Archives: பிப்ரவரி 2018

அவருடைய சத்தத்தைக் கேட்பது

நான் கேட்கும் திறனற்றவன். ‘’ஒரு காது செவிடு. மற்றது கேட்கும் திறனற்றது’’ என என் தந்தை சொல்வது வழக்கம். எனவே நான் கேட்கும் கருவியை இரு காதுகளிலும் பொருத்தியுள்ளேன்.

சுற்றுப்புறத்தில் அதிகமாக ஒலியிருக்கும் சூழலைத் தவிர, அநேகமான நேரங்களில் இக்கருவிகள் நன்கு வேலை செய்யும். அதிக ஒலியிருக்கும் இடங்களில் என்னுடைய கேட்கும் கருவி அந்த அறையிலுள்ள அனைத்து ஒலிகளையும் ஏற்பதால் என் எதிரேயிருந்து பேசுபவரின் பேச்சைக் கேட்க முடிவதில்லை.

இதைப் போன்றதே நம்முடைய கலாச்சாரமும். அருவருப்பான ஒலிகள் தேவனுடைய மெல்லிய சத்தத்தைக் கேட்கவிடாமல் ஆழ்த்திவிடுகின்றன.  ‘‘எங்கே வார்த்தையைக் கண்டுபிடிப்பது? எங்கே வார்த்தை மீண்டும் ஒலிக்கும்? இங்கேயில்லை. இங்கே போதிய அமைதியில்லை’’ என கவிஞர் டி.எஸ்.எலியட் கேட்கிறார்.

நல்ல வேளையாக என்னுடைய கேட்கும் கருவியில், சுற்றுப்புற ஒலியை நிறுத்திவிட்டு, என் எதிரே பேசுபவரின் ஒலியை மட்டும் கேட்கக் கூடிய ஓர் அமைப்புள்ளது. இதைப் போன்று, நம்மைச் சுற்றியும் ஒலியிருந்த போதும் நம் ஆன்மாவை அமைதிப்படுத்தி கவனித்தால், தேவனுடைய மெல்லிய அமர்ந்த சத்தத்தைக் கேட்க முடியும். (1 இரா. 19:11-12).

தேவன் அனுதினமும் நம்மோடு பேசுகிறார். நம்முடைய அமைதியற்ற ஏக்கங்களின் போது நம்மை அழைக்கிறார். அவர் நம்முடைய ஆழ்ந்த கவலையிலும், முற்றுப் பெறாத நிலைகளிலும், நம் மகிழ்ச்சியில், நிறைவைக் காண முடியாத வேளைகளிலும் நம்மை அழைக்கின்றார்.

அடிப்படையில், தேவன் அவருடைய வார்த்தையின் மூலம் பேசுகின்றார். (1 தெச. 2:13). அவருடைய வேதத்தைக் கையிலெடுத்து வாசிக்கும் போது நீயும் அவருடைய சத்தத்தைக் கேட்கலாம். நீ நினைப்பதையும் விட அதிகமாக அவர் உன்னை நேசிக்கிறார். அவர் உனக்கு என்ன சொல்ல விரும்புகிறாரோ அதை நீ கேட்கும்படி விரும்புகிறார்.

இது வியப்பைத் தருவது

இயேசு தேவனுடைய மகிமையின் பிரகாசம் (எபிரெயர் 1:3). அவரை அறிந்தவர்கள் அவருடைய மகிமையைக் கண்டார்கள் (யோவான் 1:14).

பழைய ஏற்பாட்டில், கர்த்தருடைய மகிமை வாசஸ்தலத்தை நிரப்பியது. (யாத்திராகமம் 40:34-35). இஸ்ரவேல் புத்திரர் இந்த மகிமையால் வழி நடத்தப்பட்டனர்.

முடிவு காலத்தில், நகரத்திற்கு வெளிச்சங் கொடுக்கச் சூரியனும், சந்திரனும் அதற்கு வேண்டுவதில்லை. தேவனுடைய மகிமையே அதைப் பிரகாசிப்பித்தது. ஆட்டுக்குட்டியானவரே அதற்கு விளக்கு. (வெளிப்படுத்தல் 21:23) என தேவன் வாக்களித்துள்ளார். மேலே குறிப்பிட்டுள்ள தேவனுடைய மகிமையானது மிகவும் வியப்பைத் தருவதுதாகும்.

தேவன் படைத்த இப்புவியில் நாம் வாழும் போது அவருடைய மகிமையினை நாம் அவ்வப்போது காண முடியும் என வேதாகமம் முழுமையிலும் கூறப்பட்டுள்ளது. தேவனுடைய பிரசன்னத்தை வெளிப்படுத்துவதே அவருடைய மகிமை. நாம் தேவனை காண முடியாது. ஆனால் தேவனுடைய பிரசன்னத்தை அவருடைய படைப்பாகிய இந்த பிரமாண்டமான அண்டத்திலும், நம்முடைய பெரிய இரட்சிப்பிலும், நம்முடைய வாழ்வில் அவருடைய பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னத்தாலும் உணர முடிகிறது.

இன்றும் அவருடைய வல்லமையின் ஆதாரங்களையும், அவருடைய மகிமையையும் இயற்கையின் அழகிலும், ஒரு குழுந்தையின் சிரிப்பிலும், பிறர் நம்மீது காட்டும் அன்பிலும் காணலாம். தேவன் இப்பொழுதும் இப்பூமியை அவருடைய மகிமையால் நிரப்புகிறார்.

வாழ்வை மாற்றுவது எப்படி

சில வேளைகளில் மற்றவர்களின் வலிமையான தாக்கத்தால் நம்முடைய வாழ்வு ஒரு கணத்தில் மாறி விடுகிறது. “ராக்அன்ட்ரோல்” நடன மேதை புரூஸ் ஸ்பிரிங்ஸ்டீனின் கடினமான குழந்தைப் பருவத்திலும், மன அழுத்தத்தால் தொடர்ந்து கஷ்டப்பட்ட நாட்களிலும் ஒரு இசைக் கலைஞனின் படைப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஒருவருடைய வாழ்வை மூன்றே நிமிடங்களில் சரியான பாடல் மூலம் மாற்ற முடியும் என்ற தன் பாடலின் உண்மையை தன் அனுபவத்தின் மூலம் புரிந்து கொண்டார்.

வாழ்வு மாற்றத்தைத் தரும் ஒரு பாடலைப் போன்று, சரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகளும் நம்பிக்கையையும் வாழ்வு மாற்றத்தையும் தர முடியும். நம்மில் அநேகர் தங்கள் வாழ்வில் தாக்கத்தை உண்டாக்கிய சில உரையாடல்களை பகிர்ந்து கொள்ள முடியும். நமது உலகத் கண்ணோட்டத்தை மாற்றிய ஒரு ஆசிரியரின் வார்த்தைகள், நமது நம்பிக்கையை உயிர்ப்பித்த உற்சாகமூட்டும் வார்த்தைகள், ஒரு நண்பனின் கனிவான வார்த்தைகள், கடின நேரங்களைக் கடக்க உதவியது.

இதனால்தான் நீதிமொழிகளின் புத்தகம் வார்த்தைகளைப் பொக்கிஷமாகக் காத்து, அதனை ஞானமாய் பயன்படுத்தும்படி அதிக இடங்களில் வலியுறுத்துகிறது. சொற்களை வெறுமையான பேச்சுக்களாக வேதாகமம் கருதுவதில்லை. மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும். (நீதி. 18:21) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு சில வார்த்தைகளாலேயே சிலரின் ஆவியை நொறுக்க முடியும் அல்லது ஞானமும் நம்பிக்கையும் தரும் வார்த்தைகளால் பிறருக்கு ஊட்டத்தையும் பெலத்தையும் கொடுக்க முடியும் (15:4).

நம்மில் எல்லோருக்கும் வல்லமையான இசையை உருவாக்க முடியாது. ஆனால் எல்லோரும் தேவ ஞானத்தைப் பெற்று பிறருக்கு நல் வார்த்தைகளால் உதவி செய்ய முடியும். (சங். 141:3) நன்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நம் வார்த்தைகளின் மூலம் தேவன் சிலரின் வாழ்வை மாற்ற முடியும்.

சந்தர்ப்பதினுள் அடியெடுத்து வைத்தல்

அநேகரைப் போல நானும் போதிய உடற்பயிற்சி கிடைப்பதற்குப் போராடிக் கொண்டிருந்தேன். சமீபத்தில், நான் நடப்பதற்கு என்னை ஊக்குவிப்பதற்கு எனக்கொன்று கிடைத்தது - அது நடையை எண்ணும் கருவி. இது ஒரு எளிய முறை. ஆனால் வியத்தகு வகையில் இந்த கருவி என்னை ஊக்குவிக்கின்றது. படுக்கையிலிருந்து எழும்புவதற்கு முறுமுறுப்பதை விட்டு விட்டு, ஒரு சில அடிகள் நடப்பதற்கு இது ஒரு சந்தர்ப்பம் எனக் கருத முடிந்தது. என்னுடைய குழந்தைக்கு ஒரு குவளை நீர் எடுத்துக் கொடுத்தல் போன்ற அனுதின வேலைகளைச் செய்வது என்னுடைய இலக்கினை அடைய சிறந்த வாய்ப்பாக அமைந்தது. இந்த வகையில், என்னுடைய கருவி என்னுடைய எண்ணங்களையும், நோக்கங்களையும் மாற்றி விட்டது. இப்பொழுது நான் இன்னும் அதிகம் நடக்க எப்பொழுதெல்லாம் முடியும் என எதிர்பார்த்திருக்கிறேன்.

நம்முடைய கிறிஸ்தவ வாழ்வும் சற்று இதனைப் போன்ற ஒன்றுதான் என நான் அதிசயிக்கிறேன். கொலோசெயர் 4:5ல் பவுல் கொடுக்கும் ஆலோசனைப்படி பிறரை அன்பு செய்யவும், அவர்களுக்கு உதவவும், அவர்களோடு உறவாடவும் நமக்கு அனுதினமும் வாய்ப்புகள் கொடுக்கப்படுகின்றன. ஆனால் அத்தகைய வாய்ப்புகளைக் குறித்து விழிப்புணர்வுடையவர்களாக இருக்கிறோமா? தினமும் உரையாடல்களுக்கு கவனம் செலுத்தி பிறரை ஊக்கப்படுத்துபவனாகக் காணப்படுகின்றேனா? நாம் தொடர்பு கொள்கிற நமது உறவினர், உடன் வேலை செய்வோர், மளிகை கடையிலுள்ள கணக்கர் போன்ற ஒவ்வொருவரின் வாழ்விலும் தேவன் நம்மூலம் கிரியை செய்கின்றார். ஒவ்வொரு உரையாடலும் தேவன் செயல்படுவதற்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறது. ஒரு சிற்றுண்டி சாலையில் பணிபுரியும் பணியாளரை பரிவோடு விசாரித்தல் போன்ற சிறிய காரியங்களையும் ஒரு வாய்ப்பாகக் கருதலாம்.

தேவன், நம் அனுதின வாழ்வில் தருகின்ற வாய்ப்புகளை கவனமாக பயன்படுத்த வேண்டும், ஏனெனில் அவை தேவன் செயல்படும் கணங்களாக இருக்கலாமே!