நம்முடைய உடல் நம்முடைய உணர்வுகளான அச்சம் பயம் போன்றவற்றிற்கு எதிர் வினையைத் தரும். வயிறு கனத்தலும் இருதய படபடப்பும், மூச்சுத்திணறலும் நம்முடைய பதட்டத்தின் அடையாளங்கள். நம்முடைய உடலமைப்பு மூலம் இத்தகைய அமைதியற்ற உணர்வுகளைப் புறக்கணித்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியாது.
ஒரு நாள் இரவில் இயேசு ஐயாயிரம் பேருக்கும் மேலானோருக்கு உணவளித்த போது நடந்த அற்புதத்தைக் கண்ட சீடர்களை பயத்தின் அலைகள் சூழ்ந்து கொண்டன. தேவன் அவர்களை பெத்சாயிதா பட்டணத்திற்கு அனுப்பி விட்டு தேவனோடு தனித்து ஜெபம் பண்ணினார். அந்த இரவிலே அவர்கள் காற்றை எதிர்த்து தண்டு வலித்து தங்கள் படகை ஓட்டிக் கொண்டிருக்கையில் இயேசு தண்ணீர் மேல் நடந்து வருவதைக் கண்டனர். அவர்கள் இயேசுவை ஓர் ஆவேசம் என எண்ணி பயந்தனர் (மாற். 6:49-50).
ஆனால் இயேசு அவர்களிடம் பயப்படாதிருங்கள். திடன் கொள்ளுங்கள் என்று மேலும் உறுதியளிக்கின்றார். இயேசு அவர்களுடைய படகில் ஏறியதும் காற்று அமர்ந்தது. அவர்களும் கரையை அடைந்தனர். அவர் தந்த சமாதானத்தைப்பெற்றபோது, அவர்களுடைய அச்ச உணர்வு அமைதியடைந்தது.
பதட்டத்தினால் நாம் மூச்சற்று உணரும் போது, நாம் இயேசுவின் உறுதியான வல்லமைக்குள் இளைப்பாறுவோம். அவர் நம்மைச் சுற்றியுள்ள அலைகளை அமைதிப்படுத்துவார் அல்லது நம்மை பெலப்படுத்தி அவற்றை எதிர் நோக்கச் செய்வார். அவர் நமக்கு அவருடைய சமாதானத்தை எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை (பிலி. 4:7) கொடுக்கிறார். நம்முடைய பயங்களிலிருந்து நம்மை விடுவித்து நம்முடைய ஆவியையும், உடலையும் அமைதிப்படுத்துகின்றார்.
தேவன் நம்மை பயத்திலிருந்து விடுவிக்கிறார்.