இஸ்ரவேல் தேசத்தில் யாட் வாஷேம் என்ற இடத்திலுள்ள, ஓர் இனப்படுகொலை அழிவைக் குறித்த பழங்கால நினைவுச் சின்னங்களைக் கொண்ட ஓர் அரங்கிற்குச் சென்றிருந்தோம். என்னுடைய கணவனும் நானும் தேசங்களின் மத்தியில் நீதிமான்களாகத் திகழ்ந்த மக்களை கவுரவிக்கும் அந்த இடத்தைச் சுற்றி வந்தோம். யூத மக்களின் பேரழிவின் போது, தங்கள் உயிரையும் பணயம் வைத்துச் சில யூதர்களைக் காப்பாற்றியவர்களின் நினைவுச் சின்னங்களைப் பார்வையிட்டபோது, நெதர்லாந்திலிருந்து வந்திருந்த ஒரு குழுவினரைச் சந்தித்தோம். அங்கு வந்திருந்த ஒரு பெண்மணி தன்னுயை முன்னோர்களின் பெயர்களை அங்கிருந்த ஒரு பெயர் பட்டியலில் தேடிக் கொண்டிருந்தாள். அவர்களுடைய குடும்பத்தைப் பற்றிய கதையை ஆர்வமிகுதியால் கேட்டோம்.

தடையை மீறி செயல்பட்ட மக்களின் வரிசையிலிருந்த அந்தப் பெண்ணின் தாத்தாவும், பாட்டியும் போதகர் பயட்டரும், ஏட்ரியானா மியூல்லரும் 1943-1945 ஆம் ஆண்டுகளில் இரண்டு வயது நிரம்பிய ஒரு யூத பையனை, எட்டு குழந்தைகளடங்கிய தங்கள் குடும்பமெனக் கூறித் கடத்தினர்.

அந்தக் கதையைக் கேட்டு அசைக்கப்பட்டவர்களாக நாங்கள், “அந்த சிறுபையன் பிழைத்தானா?” என வினவினோம். அந்தக் குழுவிலிருந்து ஒரு முதியவர் முன்னால் வந்து, “நான் தான் அந்தப் பையன்!” என அறிவித்தார்.

யூத ஜனங்களுக்குச் சாதகமாக அநேகர் தைரியமாகச் செயல்பட்டது எனக்கு எஸ்தர் ராஜாத்தியை நினைவுபடுத்தியது. ஏறத்தாழ கி.மு. 475 ஆம் அண்டில், சகல யூதரையும் கொன்று அழித்துப் போடும்படி அகாஸ்வேரு ராஜாவால் எழுதப்பட்ட கட்டளையை எஸ்தர் ராஜாத்தி அறிந்திருந்தும், தான் தன்னுடைய பூர்வீகத்தை வெளிப்படுத்தாமையால் தப்பித்துக் கொள்ளலாம் என எண்ணியிருக்கலாம். ஆனாலும் அவள் தன் உயிரையும் பணயம் வைத்து செயல்படும்படி தூண்டப்பட்டாள். அவளுடைய உறவினன் அவளிடம், “நீ இப்படிப்பட்ட காலத்துக்கு உதவியாயிருக்கும்படி உனக்கு ராஜமேன்மை கிடைத்திருக்கலாமே, யாருக்குத் தெரியும்” என்று சொல்லச் சொன்னான் (எஸ். 4:14). நாமும் ஒருவேளை இத்தகைய முடிவுகளை எடுக்கக் கூடிய நிலைக்குத் தள்ளப்படாவிடினும், ஓர் அநீத செயலுக்கு எதிராகப் பேசும்படி சந்தர்ப்பம் நமக்களிக்கப்படலாம், அல்லது அதைக் கண்டும் அமைதியாகப் போய்விடலாம். ஆனால், பிரச்சனையிலிருக்கும் ஒருவருக்கு உதவுகின்றாயா? அல்லது திரும்பிப் போய் விடுகின்றாயா? செயல்படும்படி தேவன் நமக்கு தைரியத்தைத் தருவாராக.