என்னுடைய அத்தை க்லேடிஸ் துணிச்சல் மிக்க பெண். அவர் துணிச்சலை நான் மதித்தாலும், சில சமயங்களில் அது எனக்கு கவலையைத்தரும். என் கவலைக்குக் காரணம், “நேற்று நான் ஒரு வாதுமை மரத்தை வெட்டினேன்” என்று அவர் அனுப்பிய மின்னஞ்சல்.
ரம்பத்தைக் கையாளும் என் உறவினருக்கு 76 வயது! அவர் வாகனம் நிறுத்தும் இடத்திற்குப் பின்புறம் அந்த மரம் வளர்ந்திருந்தது. காங்க்ரீட் தரையில் அந்த மரத்தின் வேர்கள் வெடிப்பை ஏற்படுத்தக்கூடும் என்ற நிலையில் அவர் அதை வெட்டத் தீர்மானித்தார். ஆனால் “இதுபோன்ற வேலைகளைச் செய்யும்முன் நான் ஜெபிப்பேன்” என்று அவர் எங்களிடம் கூறினார்.
இஸ்ரவேலரின் சிறையிருப்பின்போது, பெர்சிய ராஜாவுக்கு பானபாத்திரக்காரனாக நெகேமியா பணி செய்கையில், எருசலேமுக்குத் திரும்பிய ஜனங்களைப்பற்றி அவர் கேள்விப்பட்டார். சில பணிகள் செய்யப்பட வேண்டியிருந்தது. “எருசலேமின் அலங்கம் இடிபட்டதும், அதின் வாசல்கள் சுட்டெரிக்கப்பட்டதுமாய்க் கிடக்கிறது” (நெகேமியா 1:3). அலங்கங்கள் இடிபட்டதால், எதிரிகள் எளிதில் தாக்கக்கூடிய நிலை இருந்தது. நெகேமியா தன் ஜனங்கள்மீது கரிசனை கொண்டவராக இருந்தார். அந்தப் பணிகளில் தன்னை ஈடுபடுத்த விரும்பினார். ஆனால் ஒரு புதிய அரசர் எருசலேமின் கட்டிடப் பணிகளை நிறுத்தும்படி கடிதம் எழுதியதால் (எஸ்றா 4), நெகேமியா முதலில் ஜெபித்தார். நெகேமியா தன் ஜனங்களுக்காக ஜெபம் செய்தார் (நெகேமியா 1: 5-10). பின்னர் ராஜாவிடம் விடுப்புக்காக அனுமதி கேட்கும் முன் கர்த்தரின் உதவியை நாடி ஜெபம் செய்தார் (வச. 11).
ஜெபம்தான் உங்கள் பதிற்செயலா? வாழ்வில் எந்த ஒரு காரியத்தையும், சோதனையையும் எதிர்கொள்ள ஜெபமே சிறந்தது.
ஜெபத்தை கடைசி ஆயுதமாக கையில் எடுக்காமல், முதல் முன்னுரிமை கொடுங்கள்.