பல வருடங்களாக புகழ்பெற்று நிற்கும் “புரூக்ளின் டேபர்னக்கிள்” பாடகர் குழுவின், ஆன்மாவைப் புதுப்பிக்கும் சுவிசேஷப்பாடல்கள் மூலம் ஏராளமானோர் ஆசீர்வாதங்களைப் பெற்றுள்ளனர். அவைகளில் ஒன்று சங்கீதம் 121லிருந்து உருவாக்கிய ‘என்னுடைய உதவி’ என்று தலைப்பிடப்பட்டு பாடப்பட்ட பாடல்.

சங்கீதம் 121ன் துவக்கம், சகலத்தையும் படைத்த தேவனாகிய கர்த்தர் மீது வைத்துள்ள தனிப்பட்ட நம்பிக்கையை அறிக்கை செய்தலில் ஆரம்பிக்கிறது, அவரே சங்கீதக்காரனின் உதவியின் ஆதாரமாக இருக்கின்றார் (வச. 1-2). அது எதனைக் காட்டுகிறது? ஸ்திரத்தன்மை (வச. 3), 24 மணி நேர பாதுகாப்பு (வச. 3-4), தொடர்ந்து வரும் அவருடைய பிரசன்னமும், பாதுகாப்பும் (வச. 5-6) எல்லாவிதமான தீமையிலிருந்தும் விலக்கி எப்பொழுதும் முடிவுவரை அதாவது நித்தியம் வரை (வச. 7-8) காப்பதையும் காட்டுகிறது.

தேவனுடைய ஜனங்கள் தேவனே தங்கள் உதவிக்கான ஆதாரம் என்பதை ஆண்டாண்டுகளாகக் கண்டுகொண்டனர் என்பதை வேதாகமத்திலுள்ள பாடல்கள் மூலம் தெரிந்துகொள்கிறோம். என்னுடைய ஆராதனை அனுபவத்தில் நான் என்னுடைய குரலை உயர்த்தி, சார்ல்ஸ் வெஸ்லியின் பாடல்களை, உள்ளத்தின் ஆழத்திலிருந்து பாடும் குழுவினரோடு இணைந்து பாடுவதாகும். அப்பாடல், “அப்பா நான் என் கரங்களை உம்மிடம் உயர்த்துகிறேன், வேறு உதவியை நான் அறியேன்; நீர் என்னைக் கைவிடுவீராயின் நான் எங்கே போவேன்?” மிகப் பெரிய சீர்த்திருத்தவாதி மார்டின் லுத்தர் இதனையே இவ்வாறு எழுதுகின்றார், “என் தேவன் என் உறுதியான கோட்டை, ஒருக்காலும் விலகாத அரண் வெள்ளம் பொன்ற துன்பம் வரும் போது அவரே என் உதவி.”

நீ ஒருவேளை தனிமையில் கைவிடப்பட்டவனாக, குழம்பிய சூழலில் இருக்கின்றாயா? சங்கீதம் 121ன் வார்த்தைகளை நினைத்துப்பார். இந்த வார்த்தைகள் உன் ஆத்துமாவை நம்பிக்கையாலும் தைரியத்தாலும் நிரம்பும்படி செய். நீ தனிமையாக இல்லை. எனவே உன் வாழ்வை உன் சொந்த வழியில் நடத்த முயற்சிக்காதே. மாறாக பூமியில் உனக்குள்ள முடிவில்லாத பாதுகாப்பை இயேசு கிறிஸ்துவின் வாழ்வு, சாவு, உயிர்த்தெழுதல் விண்ணேற்பு மூலம் வெளிப்படுத்திய தேவனில் களிகூரு. எடுக்க வேண்டிய அடுத்த அடியை அவருடைய உதவியால் எடுத்துவை.