;றார். அவர் நாம் அனைவரும் சேர்ந்து அந்த பழமையான சிலுவையைக் குறித்துப் பாடும்படி நம்மை வைத்திருக்கின்றார்.
மாற்றப்பட்டதும், மாற்றிக் கொண்டிருப்பதும்
டானி, மொடூப்பே ஆகிய இருவரும் நைஜீரியாவில் வளர்ந்தனர். அவர்கள் 1970 ஆம் ஆண்டு இங்கிலாந்து தேசத்திற்கு உயர்கல்விக்காகச் சென்றனர். தேவனுடைய கிருபையால் வாழ்வு மாற்றம் பெற்றனர். இங்கிலாந்து தேசத்தில், விவர் பூல் மாகாணத்தில் அன்பீல்ட் என்ற இடத்தில் வாழ்ந்து வந்த மிகவும் பின் தங்கிய, பிரிக்கப்பட்ட சமுதாயத்தினரை மாற்றும்படி தாங்கள் பயன்படுத்தப்படுவர் என்று அவர்கள் நினைத்ததேயில்லை. மருத்துவர்களான டானியும், மொடூப்பே ஆமிடேயும் உண்மையாய் தேவனைத் தேடியதோடு, தங்கள் சமுதாயத்தினருக்கும் பணி புரிந்தனர். தேவன் அநேகருடைய வாழ்வில் நம்பிக்கையைக் கொடுத்தார். அவர்கள் வல்லமையான ஒரு சபையை நடத்தியதோடு, அநேக சமுதாயச் சேவைகளையும் தொடர்ந்தனர். அதன் மூலம் எண்ணடங்கா மக்களின் வாழ்வு மாற்றத்திற்கு வழிவகுத்தனர்.
மனாசே தன்னுடைய சொந்த சமுதாயத்தை மாற்றினான். முதலாவது தீய வழிக்கு தன் ஜனங்களை நடத்தினான். பின்னர் அவர்களை நல்வழிப்படுத்தினான். யூதாவின் அரசனாக தனது பன்னிரண்டாம் வயதில் முடிசூட்டப்பட்ட மனாசே தன் ஜனங்களை வழிதவறச் செய்தான். அவர்கள் பல ஆண்டுகளாக பொல்லாப்பைச் செய்து வந்தனர் (2 நாளா. 33:1-9). அவர்கள் தேவனுடைய எச்சரிப்புக்குச் செவிசாய்க்கவில்லை. எனவே தேவன் மனாசேயை பாபிலோனுக்கு சிறைபிடித்துச் செல்லும்படி ஒப்புக்கொடுத்தார் (வச. 10-11).
அவன் இப்படி நெருக்கப்படுகையில் தன் தேவனாகிய கர்த்தரை நோக்கிக் கெஞ்சி, தன் பிதாக்களின் தேவனுக்கு முன்பாகத் தன்னை மிகவும் தாழ்த்தினான். தேவன் அவனுடைய விண்ணப்பத்தைக் கேட்டு அவனை மீண்டும் அவனுடைய இராஜ்ஜியத்திற்கு வரப்பண்ணினார் (வச. 12-13). அவன் தாவீதுடைய நகரத்தின் வெளி அலங்கத்தைக் கட்டி, அந்நிய தேவர்களை அகற்றினான் (வச. 14-15). அவன் கர்த்தருடைய பலிபீடத்தைச் செப்பனிட்டு... இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை சேவிக்க வெண்டுமென யூதாவுக்கு கட்டளையிட்டான் (வச. 16). மனாசேயிடமிருந்த பூரண மாற்றத்தைக் கண்ட ஜனங்கள், தாங்களும் மாற்றமடைந்தனர் (வச. 17).
நாம் தேவனைத் தேடும்போது, அவர் நம்மை மாற்றுவதோடல்லாமல் நம்மூலம் நம்முடைய சமுதாயத்தையும் மாற்றுவார்.