ஒரு கல்லூரியின் ஒரு வகுப்பு, கலைசார்ந்த களப்பயணம் சென்ற போது, ஒரு மிகச் சிறந்த மாணவியை எங்களது பயிற்சியாளரால் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. வகுப்பறையில் அவள் எப்பொழுதும் ஆறு அங்குல உயரமுள்ள செருப்புகளையே தன்னுடைய நீண்ட கால் சட்டைக்குள் அணிந்திருப்பாள். ஆனால், நடைபயிற்சிக்கு பயன்படுத்தும் பூட்ஸ்சுகள் அவளை ஐந்து அடிக்கும் குறைவான உயரத்தில் காட்டியது. “என்னுடைய உயரமான செருப்புகள் நான் எப்படித் தோன்ற விரும்புகிறேனோ அப்படிக் காட்டின. ஆனால், என்னுடைய பூட்ஸ்சுகள் என்னுடைய உண்மையான உருவத்தைக் காட்டுகின்றன” எனக் கூறி சிரித்தாள்.

நம்முடைய புறத்தோற்றம் நம்முடைய உண்மை நிலைமையை வெளிக்காட்டுவதில்லை. நம்முடைய இருதயமே நம்மை யாரெனக் காட்டும். வெளித் தோற்றத்தில் மிகச் சிறப்பாகக் காட்சி தரும் மதப்பற்றுடைய பரிசேயர்களுக்கும், வேதபாரகருக்கும் இயேசு ஆழமான வார்த்தைகளைக் கொடுக்கின்றார். அவர்கள் இயேசுவிடம், தங்களுடைய பாரம்பரியத்தின்படி அவருடைய சீடர்கள் போஜனம் பண்ணுமுன் ஏன் கை கழுவுவதில்லையெனக் கேட்கின்றார்கள் (மத். 15:1-2). இயேசு அவர்களிடம், “நீங்கள் ஏன் உங்கள் பாரம்பரியத்தினால் தேவனுடைய கட்டளையை மீறி நடக்கின்றீர்கள்? (வச. 3) எனக் கேட்கின்றார். அவர்கள் தங்களுடைய தகப்பனையும், தாயையும் பாதுகாப்பதற்குப்பதிலாக தங்களுக்குச் சாதகமாக ஒரு சட்டத்தை உருவாக்கிவைத்துக் கொண்டு, தங்களுடைய செல்வத்தை காத்துக் கொள்கின்றனர் (வச. 4-6). இவ்வாறு தங்கள் பெற்றோரை கனம் பண்ணாமல் ஐந்தாவது கட்டளையை மீறுகின்றனர் (யாத். 20:12) என இயேசு சுட்டிக் காட்டுகின்றார்.

தேவனுடைய தெளிவான கட்டளைகளிலிருந்து மீறுவதற்கு ஒரு வழிமுறையாக வெளிப்புற தோற்றத்தைக் கொள்வோமாயின். கட்டளையைத் தந்தவரை மீறுகிறவர்களாகிறோம். “இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும், கொலைபாதகங்களும், விபச்சாரங்களும், வேசித்தனங்களும், களவுகளும், பொய்சாட்சிகளும், தூஷணங்களும் புறப்பட்டு வரும்” (மத். 15:19). தேவனுடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் நீதியின்படி, தேவனே ஒரு தூய இருதயத்தைத் தர முடியும்.