எங்களுடைய உறவினர் ஒருவருக்கு டிசம்பர் மாத வாடகையைச் செலுத்த உதவி தேவைப்பட்டது. அந்த வருட இறுதியில் அவர்கள் எதிர்பாராத சில செலவுகளை மேற்கொள்ள வேண்டியிருந்ததால், அவருடைய குடும்பத்தினருக்கு இந்த தேவை ஒரு பெரிய பாரமாக இருந்தது. ஆனால், அவர்கள் தங்களுடைய சேமிப்பு எல்லாவற்றையும் தேடி எடுத்தும், தங்கள் உறவினரின் தாராள உள்ளத்தாலும், அதனை ஈடு செய்தனர். தேவன் தந்தவைகளுக்காக நன்றி செலுத்தினர்.

அவர் நன்றியறியும் வார்த்தைகளால் நிரம்பிய ஒரு நன்றி அட்டையை அவர்களுக்குக் கொடுத்தார். “நன்மையான செயல்களை செய்யும்படி தொடருங்கள், தொடர்ந்து நன்மை செய்வதை ஒரு பெரிய காரியமக நீங்கள் எடுத்துக்கொள்ளவில்லை.”

மற்றவர்களுக்கு உதவுவது தேவன் எதிர்பார்ககும் ஒரு பெரிய விஷயம். ஏசாயா தீர்க்கதரிசி இதனை இஸ்ரவேல் ஜனங்களுக்குத் தெரியப்படுத்துகின்றார். அந்த ஜனங்கள் உபவாசமிருக்கின்றனர், ஆனாலும் அவர்களுக்குள் வாக்குவாதங்களும், சண்டைகளும் ஏற்படுகின்றன. எனவே ஏசாயா தீர்க்கன் இதற்குப்பதிலாக, “அக்கிரமத்தின் கட்டுகளை அவிழ்கிறதும், நுகத்தடியின் பிணையல்களை நெகிழ்க்கிறதும், பசியுள்ளவனுக்கு உன் ஆகாரத்தைப் பகிர்ந்து கொடுக்கிறதும், துரத்துண்ட சிறுமையானவர்களை வீட்டிலே சேர்த்துக்கொள்கிறதும், வஸ்திரமில்லாதவனைக் கண்டால் அவனுக்கு வஸ்திரங் கொடுக்கிறதும், உன் மாம்சமானவனுக்கு உன்னை ஒளியாமலிருக்கிறதும் அல்லவோ எனக்கு உகந்த உபவாசம்” என்கின்றார் (ஏசா. 58:6-7).

இத்தகைய தியாகம் தான் தேவனுடைய ஒளியை பிறருக்குக் கொடுக்கும். நம்முடைய காயங்களையும் குணப்படுத்தும் (வச. 8) என ஏசாயா சொல்கின்றார். குடும்பங்கள் தங்கள் உறவினருக்கு உதவும் போது, தங்களுடைய சொந்த பொருளாதாரத்தில் ஒரு கஷ்டத்தை உணர்வதால், அந்த வருடம் முழுவதும்  மேலும் சிறந்த முறையில் தங்கள் வருமானத்தைக் கொண்டு குடும்பத்தை நடத்தும் வழியைக் கண்டு கொள்வர். இதுவே நீங்கள் தாராள குணமுள்ளவர்களாயிருக்கும்படி தேவன் தரும் வாக்குத்தத்தம். “உன் நீதி உனக்கு முன்னாலே செல்லும்; கர்த்தருடைய மகிமை உன்னைப் பின்னாலே காக்கும்” (வச. 8) முடிவில், உன் உறவினருக்குக் கொடுப்பதால் மேலும் ஆசீர்வாதத்தைப் பெறுவாய். தேவன் என்ன தருவார்? தேவன் ஏற்கனவே தனக்குள்ளதையெல்லாம் அன்பினால் உனக்குக் கொடுத்துவிட்டார்.