இது ஒரு நதியைக் கடப்பது போன்று எளிதானதல்ல. சட்டப்படி, எந்த ஒரு ரோம இராணுவ அதிகாரியும் ஓர் ஆயுதமணிந்த படையினரை ரோம சாம்ராஜ்ஜியத்திற்குள் வழி நடத்திச் செல்ல முடியாது. கி.மு. 49ல் ஜூலியஸ் சீசர் அவருடைய பதின்மூன்றாம் இராணுவப்படையை ரூபிக்கான் நதியைத் தாண்டி இத்தாலிக்குள் வழி நடத்தினார். இது ஒரு தேச துரோகச் செயல். சீசரின் அந்த முடிவின் விளைவு மாற்ற முடியாததொன்றாகி விட்டது. இதன் விளைவாக பல ஆண்டுகள் உள்நாட்டு யுத்தம் நடந்தது. பின் ரோம இராணுவ பிரதான அதிகாரி சக்ரவர்த்தியானார். இன்று வரை ‘‘ரூபிக்கானை கடத்தல்” என்ற சொற்றொடர் மீண்டும் திரும்பி வர முடியாத எல்லையைக் குறிப்பிட பயன்படும் ஓர் உருவகமாயுள்ளது.

சில வேளைகளில் நாம் பிறரிடம் பேசும் சில வார்த்தைகளால் நம் உறவின் ரூபிக்கானைத் தாண்டி விடுகிறோம்.  பேசிய வார்த்தைகள் மீண்டும் வாங்கிக் கொள்ள முடியாதவை. அந்த வார்த்தைகள் நம் உதட்டிலிருந்து வெளி வந்ததும் ஓர் உதவியைச் செய்யலாம். ஆறுதலைக் கொடுக்கலாம் அல்லது சீசர் ரோம சாம்ராஜ்ஜியத்திற்குள் படையுடன் சென்றதைப் போன்று மாற்ற முடியாத பாதிப்பை ஏற்படுத்தலாம். யாக்கோபு வார்த்தைகளைக் குறித்து மற்றொரு விளக்கத்தைத் தருகின்றார். ‘‘நாவும் நெருப்புத்தான், அது அநீதி நிறைந்த உலகம்; நம்முடைய அவயங்களில் நாவானது முழுச்சரீரத்தையும் கறைபடுத்தி, ஆயுள் சக்கரத்தைக் கொளுத்தி விடுகிறதாயும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறதாயும் இருக்கிறது (யாக். 3:6).

நாம் யாரிடமாகிலும் ரூபிக்கான் எல்லையைத் தாண்டி விட்டோம் என நினைப்போமேயாகில் அவர்களுடைய மன்னிப்பைப் பெற்றுக் கொள்ள வேண்டும். தேவனிடமும் மன்னிப்பைப் பெற்றுக்கொள்ள வேண்டும். (மத். 5;:23-24 ; 1 யோவான் 1:9). இதையும் விட சிறந்ததென்னவெனின் தேவனுடைய ஆவியானவரைச் சார்ந்து வாழ்தல். பவுலின் சவால்களைக் கேட்போமாகில், ‘‘அவனவனுக்கு இன்னின்னபடி உத்தரவுசொல்ல வேண்டுமென்று நீங்கள் அறியும்படிக்கு, உங்கள் வசனம் எப்பொழுதும் கிருபை பொருந்தினதாயும் உப்பால் சாரமேறினதாயுமிருப்பதாக” (கொலோ. 4:6) நம்முடைய வார்த்தைகள் தேவனைக் கனப்படுத்துவதாகவும் மற்றவர்களை உற்சாகப்படுத்தி ஊக்கப்படுத்துவதாயும் அமைய வேண்டும்.