Archives: டிசம்பர் 2017

மேசெல்-லை இயேசு நேசிக்கிறார்

என்னுடைய சகோதரி மேசெல் சிறியவளாக இருந்தபோது யாவருமறிந்த ஒரு பாடல் “இயேசு என்னை நேசிக்கிறார் இது எனக்குத் தெரியும், ஏனெனில் வேதாகமம் மேசெல்லை நேசிக்கிறார் என்று சொல்லுகிறது” என்று தன் சொந்த வழியில் பாடும் போது அது எனக்கு அளவு கடந்த எரிச்சலைத் தந்தது! அவளுடைய புத்திசாலியான மூத்த சகோதரி இப்பாடலை ‘வேதாகமம் என்னையும் அவ்வாறுதான் நேசிக்கிறார்” என்று பாடுவாள். ஆனால், இவள் தன் சொந்த வழியில் பாடுவதில் உறுதியாக இருந்தாள்.

ஆனால், இப்பொழுது என் சகோதரி சரியாகத்தான் பாடியிருக்கிறாள் எனத் தோன்றுகிறது. இயேசு நம்மை நேசிக்கிறார் என்று வேதாகமம் சொல்லும் பொழுது, மே-செல்லுக்கு மட்டுமின்றி நம் அனைவரையும் நேசிக்கிறார் என்று சொல்லுகிறது. மீண்டும் மீண்டும் நாம் இந்த உண்மையை வேதத்தில் வாசிக்கிறோம். உதாரணமாக, அப்போஸ்தலனாகிய யோவான் ‘இயேசு மிகவும் நேசித்த சீஷன்’ (யோவா. 21:7,20). தேவன் நம்மீது வைத்துள்ள அன்பை  மிகச் சிறந்த முறையில் வேத வசனம் யோவான் 3:16ல் “தேவன் தம்முடைய ஒரே பேரான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படி அவரைத் தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்” எனக் கூறியுள்ளார்.

தேவனுடைய அன்பைக் குறித்து மீண்டும் யோவான் வலியுறுத்தி 1 யோவான் 4:10ல் நாம் தேவனிடத்தில் அன்பு கூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவர்த்தி செய்கிற கிருபாதார பலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது என்று கூறுகிறார். இயேசு தன்னை நேசிக்கிறாறென்று யோவான் கூறியது போல இயேசு நம்மையும் நேசிக்கிறார் என உறுதியாகக் கூறமுடியும். வேதாகமம் நம்மிடம் அதையே கூறுகிறது.

மேக்பேர்சன் கார்டன்ஸ்-ல் கிறிஸ்துமஸ்

(மேக்பேர்சன் கார்டன்ஸ், பகுதி 72ல்) எனது வீட்டிற்கு அருகாமையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சுமார் 230 குடும்பங்களும், தனி நபர்களும், வாழ்ந்து வருகிறார்கள். ஒவ்வொருவருக்கும் தங்கள் வாழ்வின் சொந்த கதை உண்டு. 10வது தளத்தில் ஒரு மூதாட்டி வசித்து வந்தார், அவரின் பிள்ளைகள் வளர்ந்து திருமணமாகி தனித் தனியே சென்றுவிட்டனர், அவர் தனிமையில் வாழ்ந்து வந்தார். அவர் வீட்டிற்கு சில வீடுகள் தள்ளி ஒரு இளம் தம்பதியினர்,   இரு குழந்தைகள்,  ஒரு ஆண் ஒரு பெண். சில தளங்களுக்குக் கீழ் இராணுவத்தில் பணிபுரியும் ஓர் வாலிபன் இருந்தான். அவன் முன்பு ஆலயத்திற்குச் வந்திருந்தான். ஒரு வேளை மீண்டும் அவன் கிறிஸ்துமஸ் அன்று ஆலயத்திற்கு வரலாம். இவர்களை நான் முந்திய கிறிஸ்துமஸ் அன்று எங்கள் ஆலயத்திலிருந்து கிறிஸ்துமஸ் பாடல்கள் பாடிக் கொண்டு அண்டை வீட்டாருக்கு கிறிஸ்துமஸ் மகிழ்ச்சியை கூற சென்றிருந்தபோது இவர்களைச் சந்தித்தேன்.

முதல் கிறிஸ்துமஸைப் போல், ஒவ்வொரு கிறிஸ்துமஸிலும் அநேகருக்கு, தேவன் இவ்வுலகில் இயேசு என்ற பாலகனாக வந்தார் (லூக். 1:76,2:21) என்பதையும், இந்த நிகழ்வின் முக்கியத்துவம் என்ன என்பதையும் அறியாமலிருக்கிறார்கள். அது எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தி (2:10). ஆம் எல்லா ஜனத்துக்கும்! நம்முடைய தேசம், கலாச்சாரம், பாலினம் அல்லது பொருளாதார நிலை ஆகியவற்றைக் கடந்து நமக்கு முழுபாவ மன்னிப்பை கொடுக்க இயேசு தன்னை பலியாகக் கொடுக்க வந்தார். எனவே நாம் தேவனோடு ஒப்புரவாகி அவர் தரும் அன்பு, சந்தோஷம் சமாதானம் மற்றும் நம்பிக்கையை பெற்றுக் கொள்ளமுடியும். அடுத்த வீட்டிலுள்ள பெண்மணி துவக்கி, நம்மோடு பணிபுரிந்து, நம்முடன் உணவருந்தும் அனைத்து மக்களும் இந்த ஆச்சரியமான செய்தியைக் கேட்க வேண்டும்!

முதல் கிறிஸ்மஸ் அன்று தேவ தூதர் இந்த மகிழ்ச்சியான செய்தியைக் கொண்டு வந்தனர், அனால், இன்று தேவன் நம் மூலம் இச்செய்தியை மற்றவர்களுக்கு எடுத்துச் செல்ல விரும்புகிறார்.

காத்திருத்தல்

“கிறிஸ்துமஸ் வருவதற்கு இன்னும் எவ்வளவு நாட்கள் இருக்கிறது?” இக்கேள்வியை என் பிள்ளைகள் குழந்தைகளாயிருந்த போது அடிக்கடி கேட்டுக் கொண்டே இருப்பார்கள். நாங்கள் வருகையின் நாள் காட்டி ஒன்றின் மூலம் கிறிஸ்துமஸ் நாளை கணக்கிட்டுக் கொண்டிருந்தாலும், காத்திருத்தல் அவர்களுக்கு வேதனையாக இருந்தது.

ஒரு குழந்தையின் கஷ்டத்தோடு கூடிய காத்திருத்தலை நாம் சுலபமாக புரிந்து கொள்ள முடிந்தாலும், இந்த சவால் குழந்தைகளுக்குமட்டுமென குறைவாக மதிப்பிட முடியாது, அது அனைத்து தேவ ஜனங்களுக்குரியது. ஏனெனில் “இஸ்ரவேலை ஆளப்போகிறவர் பெத்லகேமிலிருந்து புறப்பட்டு வருவார் (மீகா 5:2). அவர் நின்று கொண்டு கர்த்தருடைய பலத்தோடு தம் மந்தையை மேய்ப்பார் (வச. 4). என்ற மீகா தீர்க்கனின் வாக்கினைப் பெற்ற ஜனங்கள், இதன் நிறைவேறுதலுக்கு சுமார் 700 ஆண்டுகள் காத்திருந்த பின்னர் இயேசு பெத்லகேமில் பிறந்தபோது அது நிறைவேறிற்று (மத். 2:1). ஆனால், இன்னும் சில தீர்க்க தரிசனங்கள் நிறைவேற வேண்டியுள்ளது. இயேசு திரும்ப வருவார் என்ற நம்பிக்கையோடு நாம் காத்திருக்கின்றோம். “ஆகையால் தேவ ஜனங்கள் அனைவரும் நிலைத்திருப்பார்கள். அவர் இனிப் பூமியின் எல்லைகள் பரியந்தமும் மகிமைப்படுவார்” (மீகா 5:4). நம்முடைய நீண்ட காத்திருத்தல் முடிவடையும் போது நாமும் மிகவும் மகிழ்ந்திருப்போம்.

நம்மில் அநேகருக்கு காத்திருத்தல் எளிதானதல்ல. ஆனால், இதோ உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன் (மத். 28:20) என்ற வாக்கை கனப்படுத்துவார் என்று நம்பி காத்திருப்போம். இயேசு கிறிஸ்து பெத்லேகமில் பிறந்த பொழுதே நம்மை வாழ்வின் பரிபூரணத்திற்குள்ளும் (யோவா. 10:10) குற்றம் சாட்டப்படாத வாழ்விற்குள்ளும் வழி நடத்துகின்றார். அவருடைய பிரசன்னம் நம்மோடு இருப்பதை அனுபவித்துக் கொண்டே அவருடைய வருகைக்கு நாம் ஆவலுடன் காத்திருக்கின்றோம்.

பன்றி இறைச்சியும் முட்டைகளும்

கற்பனைக் கதை ஒன்றில் கோழியும், பன்றியும் ஆகிய இரு விலங்குகள் சேர்ந்து உணவகம் ஒன்று துவங்குவது குறித்து பேசிக் கொண்டன. உணவு வகைகளைக் குறித்து அவை திட்ட மிட்ட போது, கோழி, பன்றி இறைச்சியும், முட்டையும் பரிமாறலாம் எனக் கூறியது. பன்றி இதனை மறுத்து “நன்றி இதனை ஏற்றுக் கொள்ள முடியாது. நான் முழுமையாக அர்பணிக்கப்பட வேண்டும்.” ஆனால், நீ இதில் கலந்து கொள்ள மாத்திரம் செய்யலாம் என்று கூறியது.

அந்த பன்றி தன்னை தட்டில் பரிமாறப்படுவதற்கு கவலைப்படவில்லை, தான் முழுவதும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளேன் என்று கூறியது. இயேசுவை முழுமனதோடு பின்பற்றவேண்டும் என்ற பாடத்தை எனக்குக் கற்று கொடுத்தது.

யூதாவின் ராஜாவாகிய ஆசா தன் ராஜ்ஜியத்தை காத்துக் கொள்வதற்காக தன் அரண்மனை மற்றும் கர்த்தருடைய ஆலயத்தின் பொக்கிஷங்களிலிருந்து வெள்ளியையும், பொன்னையும் எடுத்து சீரியாவின் ராஜா பெனாதாத்திடம் அனுப்பி இஸ்ரவேலின் ராஜாக்களுக்கும், அவனுக்கும் இருக்கும் உடன்படிக்கையை முறித்துப் போடும்படி அனுப்பினான். பெனாதாத் இதற்கு சம்மதித்து, இருவரும் இஸ்ரவேலை எதிர்த்தனர் (2 நாளா. 16:2).

ஆனால், கர்த்தருடைய தீர்க்கதரிசி அனானி ஆசாவிடத்தில் வந்து, கர்த்தர் ஏராளமான பகைஞர்களின் கைக்கு உம்மை விடுவித்திருந்தும் கர்த்தரைச் சார்ந்து கொள்ளாமல் சீரியாவின் ராஜாவைச் சார்ந்து கொண்டு மதிகேடாய் நடந்து கொண்டீர் என்றான். “தம்மைப் பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்கு தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக் கொண்டிருக்கிறது” (வச. 9).

நாம் நமது போராட்டங்களையும் சவால்களையும் சந்திக்கும் போது கர்த்தரே நமக்கு சிறந்த துணை என்பதை மறந்துவிடக் கூடாது. நாம் முழுமனதோடு அவருக்கு பணிசெய்ய அர்ப்பணிக்கும் போது அவர் நம்மை பெலப்படுத்துகிறார்.