லண்டனிலுள்ள ஒரு வேதாகமம் பயிற்சி கல்லூரியில் ஆஸ்வால்ட் சேம்பர்ஸ் இருந்த நாட்களில் (1911-15) தன்னுடைய விரிவுரைகளின் போது அவர் விளக்குகின்ற பொருட்களைக் காண்பித்து மாணவர்களை வியப்பில் ஆழ்த்துவார். மதிய உணவு நேரத்திற்குப் பின்னரே விவாதத்திற்குரிய நேரம் ஒதுக்கப்பட்டிருந்ததால், அந்நேரத்தில் சேம்பர்ஸ் மாணவர்களின் கேள்விகளாலும், எதிர்ப்புகளாலும் அடிக்கடி துளைத்தெடுக்கப்படுவார் என ஒரு பெண்மணி விளக்கினார். மேலும் அவள், ஆஸ்வால்ட் எப்பொழுதும் புன்முறுவலோடு “இதனை இப்பொழுது விட்டு விடு. அது உனக்குப் பின்னர் தெரியவரும்” எனச் செல்வார் அவர் மாணவர்களை அதனைக் குறித்து மீண்டும் சிந்தனை செய்ய ஊக்குவிப்பார். ஏனெனில் தேவனே தன்னுடைய உண்மையை அவர்களுக்கு விளங்கச் செய்வார்.
ஓன்றினைக் குறித்து மீண்டும் சிந்திப்பது என்பது, அக்காரியத்தின் மீது கவனம் செலுத்தி, அதனைக் குறித்து ஆழ்ந்து யோசிப்பதாகும். இயேசு பெத்லகேமில் பிறப்பதற்கு முன் நடந்த நிகழ்வுகளையும், தேவதூதனின் காட்சியையும், மேசியாவைக் காண மேய்ப்பர்கள் வந்ததையும், “ மரியாளோ அந்தச் சங்கதிகளையெல்லாம் தன் இருதயத்திலே வைத்து சிந்தனை பண்ணினாள்” (லூக். 2:19). புதிய ஏற்பாட்டினைக் கற்றுத் தேர்ந்த று.நு. வைன் என்பவர் “சிந்தனை செய்தல்” என்பது “எல்லாவற்ளையும் ஒன்றிணைத்து, சூழ்நிலைகளோடு ஒவ்வொன்றையும் சேர்த்து ஆராய்வதேயாம்” எனக் கூறுகின்றார்.
நம் வாழ்வில் நடைபெறும் காரியங்களைக் குறித்துக் புரிந்துகொள்ள போராடும் போது தேவனையும், அவருடைய ஞானத்தையும் தேடுவதற்கு மரியாள் ஒரு நல்ல முன்மாதிரியாகவுள்ளார்.
மரியாளைப் போன்று நாமும் நம்முடைய வாழ்வில் தேவனுடைய வழிநடத்துதலை ஏற்றுக்கொண்டு, அவருடைய அன்பின் வழிகாட்டலின் மூலம் நாம் பெற்றுக் கொண்ட அநேகப் புதிய காரியங்களை நம் இருதயத்தில் பொக்கிஷமாகச் சேர்த்துவைத்து அதனைக் குறித்து சிந்தனை செய்வோம்.
இந்த ஓயாத உழைப்பின் காலங்களில் ஒரு சில நிமிடங்கள் அமைதியாக அமர்ந்து தேவன் உனக்கு எதைச் சொல்கின்றார் என்பதைக் கவனி.