(மேக்பேர்சன் கார்டன்ஸ், பகுதி 72ல்) எனது வீட்டிற்கு அருகாமையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சுமார் 230 குடும்பங்களும், தனி நபர்களும், வாழ்ந்து வருகிறார்கள். ஒவ்வொருவருக்கும் தங்கள் வாழ்வின் சொந்த கதை உண்டு. 10வது தளத்தில் ஒரு மூதாட்டி வசித்து வந்தார், அவரின் பிள்ளைகள் வளர்ந்து திருமணமாகி தனித் தனியே சென்றுவிட்டனர், அவர் தனிமையில் வாழ்ந்து வந்தார். அவர் வீட்டிற்கு சில வீடுகள் தள்ளி ஒரு இளம் தம்பதியினர்,   இரு குழந்தைகள்,  ஒரு ஆண் ஒரு பெண். சில தளங்களுக்குக் கீழ் இராணுவத்தில் பணிபுரியும் ஓர் வாலிபன் இருந்தான். அவன் முன்பு ஆலயத்திற்குச் வந்திருந்தான். ஒரு வேளை மீண்டும் அவன் கிறிஸ்துமஸ் அன்று ஆலயத்திற்கு வரலாம். இவர்களை நான் முந்திய கிறிஸ்துமஸ் அன்று எங்கள் ஆலயத்திலிருந்து கிறிஸ்துமஸ் பாடல்கள் பாடிக் கொண்டு அண்டை வீட்டாருக்கு கிறிஸ்துமஸ் மகிழ்ச்சியை கூற சென்றிருந்தபோது இவர்களைச் சந்தித்தேன்.

முதல் கிறிஸ்துமஸைப் போல், ஒவ்வொரு கிறிஸ்துமஸிலும் அநேகருக்கு, தேவன் இவ்வுலகில் இயேசு என்ற பாலகனாக வந்தார் (லூக். 1:76,2:21) என்பதையும், இந்த நிகழ்வின் முக்கியத்துவம் என்ன என்பதையும் அறியாமலிருக்கிறார்கள். அது எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தி (2:10). ஆம் எல்லா ஜனத்துக்கும்! நம்முடைய தேசம், கலாச்சாரம், பாலினம் அல்லது பொருளாதார நிலை ஆகியவற்றைக் கடந்து நமக்கு முழுபாவ மன்னிப்பை கொடுக்க இயேசு தன்னை பலியாகக் கொடுக்க வந்தார். எனவே நாம் தேவனோடு ஒப்புரவாகி அவர் தரும் அன்பு, சந்தோஷம் சமாதானம் மற்றும் நம்பிக்கையை பெற்றுக் கொள்ளமுடியும். அடுத்த வீட்டிலுள்ள பெண்மணி துவக்கி, நம்மோடு பணிபுரிந்து, நம்முடன் உணவருந்தும் அனைத்து மக்களும் இந்த ஆச்சரியமான செய்தியைக் கேட்க வேண்டும்!

முதல் கிறிஸ்மஸ் அன்று தேவ தூதர் இந்த மகிழ்ச்சியான செய்தியைக் கொண்டு வந்தனர், அனால், இன்று தேவன் நம் மூலம் இச்செய்தியை மற்றவர்களுக்கு எடுத்துச் செல்ல விரும்புகிறார்.