கற்பனைக் கதை ஒன்றில் கோழியும், பன்றியும் ஆகிய இரு விலங்குகள் சேர்ந்து உணவகம் ஒன்று துவங்குவது குறித்து பேசிக் கொண்டன. உணவு வகைகளைக் குறித்து அவை திட்ட மிட்ட போது, கோழி, பன்றி இறைச்சியும், முட்டையும் பரிமாறலாம் எனக் கூறியது. பன்றி இதனை மறுத்து “நன்றி இதனை ஏற்றுக் கொள்ள முடியாது. நான் முழுமையாக அர்பணிக்கப்பட வேண்டும்.” ஆனால், நீ இதில் கலந்து கொள்ள மாத்திரம் செய்யலாம் என்று கூறியது.

அந்த பன்றி தன்னை தட்டில் பரிமாறப்படுவதற்கு கவலைப்படவில்லை, தான் முழுவதும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளேன் என்று கூறியது. இயேசுவை முழுமனதோடு பின்பற்றவேண்டும் என்ற பாடத்தை எனக்குக் கற்று கொடுத்தது.

யூதாவின் ராஜாவாகிய ஆசா தன் ராஜ்ஜியத்தை காத்துக் கொள்வதற்காக தன் அரண்மனை மற்றும் கர்த்தருடைய ஆலயத்தின் பொக்கிஷங்களிலிருந்து வெள்ளியையும், பொன்னையும் எடுத்து சீரியாவின் ராஜா பெனாதாத்திடம் அனுப்பி இஸ்ரவேலின் ராஜாக்களுக்கும், அவனுக்கும் இருக்கும் உடன்படிக்கையை முறித்துப் போடும்படி அனுப்பினான். பெனாதாத் இதற்கு சம்மதித்து, இருவரும் இஸ்ரவேலை எதிர்த்தனர் (2 நாளா. 16:2).

ஆனால், கர்த்தருடைய தீர்க்கதரிசி அனானி ஆசாவிடத்தில் வந்து, கர்த்தர் ஏராளமான பகைஞர்களின் கைக்கு உம்மை விடுவித்திருந்தும் கர்த்தரைச் சார்ந்து கொள்ளாமல் சீரியாவின் ராஜாவைச் சார்ந்து கொண்டு மதிகேடாய் நடந்து கொண்டீர் என்றான். “தம்மைப் பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்கு தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக் கொண்டிருக்கிறது” (வச. 9).

நாம் நமது போராட்டங்களையும் சவால்களையும் சந்திக்கும் போது கர்த்தரே நமக்கு சிறந்த துணை என்பதை மறந்துவிடக் கூடாது. நாம் முழுமனதோடு அவருக்கு பணிசெய்ய அர்ப்பணிக்கும் போது அவர் நம்மை பெலப்படுத்துகிறார்.