Archives: ஏப்ரல் 2018

எங்கிருந்தாலும்

எங்களுடைய திருமண புகைப்படங்களை நான் எடுத்து பார்க்கும்போது, என் விரல்கள் என் கணவரும் நானும் மணம்முடிந்தவுடன் முதலாவது எடுத்த படத்தை தொட்டது. உண்மையில் அன்றைக்கு நான் என்னை முழுவதுமாய் அவருக்கு ஒப்படைத்தேன். அவரோடு எங்கு வேண்டுமானாலும் செல்வேன்.

நாற்பது ஆண்டுகள் கழித்தும், நன்மையோ தீமையோ, எப்படி இருந்தாலும் சரி, அன்பும் பொறுப்புணர்வும் ஒருங்கே பிணைக்கப்பட்ட உறுதியான நூலினால் என் வாழ்க்கை இறுக்கமாகப் பின்னப்பட்டிருந்தது, ஒவ்வொரு வருடமும், நான் அவரோடுகூட எங்கும் செல்லுவேன் என்கின்ற என் பிரதிஷ்டையையும் புதுப்பித்தேன்.

எரேமியா 2:2-ல், வழிதப்பிய இஸ்ரவேல் என்னும் பிரியமானவளுக்காய் தேவன் ஏங்குகிறார், “நீ என்னை பின்பற்றிவந்த உன் இளவயதின் பக்தியையும், நீ வாழ்க்கைப்பட்டபோது உனக்கிருந்த நேசத்தையும் நினைத்திருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.” அங்கே ‘பக்தி’ என்று சொல்லப்படும் எபிரேய வார்த்தை உன்னத ராஜவிசுவாசம் மற்றும் ஒப்படைப்பைக் காண்பிக்கிறது. ஆதியில் இஸ்ரவேல் தேவனிடம் இந்த மாசற்ற விசுவாசத்தை வெளிப்படுத்தினாள். ஆனாலும், நாளாக நாளாக அவள் பின்மாற்றம் அடைந்தாள்.

ஒப்படைப்பின் ஆரம்ப நிலையில் இப்படிப்பட்ட ஊக்கமும், உற்சாகமும் நம்மை பிடித்தாலும், பின்னர் ஒரு சாங்கோபாங்கமான மனநிலை அன்பின் கூர்முனையை மந்தமாக்குவதால், நமக்குள் காணப்படும் வைராக்கியம் குறைந்து விசுவாச துரோகத்திற்கு நேராக நம்மை நடத்துகிறது. நம்முடைய திருமணங்களிலே அப்படிப்பட்ட குறைவுகளுக்கு எதிராக போராடுவதன் முக்கியத்தை நாம் அறிந்திருக்கிறோம். தேவனோடு உள்ள அன்பின் உறவில் நம்முடைய ஆவல் எப்படிபட்டது? இந்த விசுவாசத்திற்குள் நாம் வந்தபோது நமக்கிருந்த பக்தி நீடிக்கிறதா?

கர்த்தர் உண்மையாய் தம்முடைய மக்கள் தம்மிடம் திரும்ப அனுமதிக்கிறார் (3:14-15). இன்றும் நாம் நம்முடைய பொருத்தனைகளைப் புதுப்பிக்கலாம்-எங்கிருந்தாலும் சரி!

மன்னிக்கும் கலை

ஒரு மதியநேரம், தகப்பனும் இரண்டு மகன்களும்: மன்னிக்கும் கலை எனும் தலைப்பில் அமைந்த கலைக்கண்காட்சி ஒன்றில் இரண்டு மணிநேரம் செலவிட்டேன். இயேசு சொன்ன கெட்ட குமாரன் (லூக். 15:11-31) உவமையே அதன் கருபொருள். மற்ற சித்திரங்களை காட்டிலும் என்னை எட்வர்டு ரியோஜாஸ் அவர்களின், “கெட்ட குமாரன்” கலைவண்ணம் அதிகமாய் கவர்ந்தது. முன்னொரு நாளில் வீட்டைவிட்டு வெளியேறிய குமாரன், கிழிந்த அழுக்குபடிந்த உடைகளுடன் தலையை தொங்கவிட்டு வீடுதிரும்பும் காட்சி.. மரித்தோரின் தேசம் அவனுக்கு பின்னால் இருக்க, அவனுடைய தகப்பன் ஏற்கனவே அவனை நோக்கி ஓடிவரும் அந்த பாதையில் மகன் அடியெடுத்து வைக்கிறான். அந்த சித்திரத்தின் கீழ், இயேசு சொன்ன வார்த்தைகள் “அவன் தூரத்தில் வரும்போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருகி…” (வச. 20).

தேவனுடைய மாறாத அன்பு என்னுடைய வாழ்கையை எப்படி மாற்றியது என்பதை சிந்தித்தேன். நான் அவரைவிட்டு விலகினாலும், அவர் என்னைக் கைவிடவில்லை. என் வருகையை எதிர்நோக்கினார், கூர்ந்து கவனித்தார், அதற்காக காத்திருந்தார். அவருடைய அன்பிற்கு நான் தகுதியற்றவன் என்றாலும், அந்த அன்பு ஒருபோதும் மாறாதது. அன்பைக் குறித்த கரிசனை நமக்கு இல்லாமல்போனாலும், அந்த அன்பு நம்மைவிட்டு நீங்காதது.

எப்படி இந்த உவமையில் வழிதவறின மகன் திரும்பிவந்தபோது தகப்பன் அரவணைத்து ஏற்றுக்கொள்கிறாரோ, அதுபோல நாம் குற்றவாளிகள் என்றாலும், நம்முடைய பரமதந்தை நம்மையும் வரவேற்கக் காத்திருக்கிறார். “என் குமாரனாகிய இவன் மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான் என்றான். அப்படியே அவர்கள் சந்தோஷப்படத் தொடங்கினார்கள்” (வச. 23-24).

இன்றும் அவரிடம் திரும்புவோரின் நிமித்தம் கர்த்தர் களிகூருகிறார்-உண்மையில் அது ஒரு கொண்டாடதக்க நிகழ்வு!

அவசரம் வேண்டாம்

“அவசரகுணத்தை எப்படியாகிலும் விட்டுவிடு” எனும் சிந்தனையாளர் டாலஸ் விலாரட் அவர்களின் கூற்றை என்னுடைய இரண்டு நண்பர்கள் எனக்கு ஞாபகப்படுத்தினபோது, அதனைக் கவனிக்கவேண்டும் என்று தீர்மானித்தேன். நான் எங்கே சுற்றுகிறேன், எங்கே என் நேரத்தையும், சக்தியையும் வீணடிக்கிறேன்? எல்லாவற்றிற்கும் மேலாக, தேவனுடைய ஆலோசனை மற்றும் உதவியை நாடாமல், எங்கே நான் அவசர அவசரமாக ஓடுகிறேன்? தொடர்ந்து வந்த வாரங்கள் மற்றும் மாதங்களில், அந்த வார்த்தைகளை நான் நினைவுகூர்ந்து தேவன் மற்றும் தேவனுடைய ஞானத்தின் பக்கமாய் என் மனதை திசைத்திருப்பினேன். என்னுடைய வழிகளை நான் சார்ந்திராமல், அவரை நம்புவதற்கு என்னை ஒப்புக்கொடுத்தேன்.

சொல்லப்போனால், அவசர அவசரமாக ஓடுவது தீர்க்கதரிசி ஏசாயாவின் “பூரண சமாதானத்துக்கு” எதிரான ஒன்றாகவே தோன்றுகிறது. “உறுதியான மனதையுடைய அவர்கள் தேவனையே நம்பியிருப்பதால், தேவன் அவர்களுக்கு இந்த பரிசைக் கொடுக்கிறார். (வச. 3). நேற்றோ, இன்றோ, நாளையோ அல்லது நித்தியகாலமோ ஆனாலும் சரி அவரே நம்பிக்கைக்கு உரியவர். ஏனெனில் வேதம் சொல்லுகிறது, “கர்த்தரே நித்திய கன்மலையாக இருக்கிறார் (வச. 4). நம்முடைய முழுமனதுடனும், அவரை நம்புவதே, அவசர வாழ்க்கைக்கான மாற்று மருந்து.

நாம் எப்படி அவசரப்படுகிறோம் அல்லது ஆத்திரப்படுகிறோம் என்பதை உணருகிறோமா? பார்க்கப்போனால், அதற்குமாறாக, நாம் ஒருவித சமாதானத்தை அனுபவிக்கலாம் அல்லாவிட்டால், நாம் இந்த இரண்டிற்கும் இடையே மாட்டிக்கொண்டுள்ளோம்.

நாம் எங்கே இருந்தாலும் சரி, நம்மை ஒருபோதும் கைவிடாதவரும் நமக்கு சமாதானத்தை தருகிறவருமாகிய கர்த்தர்மேல் நம்பிக்கையாய் உள்ள நாம் எல்லாவித அவசரத்தையும் களைந்துபோட்டிட வேண்டுகிறேன்.

பிறப்புகளின் ஆராய்ச்சி

நாம் ஒரு நபரைச் சந்திக்கும்போது, “நீங்க யாரு, எங்கிருந்து வருகிறீர்கள்?” என்றெல்லாம் கேட்பது வழக்கம். ஆனாலும், நம்மில் அநேகருக்கு, அந்தக் கேள்விக்கான விடையளிப்பது வில்லங்கமாய் இருக்கும். சிலசமயம், முழுவிவரங்களை சொல்ல விரும்பவும் மாட்டோம்.

நியாயாதிபதிகள் புத்தகத்தில், யெப்தா அந்தக் கேள்விக்கான பதிலை தர விரும்பியிருக்கமாட்டான். அவனுடைய பிறப்பில் குற்றம் கண்டுபிடித்த அவன் ஒன்றுவிட்ட சகோதரர்கள் அவனை அவனுடைய சொந்த ஊரான கீலேயாத்திலிருந்து துரத்திவிட்டார்கள். “நீ அந்நிய ஸ்திரியின் மகன்” (நியாயாதிபதிகள் 11:2) என்று அவனை பழித்தார்கள். அந்த வேதபகுதி அப்பட்டமாக, “அவனுடைய தாய் ஒரு பரஸ்திரி (வேசி) என்றே குறிப்பிடுகிறது” (வச. 1).

ஆனால் யெப்தா சுபாவத்தின்படியே ஒரு தலைவனாக இருந்தான். கீலேயாத்துக்கு விரோதமாக பகைஞர் எழும்பினபோது அவனை துரத்திவிட்டவர்கள் அவனைத் தேடிப்போய், “நீ எங்கள் சேனாதிபதியாக இருக்கவேண்டும்” (வச. 6) என்று கேட்டார்கள். அதற்கு யெப்தா, “நீங்கள் அல்லவா என்னைப் பகைத்து, என் தகப்பன் வீட்டிலிருந்து என்னைத் துரத்தினவர்கள்?” (வச. 7) என்று கேட்டதற்கு காரியங்கள் சுமூகமாய் மாறும் என்ற ஒரு உத்தரவாதம் பெற்றபின் அவர்களைத் தலைமைதாங்க ஒப்புக்கொண்டான். வேதம் நமக்கு சொல்லுகிறது “அப்பொழுது கர்த்தருடைய ஆவி யெப்தாவின் மேல் இறங்கினார்…” (வச. 29). விசுவாசத்துடன் முன்னேறிய யெப்தா பெரிய வெற்றிக்கு நேராக அவர்களை நடத்தினான். புதிய ஏற்பாட்டு விசுவாச வீரர்களின் பட்டியலில் அவனுடைய பெயரும் இடம்பெறுவதைப் பார்க்கிறோம் (எபி. 11:32).

அநேக வேளைகளில் தேவன் பொருத்தமில்லாத மக்களையே தம் பணிக்காகத் தெரிந்தெடுக்கிறார். நாம் எங்கிருந்து வந்தோம், எப்படி வந்தோம் அல்லது என்ன செய்தோம் என்பதெல்லாம் ஒரு பொருட்டாகாது. அவருடைய அன்பில் நம்பிக்கை வைத்து எப்படி செயல்படுகிறோம் என்பதே முக்கியம்.