என்னுடைய மகன் சேவியர் ஆறு வயதாயிருக்கையில் என்னுடைய சிநேகிதி தன்னுடைய தத்தித் தத்தி நடக்கும் குழந்தையைக் கூட்டிக் கொண்டு எங்கள் வீட்டிற்கு வந்திருந்தாள். சேவியர் தன்னுடைய விளையாட்டுப் பொருட்களில் சிலவற்றை அச்சிறுவனுக்குக் கொடுக்க விரும்பினான். சேவியரின் இந்த பெருந்தன்மையை நினைத்து நான் பெருமிதம் அடைந்தேன். அவன் பஞ்சடைக்கப்பட்ட மிருக பொம்மையொன்றைக் கொடுக்க முன் வந்தபோது, அப்பொம்மையை வாங்குவதற்கு என் கணவர் எத்தனை இடங்களுக்குச் சென்று அநேகக் கடைகளைத் தேடி அலைந்து வாங்கி வந்ததை நினைத்தேன். இப்படி கிடைப்பதற்கரிய அந்த பொம்மையை என் சிநேகிதியும் தாழ்மையுடன் நிராகரித்தாள். ஆனால் சேவியர் அந்த பரிசை சிறுவனின் கரங்களில் வைத்து என்னுடைய தந்தை எனக்கு நிறைய பொம்மைகளை பகிர்ந்து கொள்ளும்படி கொடுத்துள்ளார் என்றான்.

சேவியர் தன்னுடைய கொடுப்பதின் உறுதியை என்னிடமிருந்தே கற்றுக் கொண்டாலும் நான் தேவனிடமிருந்தும் மற்றவர்களிடமிருந்தும் பெற்ற வளங்களை இறுகப் பற்றிக் கொள்பவளாக இருக்கின்றேன். ஆனால் என்னுடைய பரலோகத் தந்தை எனக்குத் தேவையான யாவற்றையும் எனக்குத் தருகிறார். எனவே நான் சுலபமாக பகிர்ந்து கொள்ள முடியும்.

பழைய ஏற்பாட்டில் தேவன் தங்களுக்குத் தந்தவற்றில் ஒரு பகுதியை லேவியர்களான ஆசாரியர்களுக்குக் கொடுப்பதன் மூலம் தேவனை நம்பும்படி கட்டளையிட்டார். ஆசாரியர்கள் அவற்றைக் கொண்டு தேவையுள்ளவர்களுக்கு தர வேண்டுமெனவும் கட்டளையிட்டார். ஜனங்கள் கொடுப்பதற்கு மறுத்த போது மல்கியா தீர்க்கதரிசி அவர்கள் தேவனை வஞ்சிக்கிறார்கள் (மல்கி. 3:8-9) எனக் குறிப்பிடுகிறார். ஆனால் அவர்கள் மனப்பூர்வமாய் கொடுக்கும்போது தேவன் வாக்களித்த ஆசீர்வாதங்களையும் பாதுகாப்பையும் பெற்றுக் கொள்வார்கள் என்ற உறுதியில் நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றனர் (வச. 10-11) மற்றவர்களும் இவர்கள் பாக்கியவான்களென்பதைத் தெரிந்து கொள்வார்கள் (வச. 12).

நம்முடைய பணம் நம்முடைய திட்டங்கள். தேவன் நமக்களித்த கொடைகள் யாவற்றையும் நாம் கையாண்டாலும் தேவனுக்குக் கொடுத்தல் என்பது ஒரு வகை ஆராதனையாகும். தாராளமாகவும் தைரியமாகவும் கொடுப்பது அன்புள்ள நம் தேவன் பேரிலுள்ள நம்முடைய நம்பிக்கையைக் காட்டுகிறது – அவர் நம்முடைய தாராளமான கொடையாளர்.