எங்களுடைய கிறிஸ்மஸ் மரத்தை மின்னும் விளக்குகளால் சுற்றினேன். நீலம், இளஞ்சிவப்பு நிற (டிழற) ரிபன்களால் அதன் கிளைகளை அலங்கரித்தேன். அந்த மரத்திற்கு “ஒரு குழந்தை கிடைக்க நம்பிக்கை தரும் மரம்” என பெயரிட்டேன். நானும் என்னுடைய கணவனும் ஒரு குழந்தையை தத்து எடுத்துக் கொள்ளும்படி நான்கு ஆண்டுகளுக்கும் மேலாகக் காத்திருக்கின்றோம். இந்த கிறிஸ்மஸ் பிறப்பதற்கு முன்பு கட்டாயம் கிடைத்துவிடும் என எதிர் பார்த்திருக்கிறோம்.

ஒவ்வொரு நாள் காலையும் நான் அந்த மரத்தினருகில் நின்று ஜெபம் பண்ணுவேன். தேவன் எனக்கு உண்மையுள்ளவராகவேயிருக்கிறார் என நான் நினைவுபடுத்திக் கொள்வேன். இந்தக் கிறிஸ்மஸ_க்கு முன்பு குழந்தை கிடைக்காது என்ற செய்தி டிசம்பர் 21 ஆம் தேதி வந்தது. என்னுடைய மனக்கோட்டை தகர்க்கப்பட்ட நிலையில் தேவனுடைய அருட்கொடைகளுக்கு அடையாளமாக நிறுத்தப்பட்ட அந்த மரத்தினருகில் நின்றேன். தேவன் இன்னமும் உண்மையுள்ளவராயிருக்கின்றாரா? நான் ஏதோ தவறாகச் செய்து கொண்டிருக்கின்றேனா?

சில வேளைகளில் தேவன் சில முடிவுகளை நிறுத்தி வைத்திருப்பது அவருடைய அன்பினால் நம்மை ஒழுங்குபடுத்துவதற்கும். நம்முடைய விசுவாசத்தைப் புதிப்பிப்பதற்கும் நம் தேவையை தாமதிக்கச் செய்கிறார். தேவன் இஸ்ரவேலரைத் திருத்துவதைக் குறித்து எரேமியா தீர்க்கதரிசி புலம்பல் புத்தகத்தில் விளக்குகின்றார் (3:13). “தம்முடைய அம்பராத்தூணியின் அம்புகளை என் உள்ளிந்திரியங்களில் படப்பண்ணினார்” (3:13) அத்தகைய வேதனையை உணர முடிந்தது. இவையெல்லாவற்றிலும் எரேமியா தேவனுடைய உண்மையின் மிதுள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றார். “அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. அவைகள் காலைதோறும் புதியவைகள்; உமது உண்மை பெரிதாயிருக்கிறது” (வச. 22-23) என்று கூறுகின்றார்.

நான் அந்த மரத்தை கிறிஸ்மஸ_க்குப் பின் அநேக நாட்கள் வைத்திருந்து என்னுடைய காலை ஜெபத்தை தொடர்ந்து செய்த கொண்டேயிருந்தேன். கடைசியாக கிறிஸ்து உயிர்த்தெழுந்த பண்டிகையின் போது எங்களுக்கு ஒரு பெண் குழந்தை கிடைத்தது. நாம் எதிர்பார்க்கின்ற நேரத்தில் நம்முடைய சொந்த விருப்பங்களின்படி தேவன் தருவார் என எதிர்பார்க்கக் கூடாது.

என்னுடைய பிள்ளைகள் இப்பொழுது முப்பது வயதைத் தாண்டிவிட்டனர். ஆனால், இப்பொழுதும் நான் அந்த மரத்தின் ஒரு சிறிய அமைப்பை வைத்து, தேவனுடைய உண்மையின் மீது எப்பொழுதும் நம்பிக்கையோடிருக்க, என்னையும் மற்றவர்களையும் நினைவுபடுத்திக் கொள்ளும்படிச் செய்வேன்.