அமெரிக்கா தேசத்தில், முதல் ஆப்பிரிக்கா அமெரிக்கா ஜனாதிபதியின் துவக்க விழாவின் போது, டெலிவிஷன் படப்பிடிப்பு கேமராக்கள், அந்த சரித்திர நிகழ்வினைக் காண குழுமியிருந்த இரண்டு மில்லியன் மக்களின் அழகிய காட்சியைக் காட்டியது. சி.பி.எஸ் செய்தி தொடர்பாளர் பாப் ஷீப்பர் இதனைக் குறித்து, “இந்த நிகழ்சியின் உச்சக்கட்டம் அந்த பரந்த படப்பிடிப்பிலுள்ளது? என்றார். வேறெதுவும், லிங்கன் நினைவிடத்திலிருந்து கேப்பிடல் வரை பரம்பியிருந்த இத்தனை பெரிய கூட்டத்தை இவ்வளவு துல்லியமாக எடுத்திருக்க முடியாது எனக் குறிப்பிட்டார்.

இயேசு கிறிஸ்துவின் மீதுள்ள நம்பிக்கையால் இணைக்கப்பட்ட, இதனையும் விட பெரிதான ஒரு கூட்டத்தினைக் குறித்த ஒரு காட்சியை வேதாகமம் தருகின்றது. “நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும் பரிசுத்த ஜாதியாயும் அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்” (1 பேது. 2:9).

இது பாக்கியம் பெற்ற ஒரு சிலரின் காட்சி மட்டுமல்ல. சகல கோத்திரங்களிலும், பாஷைக்காரரிலும், ஜனங்களிலும், ஜாதிகளிலுமிருந்து கிரயம் செலுத்தப்பட்டு, மீட்டுக்கொள்ளப்பட்ட அநேகரின் காட்சி (வெளி. 5:9). இன்று நாம் இவ்வுலகம் முழுவதிலும் பரந்து காணப்படுகின்றோம். இங்கு நாம் தனித்தவரும், இயேசுவோடுள்ள தொடர்புக்காய் பாடநுபவிப்பவர்களுமாயிருக்கிறோம். தேவனுடைய வார்த்தையாகிய லென்ஸ் வழியே பார்க்கும் போது, விசுவாசத்தில் நம்முடைய சகோதர, சகோதரிகளும் இணைந்த ஒரு பெரிய கூட்டமாகப் பரந்து நின்று, நம்மை மீட்டுக் கொண்டு தம்முடைய சொந்த ஜனமாக்கிக் கொண்டவரை மகிமைப்படுத்தும்படியாகக் காணப்படுகின்றோம்.

நம்மை இருளிலிருந்து மீட்டு வெளியே ஒளியினண்டை கொண்டு வந்தவரை நாம் அனைவரும் இணைந்து போற்றுவோமாக.