நான் இயேசுவில் விசுவாசியான புதிதில், என் ஆவிக்குரிய வழிகாட்டி, நன்றி சொல்ல வேண்டியவற்றை எழுத ஒரு நாட்குறிப்பைப் பயன்படுத்தச் சொன்னார். அது ஒரு சிறிய புத்தகம். நான் எங்கு சென்றாலும் அதை எடுத்துச் செல்லுவேன். சில வேளைகளில் நன்றி சொல்ல வேண்டியதை உடனேயே எழுதிவிடுவேன் அல்லது வாரக்கடைசியில் நினைவுபடுத்தி எழுதுவேன்.
துதிக்க வேண்டியவைகளை எழுதுவது ஓர் நல்ல வழக்கம். இதை நான் என் வாழ்க்கையில் மறுபடியும் செய்ய நினைக்கிறேன். அது தேவ பிரசன்னத்தையும், அவர் கரிசனையையும், அவர் அருளுபவைகளையும் எனக்கு நினைவுபடுத்தும்.
சங்கீதங்களிலே, மிகச்சிறியதான 117ம் சங்கீதத்தினை ஆக்கியோன், “ அவர் நம்மேல் வைத்த கிருபை பெரிதானதால்” (வச. 2) எல்லாரையும் கர்த்தரைத் துதிக்கச் சொல்லுகிறார்.
இன்று, இந்த வாரம், இந்த மாதம், இந்த வருடம் தேவன் தம்முடைய அன்பை எப்படிக் காட்டினார் என்பதை நினையுங்கள். மகத்தானவைகளை மட்டும் நினையாமல், அன்றாட வாழ்க்கையில் செய்த சாதாரண காரியங்களையும் நினைத்துப் பாருங்கள். அதன் பின் உங்கள் குடும்பத்திற்கு, சபைக்கு, மற்றவர்களுக்கு அவர் காண்பித்த அன்பை எண்ணிப்பாருங்கள். நம்மெல்லாருக்கும் அவர் பாராட்டிய அன்பினால் நம் மனம் நிறைந்திருப்பதாக.
சங்கீதக்காரன் “கர்த்தரின் உண்மை என்றென்றைக்கும் உள்ளது” (வச. 2) என்றும் சொல்லுகிறான். சற்று மாற்றிக் கூறினால், அவர் என்றென்றைக்கும் நம்மேல் அன்பு கூறுகிறார் என்பதேயாகும்! ஆகவே, வரும் நாட்களில் நன்றி சொல்ல அநேக காரியங்கள் நமக்கிருக்கும். அவருக்குப் பிரியமான அன்பு பிள்ளைகளாகிய நாம் தேவனைத், துதிப்பதும் நன்றி சொல்வதும்.
சாதாரண காரியங்களுக்கும், அசாதாரணமான காரியங்களுக்கும் நன்றி
சொல்ல மறவாதீர்கள்.