ஒரு பனிப்பொழிவு நாளில் என்னுடைய குழந்தைகள் பனிச்சறுக்கி விளையாட அனுமதிக்கும்படி என்னை வற்புறுத்தினர். அந்நாளின் வெப்பநிலை பாரன்ஹீட் வெப்பநிலை மானியின் பூஜியத்தினருகிலேயே அசைந்து கொண்டிருந்தது. பனித்துகள்கள் எங்கள் ஜன்னல்களை மோதிக் கொண்டிருந்தன. நான் மீண்டும் சிந்தனை செய்து பார்த்து சரியெனக் கூறி, அவர்களை நன்கு கம்பளி உடைகளால் பொதிந்து கொண்டு, சேர்ந்து பதினைந்து நிமிடங்கள் கழித்து உள்ளே வரும்படி கேட்டுக் கொண்டேன்.

அன்பின் மிகுதியால் நான் அந்த கட்டளையைக் கொடுத்தேன். எனவே என்னுடைய குழந்தைகள் பனிஉறைதலில் விறைத்துப்போகாமல் விளையாட முடியும். சங்கீதம் 119ஐ எழுதியவரும், தேவன் கொண்டுள்ள அத்தகைய நல்லெண்ணத்தை உணர்ந்தவராக இரு அடுத்தடுத்த வசனங்களை எதிரெதிர் அர்த்தமுடையவைகளாக எழுதியுள்ளார். “நான் எப்பொழுதும் என்றைக்கும் உமது வேதத்தைக் காத்துக் கொள்ளுவேன். நான் உம்முடைய கட்டளைகளை ஆராய்கிறபடியால் விசாலத்திலே நடப்பேன்” (வச. 44-45). இதில் எப்படி சங்கீதக்காரன், சுதந்தரமான வாழ்வையும் கட்டளைகளுக்கு கீழ்படிந்து வாழ்கின்ற ஆவிக்குரிய வாழ்வையும் இணைத்துக் குறிப்பிடுகின்றார்?

தேவனுடைய ஞானமுள்ள கட்டளைகளை நாம் கடைபிடித்து நடக்கும்போது, நாம் இவற்றைத் தவிர்த்து வாழ்ந்திருக்கலாமே என்ற குற்றஉணர்வோடு வாழ்கின்ற பின்விளைவைத் தவிர்க்க முடிகிறது. நாமும் தவறிழைத்த கனத்தோடும் வேதனையோடுமல்ல, நாம் சுதந்திரமாக நம்முடைய வாழ்வை அனுபவிக்க முடிகிறது. தேவன் நம்மை, இதைச் செய், செய்யாதேயெனக் கட்டுப்படுத்துபவரல்ல. ஆனால், அவருடைய வழிகாட்டல் அவர் நம்மை நேசிக்கிறாரெனக் காட்டுகின்றது.

என்னுடைய குழந்தைகள் பனியில் சறுக்கிக் கொண்டு வேகமாக ஒரு குன்றின் உச்சியிலிருந்து வருவதைக் கண்டேன். நான் அவர்களின் சிரிப்பொலியைக் கேட்டு மகிழ்ந்தேன். அவர்களின் மலர்ந்த சிவந்த முகங்களைக் கண்டேன். நான் அவர்களுக்குக் கொடுத்த எல்லைக்குள் சுதந்திரமாக விளையாடினர். இந்த நிகழ்வு, நாம் தேவனோடு கொண்டுள்ள உறவிற்கும் பொருத்தமானது. அது நம்மையும் சங்கீதக்காரனோடு சேர்ந்து, “உமது கற்பனைகளின் பாதையில் என்னை நடத்தும். நான் அதில் பிரியமாயிருக்கிறேன்” (வச. 35) எனச் சொல்லும்படி செய்கின்றது.