என்னுடைய மாமியார் எனது உறவினர் ஒருவரோடு கடைக்குச் சென்றபோது, வழி தவறிவிட்டார்கள் என்பதைக் கண்டுபிடித்தோம். நானும் என் மனைவியும் பதறிப்போனோம். அம்மாவிற்கு நியாபக மறதியும் குழப்பமும் காணப்பட்டது. அவர்களால் என்ன செய்கிறார்களென்பதைச் சொல்ல முடியாது. அவர்கள் அந்தப் பகுதியில் அலைந்து கொண்டிருப்பார்களா? அல்லது ஏதாவது ஒரு பஸ்ஸில் அது அவர்களை வீட்டிற்கு அழைத்துச் செல்லும் என்றெண்ணி ஏறியிருப்பார்களா? மிக மோசமான காட்சிகளின் எண்ணங்கள் எங்கள் மனதில் வட்டமிட, நாங்கள் தேவனிடம், தயவுகூர்ந்து அவர்களைக் கண்டுபிடித்துத் தாரும் என்று கதறிக் கொண்டே தேட ஆரம்பித்தோம்.

சில மணிகளுக்குப் பின்னர் பல மைல்களுக்குப்பால் ஒரு சாலையின் வழியே தடைபட்டு என் மாமியார் நின்றதைக் கண்டுபிடித்தோம். அவர்களைக் கண்டுபிடிக்கும் படியான ஆசீர்வாதத்தை தேவன் எங்களுக்குத் தந்ததை நினைத்துப் பார்த்தோம். பல மாதங்களுக்குப் பின்னர், அவர்களது எண்பதாவது வயதில், தேவனுடைய இரட்சிப்பைப் பெற்றுக் கொள்ளும்படி இயேசுவிடம் திரும்பினார்கள்.

இயேசு மனிதர்களைக் காணாமல் போன ஆடுகளுக்கு ஒப்பிட்டு இந்த எடுத்துக்காட்டைக் குறிப்பிடுகிறார். உங்களில் ஒரு மனுஷன் நூறு ஆடுகளை உடையவனாயிருந்து அவைகளில் ஒன்று காணாமல் போனால், தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் வனாந்தரத்திலே விட்டு, காணாமற்போன ஆட்டைக் கண்டுபிடிக்குமளவும் தேடித் திரியானோ? கண்டுபிடித்த பின்பு அவன் சந்தோஷத்தோடே அதைத் தன் தோள்களின் மேல் போட்டுக் கொண்டு… தன் சிநேகிதரையும் அயலகத்தாரையும் கூட வரவழைத்து காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்தேன். என்னோடே கூட சந்தோஷப்படுங்கள் என்பான்
(லூக். 15:4-6).

மேய்ப்பர்கள் தங்கள் ஆடுகளை எண்ணி எல்லாம் இருக்கின்றனவா என உறுதிப்பண்ணிக் கொள்வார்கள். அதே போலவே இயேசுவும் தன்னை ஒரு மேய்ப்பனாக பாவித்து ஆடுகளாகிய நாம் ஒவ்வொருவரையும் – இளம் வயதினரோ, முதியவர்களோ எல்லாரையும் அவர் அதிகமாய் மதிக்கிறார். நாம் நம் வாழ்வில் நம் நோக்கத்திற்காக தேடி அலைந்து கொண்டிருந்தாலும் கிறிஸ்துவிடம் திரும்புவதற்கு அது இன்னமும் பிந்தி விடவில்லை. தேவன் நம்மை அவருடைய அன்பையும் ஆசீர்வாதத்தையும் அனுபவிக்க விரும்புகிறார்.