என்னுடன் பணிபுரியும் நபர் ஒருவர் என்னிடம் தான் இயேசுவுக்கு சொந்தமானவனல்ல எனக் கருதுவதாகக் கூறினான். அவன் தன்னுடைய வசதியான, பெருமைப்படக்கூடிய வாழ்வைக் குறித்து விளக்கியதோடு, அது அவனுக்குத் திருப்தியைத் தரவில்லை எனவும் கூறினான். “இங்கு என்னுடைய பிரச்சனை என்னவெனில், நான் நல்லவனாக வாழவிரும்புகிறேன். அதற்காக கவனமுன் செலுத்துகின்றேன். ஆனால், அது வேலை செய்யவில்லை, நான் எவற்றைச் செய்ய வேண்டுமென்று எண்ணுகிறேனோ அவற்றைச் செய்ய முடியவில்லை. எவற்றை நிறுத்த வேண்டுமென எண்ணுகிறேனோ, அவற்றையே தொடர்ந்து செய்கிறேன்” என்றான்.

“உங்களுடைய இரகசியம் என்ன என்று உள்ளார்ந்த ஆவலோடு கேட்டான். என்னிடம் இரகசியமேயில்லை. தேவன் என்னிடம் எதிர்பார்க்கும் தரத்தில் வாழும்படி என்னிடம் பெலனுமில்லை. எனவேதான் நமக்கு இயேசுவின் உதவி தேவை” என்றேன்.

நான் வேதாகமத்தை வெளியிலெடுத்து “அவன்” சொல்லிய வார்த்தைகளை அப்போஸ்தலனாகிய பவுலும் ரோமர் 7:15ல் கூறியுள்ளதைக் காண்பித்தேன். பவுலின் ஏமாற்றத்தைக் காட்டும் இந்த வார்த்தைகள், தங்களை தேவன் விரும்பும் நல்லவர்களாகக் காட்ட முயற்சித்து தோல்வியுற்ற கிறிஸ்தவர்களுக்கும், பெயர் கிறிஸ்தவர்களுக்கும் பொருத்தமாயுள்ளது. அது உனக்கும் பொருத்தமாயிருக்கும் என நினைக்கிறேன். அப்படியானால் கிறிஸ்துவே நமது இரட்சிப்புக்கும் அதன் மூலம் கிடைக்கும் மாற்றங்களுக்கும் மூலக்காரணர் (ரோம. 7:25-8:2) என்ற பவுலின் வெளிப்பாடு உன்னை மெய்சில்ர்க்கச் செய்யும். நம்மில் முடியாததென்று நாம் மலைத்துப்போய் நிற்கின்ற காரியங்களை இயேசு நமக்காக ஏற்கனவே செய்து முடித்து நம்மை விடுவித்து விட்டார்.

நமக்கும, தேவனுக்குமிடையேயுள்ள தடுப்பு, பாவமாகிய தடுப்பு, தடுப்புசவர், நம்முடைய முயற்சியெதுவுமில்லாமலேயே உடைந்து நீக்கப்பட்டுள்ளது. நம்முடைய இரட்சிப்பையும், அதன் பலமான பரிசத்த ஆவியானவவரால், தரப்படுகின்ற வளர்ச்சிக்கேற்ற மாற்றங்களையும் தேவன் நம் அனைவருக்கும் தருகின்றனார். அவர் நம்முடைய ஆன்மாவின் கதவைத் தட்டுகின்றார். அவருடைய அழைப்புக்கு இன்றே பதில் கொடு. இதில் எந்த இரகசியமும் இல்லை. அவரே நம் பதிலாவார்.